வில்லங்க சான்று Online Tamil
EC View in Tamil |
வில்லங்க சான்று விவரம் பார்வையிடுதல் எப்படி என்பதை பற்றியும், வில்லங்க சான்று ஆன்லைன் Download பண்ணுவது எப்படி என்பதை பற்றியும் இப்போது பார்ப்போம்.
Introduction :
EC வில்லங்க சான்று என்பது ஒரு சொத்து மீதான பரிவர்த்தனை நிறைந்த ஒரு சான்றாகும். எந்த வருடம் சொத்தை வாங்கினீர்கள், எந்த வருடம் அடமானம் வைத்தீர்கள், எப்போது அதை மறுபடியும் அதை மீட்டீர்கள், தற்போது யார் பெயரில் அந்த சொத்து உள்ளது போன்ற அனைத்து தகவல்களும் இந்த வில்லங்க சான்றின் மூலமாக தெரிந்துக்கொள்ள முடியும்.
பதிவுத்துறை ec tamil |
Step : 1
முதலில் Google Search box ல் TNREGINET என்று Type செய்து Search கொடுங்க முதலில் வரும் Option ஐ கிளிக் செய்து Open பண்ணிகங்க.
EC Online in Tamil |
STEP : 2
பதிவுத்துறை காண Home Page Display ஆகும். இதில் மின்னணு சேவைகள் என்னும் Option ஐ கிளிக் பண்ணிகங்க.
EC View Online |
STEP : 3
அடுத்து வில்லங்கச் சான்று என்னும் Option ஐ கிளிக் பண்ணிக்கங்க.
EC View |
STEP : 4
அடுத்து வில்லங்கச் சான்று விவரம் பார்வையிடுதல் என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
ec view |
STEP : 5
இந்த பக்கத்தில் உங்களுடைய மண்டலம் (Zonal), மாவட்டம் (District) ஐயும், எந்த சார்பதிவாளர் அலுவலத்தில் உங்களுடைய பத்திரத்தை பதிவு செய்தீர்களோ அந்த சார்பதிவாளர் அலுவலகத்தையும் Select பண்ணிக்கங்க.
EC View |
STEP : 6
அடுத்து எந்த வருடத்தில் இருந்து வில்லங்கச் சான்று வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை ஆரம்ப நாள் என்னும் இடத்திலும் எந்த வருடம் வரை வேண்டும் என்று நினைகிறீர்களோ அதை முடிவு நாள் என்னும் இடத்திலும் கொடுத்துக்கங்க.
Survey Number |
புல விவரங்கள்:
புல விவரங்கள் என்னும் இடத்தில் முதலில் உங்களுடைய கிராமத்தை Select பண்ணிக்கங்க. அடுத்து புல எண் என்னும் இடத்தில் உங்களுடைய Survey Number ஐயும் உட்பிரிவு எண் (Sub Division) என்னும் இடத்தில் Sub Division Number ஐயும் Type பண்ணிக்கங்க. இந்த Survey Number & Sub Division Number எப்படி கொடுக்க வேண்டும் என்றால் எடுத்துகாட்டாக 50/1b என்று இருந்தால் 50 என்பதை புல எண் என்னுமிடத்திலும் 1b என்பதை உட்பிரிவு எண் என்னுமிடத்திலும் Type பண்ணிக்கங்க.
Captcha |
STEP : 7
அடுத்து சேர்க்க என்னும் Option ஐ கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த விவரங்கள் தோன்றும். அடுத்து காண்பிக்கப்பட்ட குறியீடு (Captcha Code) என்னும் கட்டத்திற்கு கீழே உள்ள எழுத்துகள் மற்றும் எண்களை அப்படியே மேலே உள்ள கட்டத்தில் Type செய்து விட்டு தேடுக என்னும் Option ஐ கிளிக் செய்யுங்கள்.
Download |
STEP : 8
அடுத்த பக்கத்தில் மேலே உள்ள படத்தில் தோன்றுவது போன்று திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவேற்றம் செய்ய என்பதை கிளிக் செய்யுங்கள்.
Download |
STEP : 9
அடுத்து வில்லங்கச் சான்றானது Download ஆகும்.
🎥 வில்லங்கச் சான்று ஆன்லைன் மூலமாக பெறுவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்
👉👉👇👇👇
நன்றி !
Post a Comment