Nalavariyam Online Registration

Nalavariyam Online Registration

Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

Introduction : 

தமிழ்நாடுஅமைப்புச்சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் அட்டை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி என்பதை பற்றி இப்போது பாப்போம். 


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்
  

STEP : 1      

முதல்ல Google Search Box ல் tnuwwb என்று டைப் செய்து Search கொடுங்க முதல்ல வர Option கிளிக் பண்ணி open பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

 STEP : 2

இந்த பக்கத்தில் உள்ள புதிய விண்ணப்ப பதிவு / New Registration என்னும் Option கிளிக் பண்ணி Open பண்ணிக்கங்க. அடுத்த   பக்கம் தோன்றும்.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்
 

STEP : 3

இந்த பக்கத்தில் கீழ Scroll பண்ணிகங்ன்னா  தமிழ்நாடு அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவமும் கொடுத்திருப்பார்கள் அதை  முதலில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 தேவையான ஆவணங்கள்:

1. பணிச்சான்று
2. அடையாள அட்டை சான்றிதழ்
3. குடும்ப அட்டை
5. வாரிசாக யாரை நியமனம் செய்கிறீர்களோ அவருடைய ஆவணம்
6.ஜாதி சான்றிதழ் 
7.வங்கி கணக்கு புத்தகம்
8.குடும்ப உறுப்பினர்கள் அணைவருடைய ஆதார் அட்டை 
9.விண்ணப்பதாரரின் புகைப்படம்
10.விண்ணப்பதாரரின் இடது கை பெருவிரல் ரேகை

 நலவாரியத்தில் பதிவு செய்வோர் முதலில் தங்களுடைய மொபைல் நம்பர் டைப் செய்து உள்நுழைக (Login) என்னும் Option கிளிக் பண்ணிக்கங்க.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 4

 இந்த பக்கத்தில் உள்ள  OTP யைப் பெற என்னும் Option கிளிக் பண்ணிக்கங்க.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்


STEP : 5       

அடுத்து உங்களுடைய மொபைல் நம்பர்க்கு வந்த OTP ஐ Enter பண்ண OTP என்னும் இடத்தில் டைப் பண்ணிட்டு சமர்ப்பிக்க என்னும் Option கிளிக் பண்ணுங்க. அடுத்த பக்கம் தோன்றும்.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 6

இந்த பக்கத்தில் நீங்கள் ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் இணைத்துள்ளீர்களா அல்லது இணைக்கவில்லையா என்று கேட்டு இருக்காங்க. நீங்கள் இன்னும் ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் இணைக்கவில்லை என்றால் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய வீடியோவை காண கீழே உள்ள லிங்கை Click செய்யுங்கள்.

                             👉👉👇👇👇👇👇
 ஆதார் கார்டுக்கு கொடுத்த மொபைல் நம்பர் கண்டுபிடிப்பது எப்படி? ஆதார் கார்டில் மொபைல் நம்பர் இணைப்பது எப்படி?

STEP : 7

நீங்கள் ஆதார் கார்டில் மொபைல் நம்பர் இணைத்திருந்தால் கைபேசி எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்னும் Option கிளிக் பண்ணிக்கங்க


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்
 

STEP : 8

உங்களுடைய ஆதார் எண் டைப் பண்ணிட்டு Verify Aadhaar என்னும் Option கிளிக் பண்ணிங்கன்னா நீங்க ஆதாருடன் லிங்க் பண்ணியுள்ள மொபைல் நம்பருக்கு OTP வரும் அந்த OTP ஐ டைப் பண்ணிட்டு Verify OTP என்னும் Option கிளிக் பண்ணிங்கன்னா ஆன்லைன் விண்ணப்பபடிவம் தோன்றும்..


        
Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்


STEP : 8


 இந்த பக்கத்தில் நலவாரியம் என்னும் இடத்தில் கிளிக் பண்ணிகன்னா  

1) TN Construction WWB ( கட்டுமான தொழில் செய்பவர்)

2) TN Manual Workers Social Security and WB ( சொந்தமாக தொழில் செய்பவர். மற்றும்  தொழில் செய்பவர்களிடம் பணி புரிபவர்)  என்று அர்த்தம் இரண்டில் நீங்கள் செய்யும் தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.



Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்


STEP : 9

    

அடுத்து நீங்கள் TN Construction WWB என்பதை தேர்வு செய்திருந்தால் வாரியத்தின் பெயர் என்னும் இடத்தில் கட்டுமான தொழில் மட்டும் தோன்றும். அதுவே நீங்கள் TN Manual Workers Social Security and WB என்பதை தேர்வு செய்திருந்தால் வாரியத்தின் பெயர் என்னும் இடத்தில் மேலே படத்தில் காண்பது போல் பல்வேறு தொழில்கள் தோன்றும் அதில் நீங்கள்  எந்த  தொழில் செய்கிறீர்களோ அதை தேர்வு செய்யுங்கள்.



Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 10

 அடுத்து Name of the Worker என்னுமிடத்தில் உங்களுடைய பெயரை டைப் செய்யுங்கள். அடுத்து தந்தை / கணவர் உறவு முறை என்னுமிடத்தில் உங்களுடைய அப்பா பெயரையும் திருமணமான பெண்களாக இருந்தால் கணவர் பெயரையும் தேர்வு செய்து அதற்கு கீழே உள்ள கட்டத்தில் அவருடைய பெயரை டைப் செய்யுங்கள்.


அடுத்து பாலினம் என்னுமிடத்தில் நீங்கள் ஆணா / பெண்ணா என்பதை தேர்வு செய்யுங்கள். பிறந்த தேதி என்னுமிடத்தில் உங்களுடைய பிறந்த தேதியை தேர்வு செய்யுங்கள்.



Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 11

 

அடுத்து உங்களுடைய வயது சான்று ஆவணமாக மேலே உள்ள படத்தில் உள்ள ஏதேனும் ஒரு சான்றை தேர்வு செய்து அந்த ஆவணத்தைஅருகிலுள்ள கட்டத்தில் ஆவணம் என்னுமிடத்தில் Choose File என்பதை தேர்வு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.




Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 12

அடுத்து சாதி என்னுமிடத்தில் உங்களுடைய சாதி எதுவோ அதை தேர்வு செய்து அருகிலுள்ள கட்டத்தில் சாதி சான்றிதழ் ஆவணம் என்பதற்கு கீழே உள்ள Choose File என்பதை தேர்வு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.


அடுத்து மதம் என்னுமிடத்தில் கிளிக் செய்து உங்களுடைய மதத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்து திருமண நிலை என்னுமிடத்தில் கிளிக் செய்து உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா அல்லது ஆகவில்லையா அல்லது விவாகரத்து ஆனவரா அல்லது விதவை துணையை இழந்தவரா என்பதில் நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்.




Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 13

அடுத்து உங்களிடம் குடும்ப அட்டை இருந்தால் குடும்ப அட்டை எண் என்னுமிடத்தில் குடும்ப அட்டை எண் டைப் பண்ணிக்கங்க மேலும் குடும்ப அட்டை பதிவேற்றம் என்னுமிடத்தில் குடும்ப அட்டையை பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள். குடும்ப அட்டை இல்லாதவர்கள் குடும்ப அட்டைக்கு விண்ணபித்திருந்தால் அதனுடைய கணினி வழி சான்றிதழை பதிவேற்றம் செய்யுங்கள். அடுத்து Next என்பதை கிளிக் செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 14       

அடுத்து இந்த பக்கத்தில் உங்களுடைய முகவரியை கொடுக்க வேண்டும் அதற்கு உங்களுடைய வீட்டின் கதவு எண், தெரு பெயர், ஊர் பெயர், மாநிலம், மாவட்டம், தலுக்கா, கிராமம் அல்லது நகரம், அஞ்சல் குறியீடு போன்றவைகளை அந்தந்த கட்டத்தில் கொடுத்துக் கொள்ளுங்கள்.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்


STEP : 15

அடுத்து நீங்கள் மேலே கொடுத்த முகவரியில் தான் தற்போதும் உள்ளீர்கள் என்றால் Same as Permanent Address என்பதற்கு அருகிலுள்ள கட்டத்தை கிளிக் செய்யுங்கள் அல்லது நீங்கள் தற்போது இருக்கும் முகவரி வேறு என்றால் அந்த முகவரியை கீழே டைப் செய்யுங்கள். அடுத்து Next என்பதை கிளிக் செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.



Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 16   

அடுத்து இந்த பக்கத்தில் உங்களுடைய வேலை விவரங்களை கொடுக்க வேண்டும். அதற்கு சுயமாக தொழில் செய்பவர் என்றால் Self Employed என்பதை தேர்வு செய்யுங்கள். அல்லது நீங்கள் தொழில் செய்பவரிடம் வேலை செய்கிறீர்கள் என்றால் Employed என்பதை தேர்வு செய்யுங்கள். 


அடுத்து நீங்கள் சுயமாக தொழில் செய்பவர் என்றால் எத்தனை ஆண்டுகள் சுயமாக தொழில் செய்கிறீர்கள் என்பதை கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்து வேலையின் இயல்பு என்னுமிடத்தில் எந்த தொழில் எனபதை தேர்வு செய்யுங்கள். அல்லது நீங்கள் தொழில் செய்பவரிடம் தொழில் செய்கிறீர்கள் என்றால் Employed என்பதை தேர்வு செய்து 



Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 17    


நீங்கள் வேலை பார்க்கும் முதாலாளியின் பெயர், நிறுவனத்தின் பெயர் அல்லது ஒப்பந்தகரரின் பெயர், வேலை பார்க்கும் இடத்தின் முகவரியை டைப் செய்யுங்கள். அடுத்து எத்தனை ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் வேலை பார்கிறீர்கள் . அந்த நிறுவனத்தில் என்னவாக வேலை செய்கிறீர்கள் என்பதை கடைசி இரண்டு கட்டங்களில் டைப் செய்யுங்கள். அடுத்து  Next என்பதை கிளிக் செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 18      


இந்த பக்கத்தில் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும். அதற்கு எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ அந்த வங்கியின் பெயர், கிளையின் பெயர், கணக்கு எண், கணக்கு எண்ணை சரிபார்க்க மீண்டும் கணக்கு எண்ணை டைப் செய்யுங்கள். அடுத்து IFSC குறியீடு, MICR குறியீடுகளை உங்கள் கணக்கு புத்தகத்தை பார்த்து டைப் செய்யுங்கள். அடுத்து உங்களுடைய கணக்கு புத்தகத்தின் முன் பக்கத்தை பதிவேற்றம் செய்ய Choose File என்பதை தேர்வு செய்து பதிவேற்றம் செய்யுங்கள். அடுத்து  Next என்பதை கிளிக் செய்தால் அடுத்த பக்கம் தோன்றும்.



Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 19


இந்த பக்கத்தில் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை கொடுக்க வேண்டும் அதற்கு கீழே உள்ள கட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பெயர், ஆணா / பெண்ணா, அவர்களுடைய பிறந்த தேதி, அவர்கள் உங்களுக்கு என்ன உறவு முறை, அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்பதையெல்லாம் டைப் செய்யுங்கள். 


ஒரு நபரின் விவரங்கள் கொடுத்த பிறகு அடுத்த நபரின் விவரம் கொடுக்க Add more என்பதை தேர்வு செய்யுங்கள். இந்த குடும்ப விவரங்கள் கொடுப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்களின் வயதின் அடிப்படையில் அவர்களுக்கு படிப்பு மற்றும் திருமணத்திற்கான உதவித்தொகையை பெற முடியும்.


அடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலை செய்கிறார்களா என்று கேட்டுள்ளார்கள். அதற்கு இருவரும் வேலை செய்தால் Yes என்பதையும் இல்லையென்றால் No என்பதையும் தேர்வு செய்யுங்கள்.



Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 20


அடுத்து நீங்கள் யாரை நியமனதாரராக (Nominee) நியமிக்க போகிறீர்களோ அவருடைய பெயர், முகவரி, அவர் உங்களுக்கு என்ன உறவு முறை, பிறந்த தேதி, வயது, அவருக்கு எவ்வளவு Share கொடுக்கிறீர்கள் என்பதை டைப் செய்து அவருடைய ஏதாவது ஒரு அடையாள சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


அடுத்து உங்களுடைய போட்டோவை 2.0 MB க்குள் இருக்கும் அளவிற்கு பதிவேற்றம் செய்ய தொழிலாளியின் புகைபடம் என்பதற்கு கீழே உள்ள Choose File என்பதை தேர்வு செய்து பதிவேற்றம் செய்யுங்கள். 


அடுத்து உங்களுடைய கையெழுத்து அல்லது இடது கைபெருவிரல் ரேகையை 100 KB க்குள் இருக்கும் அளவிற்கு பதிவேற்றம் செய்ய தொழிலாளியின் கையொப்பம் அல்லது இடது கைபெருவிரல் ரேகை என்பதற்கு கீழே உள்ள Choose File என்பதை கிளிக் செய்து பதிவேற்றம் செய்யுங்கள்.




Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

STEP : 21

அடுத்து உங்களுக்கு பணிசான்று யார் வழங்கினாரோ அவரை தேர்வு செய்யுங்கள்.


Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்


STEP : 22

பணிச்சான்று வழங்கிய அதிகாரியின் பெயரை அதிகாரியின் பெயர் என்னுமிடத்தில் டைப் செய்யுங்கள். அடுத்து அருகிலுள்ள கட்டத்தில் அவருடைய முகவரியை டைப் செய்யுங்கள். அடுத்து அவர் என்ன பதவியில் உள்ளார் என்பதை பதவி பெயர் என்னுமிடத்தில் டைப் செய்யுங்கள். அவர் எப்போதிருந்து அந்த அலுவலகத்தில் பணி புரிகிறாரோ அந்த தேதியை கொடுங்கள். 

அடுத்து பணிச் சான்றை பதிவேற்றம் செய்ய பணிசான்று என்னுமிடத்திற்கு கீழே உள்ள Choose File என்பதை கிளிக் செய்து பதிவேற்றம் செய்யுங்கள். மேலும் கூடுதல் ஆவணங்கள் இருந்தால் அதை அருகிலுள்ள கட்டத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். அடுத்து ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய ஆதார் அட்டை நகல் என்பதற்கு கீழே உள்ள Choose File என்பதை கிளிக் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.




Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்


STEP : 23


அடுத்து Web Camera மூலமாக உங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். அடுத்து Next என்பதை கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களும் தோன்றும். எல்லா தகவலகளும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து Submit கொடுத்தால் ஒரு விண்ணப்ப எண் தோன்றும் அதை நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.



Nalavariyam Online Registration
தொழிலாளர்கள் நல வாரியத்தில்

 

 அந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி உங்களுடைய விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.


Read Also: How to get Pension Nalavariyam Monthly Rs.2000/-


🎥 அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

            👉👉👇👇👇    


மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    

                        நன்றி !

2 comments:

  1. Useful information sir. Pani sandru eppadi yaridam vanguvathu

    ReplyDelete
    Replies
    1. பணிச்சான்று Website இல் download செய்து VAO கிட்ட Sign வாங்கி Upload பண்ணுங்க

      Delete

Powered by Blogger.