Head Ads

01.01.2024 TNPSC Current Affairs  

வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா முதல்வர்கள் இணைந்து அதன் நினைவு சின்னத்தை சென்னையில் வெளியிட்டனர். 

வைக்கம் சத்தியாக்கிரகம்

   தீண்டாமைக்கு எதிராக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் நடைபெற்ற போராட்டம் தான் வைக்கம் சத்தியாக்கிரகம் அல்லது வைக்கம் போராட்டம். இந்த போராட்டம் நடைபெற்ற ஆண்டு 1924 -1932.

    வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்த கூடாது என்ற தடையை நீக்க இந்த போராட்டம் நடைபெற்றது.

*********************************

மத்திய அரசானது நினா சிங்கை மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் ( CISF - Central Industrial Security Force) தலைமை இயக்குனராக நியமித்துள்ளது. இந்த உயர்நிலை படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்தியாவில் உள்ள தொழில் நிலையங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட படை தான் இந்த CISF. 1983 ஜூன் 15 ஆம் ஆண்டு இந்திய அரசின் காவல் ஆயுதபடைகளில் ஒன்றாக உருவாக்கப்பட்ட துணை இராணுவப் படையாகும்.

***********************************

தேசிய சட்ட சேவைகளின் ஆணையத்தின் (NALSA - National Legal Service Authority) நிர்வாக தலைவராக உச்சமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்திய குடியரசு தலைவர் பரிந்துரைத்துள்ளார்.


   நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளை விரைவாக தீர்க்க அதாலத்துகளை ஏற்பாடு செய்யவும் இந்திய உச்ச நீதிமன்றம் 1995 ஆம் ஆண்டு முதன் முதலில் தேசிய சட்ட சேவைகள் தினத்தை உருவாக்கியது.

*************************************

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 99 வது சர்வதேச தான்சென் சமரோ நிகழ்வில் சுமார் 1,300 தபேலா கலைஞர்கள் "மிகப்பெரிய தபேலா குழுமத்தில் பங்கேற்றனர். இதில் திரட்டப்பட்ட சாதனைக்காக இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.

TNPSC

இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர்கள் தான் இந்த தான்சேன். இவர் அக்பரின் அரசவை கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமின்றி சிறந்த ரபாப் வாத்திய கலைஞரும் ஆவார். இவர் பல ராகங்களை கண்டுபிடித்துடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். இவருடைய காலம் (1506 - 1589) ஆகும்.

************************************

விளையாட்டு துறை தொழிலதிபர் விடா டானி சர்வதேச மேசை பந்தாட்டக் கூட்டமைப்பின் (ITTF - International Table Tennis Federation) அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக சேர்க்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Vita Dani

விளையாட்டு ஆர்வமும் ஆற்றலும் கொண்ட விடா டானி, விளையாட்டு மற்றும் பரோபகார நடவடிக்கைகள் மூலம் உலகில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த ஆர்வமுள்ள இன்றைய புதிய யுக பெண்ணை ஒத்திருக்கிறார்.

***********************************

கேரள விவசாய பல்கலைக்கழத்தில் (KAU - Kerala Agriculture University) பணிபுரியும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி சபையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் P.இந்திரா தேவிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண் பொருளாதார சமூகத்தின் (ISAE - The Indian Society of Agriculture Engineers) அங்கத்தினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

************************************

லத்தீன் அமெரிக்கா, கரீபியன் வர்த்தக சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநரான திரு. L.P. ஹேமந்த் K. ஶ்ரீநிவாசுலு என்பவருக்கு மதிப்புமிக்க '2023' ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

************************************

அயோத்தி இரயில் சந்திப்புக்கு அயோத்தி தாம் ( Ayodhya Dham ) எனப் புதிய பெயர் வழங்கப்பட்டு உள்ளது.

Ayodhya Dham

***********************************

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முன்னாள் தலைவரும், யூரோ நாணயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை அளித்த நபருமான ஜாகுவெஸ் டெளோர்ஸ் ( Jacuques Delors) சமீபத்தில் காலமானார். அவருடைய காலம் ( 20 July 1995 to 27 Dec 2023) இவர் ஒரு பிராஞ்ச் அரசியல்வாதியாவார்.

***********************************

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய்க்கு இந்திய அரசு முதன் முறையாக ரூபாய் மதிப்பில் பணம் செலுத்தியுள்ளது. இது இந்திய நாணயத்தின் உலகாளவியப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நாட்டின் முன்னெடுப்பில் ஒரு குறிப்பிடத்தக்கப் படி நிலையைக் குறிக்கிறது.

************************************


Post a Comment

Previous Post Next Post
close