Head Ads

 

What is Right to Education Act (RTE Act)?
RTE என்றால் என்ன?


Right to Education

RTE INFORMATION :

      RTE (Right to Education) மூலமாக ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் Fees செலுத்தாமல் படிப்பது எப்படி? அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதி என்ன என்பதை பற்றியெல்லாம் இப்போது பார்ப்போம்.


      மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12 (1) C யின் படி தனியார் பள்ளிகளில் ஏழை குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் பள்ளியில் படிக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்து சிறந்த கல்வி அறிவை பெறுகிறார்கள் என்ற மனத்திருப்தியை அடைகிறார்கள். இந்த இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் ஆகஸ்ட் 4 2009 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். 


      RTE - Right to Edcuation Act க்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை  வீடியோவாக காண கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யுங்கள்.




           இந்த RTE யின் மூலம் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இலவசமாக தனியார் பள்ளியில் சேர்க்க முடியும். உங்களுடைய Area- விற்கு அருகில் உள்ள பள்ளியில் தொடக்க கல்வியை முடிக்கும் வரை இந்த இலவச கட்டாய கல்வி குழந்தைகளின் உரிமையாகும். இவ்வாறு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான படிப்பு செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. 


     இதுவரை உங்களுடைய குழந்தையை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் உங்களுடைய குழந்தையின் வயதிற்கு ஏற்ப குறிப்பிட்ட வகுப்பில் சேர்ப்பதற்கான வழிவகை செய்யப்படுகிறது. யாரெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என்றால் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர், இதில் நலிவடைந்த பிரிவினரின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். 


  வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் என்றால் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள், துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள் போன்றவர்கள் இந்த இலவச கல்வி திட்டத்தில் பயன்பெற முடியும்.  


     வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்கள் என்றால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் சமூகம், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். 


     https://tnschools.gov.in எனும் இணையதளத்தின் மூலம் நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Start Application என்னும் Option ஐ கிளிக் செய்தால் விண்ணப்பபடிவம் தோன்றும் இதில் மாணவரின் பெயர் மற்றும் மாணவரின் விவரங்களையும், அடுத்து பெற்றோரின் விவரங்களையும், அடுத்து பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ் போன்ற தகவல்களை கொடுத்த பிறகு உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளை தேர்வு செய்து Submit என்னும் Option ஐ Click செய்தால் உங்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். 


       இதில் ஒரு பள்ளியை மட்டும் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் எத்தனை பள்ளியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும். RTE  விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்னவென்றால் மாணவரின் போட்டோ, பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அல்லது ஸ்மார்ட் கார்டு வருமானச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவை. விண்ணப்பித்த பிறகு உங்களுடைய விண்ணப்பத்தின் நகலை நீங்கள் தேர்வு செய்த பள்ளிகளில் கொடுக்க வேண்டும். 


    அதன் பின்னர் உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும். மேலும் உங்கள் குழந்தை குறிப்பிட்டு பள்ளியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் பள்ளியின் அறிவிப்பு பலகையில் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் அதன் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடியும். 


     மேலும் உங்களுக்கு RTE Right to Education Admission சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044 28270169 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

 

 


Post a Comment

Previous Post Next Post
close