Smart Ration Card Apply Online In Tamil



Smart Ration Card Apply Online In Tamil


ration card
ration-card

    

Smart Ration Card விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:


குடும்பத் தலைவர் அல்லது தலைவி புகைப்படம்

குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் கேஸ் புத்தகம் அல்லது வங்கி கணக்கு புத்தகம் அல்லது வீட்டு வரி ரசிது ( இந்த ஆவணங்கள் எந்த  முகரியில் நீங்கள் Ration Card வாங்க போகிறீர்களோ அந்த முகவரியில் உள்ள ஆவணமாக இருக்க வேண்டும்.

 Ration Cardல் யார் யார் பெயரை சேர்க்க நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவருடைய Aadhaar Card  மட்டும். ஆதார் கார்டு தவிர மற்ற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.

புதிதாக  திருமணமானவர்கள் Smart Ration Card அப்ளை பண்ண போறிங்கன்னா  முதல்ல உங்க பெயர் எந்த Smart Card உள்ளதோ அதை நீக்கம் செய்த பிறகே   நீங்க ஸ்மார்ட் கார்டு அப்ளை பண்ணிக்கலாம்.

ஸ்மார்ட் ரேஷன் காட்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி?

புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:


ration-card
ration-card

STEP : 1          

                முதல்ல Google Serach Box ல் TNPDS என்று Type செய்து Search கொடுங்க.  முதலில் தோன்றும் Option ஐ கிளிக் பண்ணி Open பண்ணிக்கங்க அடுத்த பக்கம் தோன்றும். 


ration-card
ration-card

STEP : 2

                இந்த பக்கத்தில் உள்ள மின்னணு அட்டை விண்ணபிக்க என்னும் Option   கிளிக் பண்ணி Open பண்ணிக்கங்க அடுத்த பக்கம் தோன்றும். 


ration-card
ration-card

STEP : 3

         இந்த பக்கத்தில் உள்ள புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம் என்னும்  Option ஐ கிளிக் பண்ணிக்கங்க. 


ration-card
ration-card

 STEP : 4   

        மேலே படத்தில் உள்ளது போன்று English ஐ ஒரு பக்கத்தில் தமிழை ஒரு பக்கத்தில் Type செய்ய வேண்டும். Name of Family Head என்னும் இடத்தில் விண்ணப்பதாரர் ஆணாக இருந்தால் Mr என்றும் பெண்ணாக இருந்தால் Mrs என்பதையும் Select பண்ணிக்கங்க. அதே போன்று வலது பக்கம் விண்ணப்பதாரர் ஆணாக இருந்தால் திரு என்றும் பெண்ணாக இருந்தால் திருமதி என்பதையும் Select பண்ணிக்கங்க.     Father's / Husband's என்னும் இடத்தில் விண்ணப்பதாரர் ஆணாக இருந்தால் தந்தை பெயரையும் திருமணமான பெண்ணாக இருந்தால் கணவர் பெயரையும் Type பண்ணிக்கங்க.


ration-card
ration-card


STEP : 5


    அடுத்து உங்களுடைய முகவரியை மேலே படத்தில் உள்ள இடங்களில் Address Line 1, 
Address Line 2, Address Line 3 போன்ற மூன்று கட்டங்களில் உங்கள் முகவரியை கொடுக்கலாம். நீங்கள் தமிழில் Type பண்ண ஒவ்வொரு கட்டத்திற்கு அருகில் உள்ள Pencil Symbol ஐ கிளிக் செய்து தமிழில் Type செய்யலாம்.


ration-card
ration-card


STEP : 6

      அடுத்து உங்களுடைய Passport Size Photo வை + பதிவேற்றம் என்னும் இடத்தில் கிளிக் செய்து உங்களுடைய மொபைல் அல்லது Computer ல் Scan செய்து Save செய்துள்ள உங்களுடைய Photo வை Upload பண்ணிக்கங்க. ஒரு வேலை உங்களிடம் Scan செய்த Photo இல்லையென்றால் பிடிப்புபடம் என்னும் Option ஐ கிளிக் செய்து Web Camera மூலமாக Photo எடுத்து Upload பண்ணிக்கங்க. நீங்க Upload பண்ற Photo வானது 5MB குள்ள இருக்க மாதிரியான Photo வாக இருக்க வேண்டும். Selfie எடுத்த Photo க்கள் Reject செய்யப்படும்.

ration-card
ration-card


STEP : 7

            அடுத்து மாவட்டம் என்னும் இடத்தில் உங்களுடைய மாவட்டத்தையும், மண்டலம் / வட்டம் என்னும் இடத்தில் உங்களுடைய தாலுக்காவையும், கிராமம் என்னும் இடத்தில் உங்களுடைய ரேஷன் கடை உள்ள Area வை Select பண்ணிக்கங்க. அடுத்து அஞ்சல் குறியீடு என்னும் இடத்தில் உங்களுடைய Area Pincode Number ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து கைபேசி எண் என்னும் இடத்தில் உங்களுடைய Mobile Number ஐ Type பண்ணிக்கங்க. தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுப்பதென்றால் கொடுத்துக்கலாம் இல்லையென்றால் தேவையில்லை. அடுத்து உறுப்பினரை சேர்க்க என்னும் Option ஐ கிளிக் பண்ணிக்கங்க.


ration-card
ration-card

STEP : 8

          இதில் முதலில் குடும்பத் தலைவரின் Details கொடுக்க வேண்டும் அதற்கு Name என்னும் இடத்தில் குடும்பத் தலைவரின் பெயரை ஆங்கிலத்திலும்,  பெயர்  ( தமிழில்) என்னும் இடத்தில் குடும்பத் தலைவரின் பெயரை தமிழிலும் Type பண்ணிக்கங்க. அடுத்து பிறந்த தேதி என்னும் இடத்தில் Date of Birth ஐயும், பாலினம் என்னும் இடத்தில் குடும்பத் தலைவர் ஆணா / பெண்ணா என்பதை Select பண்ணிக்கங்க. அடுத்து தேசிய இனம் என்னும் இடத்தில் இந்தியன் என்பதை Select பண்ணிக்கங்க. அடுத்து உறவுமுறை என்னும் இடத்தில் Family Head குடும்பத் தலைவர் என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து தொழில் என்னும் இடத்தில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை Select பண்ணிக்கங்க. ஒருவேளை உங்கள் தொழில் சம்பந்தமான Option இல்லையென்றால் Others என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து மாத வருமானம் (ரூபாயில்) என்னும் இடத்தில் நீங்கள் மாதம் எவ்வளவு வருமானம் வாங்குகிறீர்களோ அதை Type பண்ணிக்கங்க. 


STEP : 9

            அடுத்து வாக்காளர் அட்டை எண்  கொடுப்பதென்றால் கொடுக்கலாம் இல்லையென்றால் தேவையில்லை. அடுத்து ஆதார் எண் என்பது கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆதார் எண்ணை மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று ஒவ்வொரு கட்டத்திலும் நான்கு நான்கு எண்களாக கொடுக்க வேண்டும். அடுத்து மற்ற ஆவணங்கள் என்னும் இடத்தில் கிளிக் செய்து ஆதார் கார்டை Select செய்து Choose File என்னும் இடத்தில் கிளிக் செய்து உங்களுடைய மொபைல் அல்லது Computer ல் Scan செய்து Save செய்துள்ள உங்களுடைய ஆதார் கார்டை Select செய்து பதிவேற்று என்னும் Option ஐ கிளிக் செய்து Upload  பண்ணிக்கங்க.  அடுத்து   உறுப்பினர் விவரம் சேமி  என்னும் Option ஐ கிளிக் செய்து குடும்பத் தலைவரின் விவரங்களை பதிவு செய்யுங்கள்.


ration-card
ration-card

STEP : 10

        அடுத்து மீண்டும் உறுப்பினரை சேர்க்க என்னும் Option ஐ கிளிக் செய்து குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர் விவரங்களை கொடுக்க வேண்டும். குடும்பத் தலைவருடைய விவரங்களை எப்படி கொடுத்தீர்களோ அதே போன்று தான் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் விவரங்களையும் கொடுக்க வேண்டும் ஆனால் உறவுமுறை என்னும் இடத்தில் மட்டும் குடும்பத் தலைவருக்கு நீங்கள் என்ன உறவுமுறை என்பதை Select செய்து குடும்ப உறுப்பினரின் ஆதார் கார்டை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

குறிப்பு :

                தனிநபர் ஒருவருக்கு மட்டும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க முடியாது. 


ration-card
ration-card

STEP : 11

         அடுத்து அட்டை தேர்வு என்னும் இடத்தில் உங்களுக்கு எந்த வகை ரேஷன் கார்டு வேண்டும் என்பதை Select பண்ணிக்கங்க.


ஸ்மார்ட் ரேஷன் கார்டில் என்னென்ன வகைகள் உள்ளன? அதற்கான பொருட்கள் என்னென்ன?


STEP : 12

        அடுத்து குடியிருப்புச் சான்று என்னும் இடத்தில் உங்களிடம் Gas Book அல்லது Bank Passbook அல்லது வீட்டு வரி ரசீது இதில் எதாவது ஒன்றை Select பண்ணிட்டு அதற்கான ஆவணத்தை அதற்கு அருகிலுள்ள Choose File என்னும் Option ஐ Select செய்து   உங்களுடைய மொபைல் அல்லது Computer ல் Scan செய்து Save செய்துள்ள உங்களுடைய குடியிருப்புச் சான்றை Upload பண்ணிக்கங்க.


ration-card
ration-card


STEP : 13

               அடுத்து எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்னும் Option க்கு கீழே உள்ள Check box ஐ கிளிக் பண்ணிக்கங்க. இணைப்பு 1 என்னும் Option க்கு கீழே உள்ள தேர்ந்தெடுக்க என்னும் Option ஐ Select பண்ணிட்டு குடும்ப நபர்களில் யாருடைய பெயரில் கேஸ் இணைப்பு உள்ளதோ அவருடைய பெயரை Select பண்ணிக்கங்க. அடுத்து எண்ணெய் நிறுவனம் என்பதற்கு நேராக உள்ள தேர்தெடுக்கவும் என்பதை கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்தும் Cylinder எந்த நிறுவனதிற்குள்ளது என்பதை Select பண்ணிக்கங்க. 


STEP : 14

        அடுத்து எல்.பி.ஜி நுகர்வோர் எண் என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் உங்களுடைய கேஸ் புத்தகத்தின் முன் பக்கத்தில் உள்ள நுகர்வோர் எண்ணை Type பண்ணிக்கங்க. அடுத்து எரிவாயு நிறுவனத்தின் பெயர் என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் எரிவாயு நிறுவனத்தின் முழுப் பெயரையும் Type செய்ய வேண்டும். அடுத்து சிலிண்டர் எண்ணிக்கை என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் நீங்கள் எத்தனை Cylinder பயன்படுத்துகிறீர்கள் என்பதை Select பண்ண வேண்டும். ஒருவேளை நீங்கள் இரண்டு Cylinder பயன்படுத்துபவராக இருந்தால் இணைப்பு 2 என்னும் Option ஐயும் Fill up பண்ண வேண்டும். 


ration-card
ration card conformation


STEP : 15

        அடுத்து உறுதிப்படுத்தல் என்பதற்கு கீழே உள்ள Check Box ஐ கிளிக் செய்து பதிவு செய் என்னும் Option ஐ கிளிக் செய்தால் நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களும் அடுத்த பக்கத்தில் தோன்றும் அதில் உங்களுடைய அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்பு பதிவு செய் என்னும் Option ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு குறிப்பு எண் தோன்றும் அந்த குறிப்பு என்னை Note பண்ணி வச்சிக்கங்க அந்த குறிப்பு எண்ணை பயன்படுத்தி உங்களுடைய விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் அதற்கு TNPDS Home Page ல் ulla


ration-card
ration card status

STEP : 16

        மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை என்னும் Option ஐ கிளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் உங்களுடைய குறிப்பு எண் கேட்கும் அதை Type செய்து பதிவு செய்ய என்னும் Option ஐ கிளிக் செய்தால் உங்களுடைய விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.


🎥புதிய ரேஷன்கார்டு விண்ணப்பித்து பெறுவது எப்படி? என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

                            👉👉👇👇👇    



    மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !



No comments

Powered by Blogger.