Head Ads

 How To Fill PF Joint Declaration Form

PF Joint Declaration Form
PF Joint Declartion Form

Introduction :

               நம்முடைய PF ACCOUNT ல் உள்ள BASIC INFORMATION களை Correction பண்ணுவதற்கான Form தான் இந்த "Joint Declaration Form". நாம Online மூலமாக Name, Date of Birth, Gender போன்ற Details Correction பண்ணிக்க முடியும். அதுவும் இந்த Name, Date of Birth, Gender ஐ ஒருமுறை மட்டுமே Online ல் மாற்ற முடியும். மறுமுறை Correction செய்கிறீர்கள் என்றால் அதை "Joint Declaration Form" Fill up செய்து PF Office ல் கொடுப்பதன் மூலமாகவே மட்டுமே மாற்ற முடியும். 

             நீங்கள் மாற்ற நினைக்கும் விபரங்கள் Aadhaar Card ல் எப்படி உள்ளதோ அதை வைத்து தான் உங்களுடைய Details மாற்றித் தருவார்கள்.  Online மூலமாக Name, Date of Birth, Gender ஐ மாற்றுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை Click செய்து பாருங்கள் 



    இந்த "Joint Declaration Form" Download பண்ணுவதற்கு கீழே உள்ள Download Button ஐ Click செய்யுங்கள்

Joint Declaration Form


     இந்த Form ல் Date என்னுமிடத்தில் PF Office ல் இந்த "Joint Declaration Form" ஐ எந்த தேதியில் கொடுக்கிறீர்களோ அந்த தேதியை குறிப்பிடவும். அடுத்து Region என்னுமிடத்தில் உங்களுடைய PF Office இருக்கும் இடத்தின் பெயரை எழுதிகங்க. அடுத்து I______ என்னுமிடத்தில் உங்களுடைய பெயரையும்,  அதற்கு கீழே உள்ள கட்டத்தில் நீங்க எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறீர்களோ அந்த கம்பெனி பெயரையும் எழுதிகங்க. 

   ஒருவேளை நீங்க இரண்டு கம்பெனிகளில் வேலை பார்க்கிறீர்கள் என்றால் எந்த கம்பெனியில் உங்களுடைய Details தவறாக உள்ளதோ அந்த கம்பெனி பெயரை  எழுதிகங்க. நீங்க எந்த கம்பெனி பெயரை  எழுதியிருக்கிங்களோ அந்த கம்பெனியில் was an employee என்பதை Tick பண்ணிகங்க. அடுத்து நீங்க எந்த கம்பெனி பெயரை  எழுதியிருக்கிங்களோ அந்த கம்பெனியில் தற்போது வேலை செய்யவில்லை என்றால் அதாவது அந்த கம்பெனியை விட்டு நின்று விட்டீர்கள் என்றால் ex-employee என்பதை டிக் பண்ணிக்கங்க.

 அடுத்து Establishment எனும் இடத்தில் நீங்க எந்த கம்பெனியினுடைய பெயரை எழுதி இருக்கீங்களோ அந்த கம்பெனியினுடைய  Establishment ID ஐ எழுதிகங்க. அடுத்து உங்களுடைய UAN Number ஐ   Establishment ID க்கு அருகில் எழுதிகங்க.  

PF Joint Declaration Form


   அடுத்து நீங்கள் PF ல் உங்களுடைய எந்த Details ஐ மாற்ற நினைக்கிறீர்களோ அந்த Details க்கு நேராக Correct என்னும் Box ல் சரியான Details ஐயும் Wrong என்னும் Box ல் PF ல் என்ன Details தவறாக உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். 

  அடுத்து Name & Signature என்னுமிடத்தில் உங்களுடைய முழு பெயர் மற்றும்  கையெழுத்து போட வேண்டும். அடுத்து Name of Authorised signature என்னுமிடத்தில் உங்களுடைய கம்பெனியினுடைய HR or Manager பெயர் மற்றும் கையெழுத்தை வாங்கிகங்க. அடுத்து நீங்கள் வேலை பார்த்த கம்பெனியின் Seal வாங்க வேண்டும். Seal இல்லை என்றால் இந்த Form ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

     இதற்கு என்னென்ன Document வைக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். நீங்க உங்களுடைய பெயர் அல்லது அப்பா பெயர் அல்லது கணவர் பெயரை Correction பண்ண போகிறீர்கள் என்றால் 
  • Passport
  • Driving Licence
  • Pan Card
  • Voter ID
  • Aadhaar Card
  • Ration Card
  • Bank Passbook
  • Education Certificate 
  இதில் ஏதாவது ஒரு Proof ஐ கொடுக்க வேண்டும். ஒருவேளை நீங்க Date of Birth Correction பண்ண போகிறீர்கள் என்றால்
  • Birth Certificate
  • School TC
  • Passport
  • Pan Card
  • Aadhaar Card 
  இதில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம். ஒருவேளை Date of Joining Correction பண்ண போகிறீர்கள் என்றால்
  • Joining Letter
  • Appointment Order 
  இதில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம். ஒருவேளை Date of Exist Correction  பண்ண போகிறீர்கள் என்றால் 
  • Resignation Letter
  • Leaving Certificate 
 இதில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம். அடுத்து இந்த Join Declaration Form + Correction பண்ணுவதற்கான Proof வுடன்

Joint Declaration Form

        இது போன்ற ஒரு Letter ஐயும் நீங்கள் Attach செய்து கொடுக்க வேண்டும். அதாவது Sub: என்னுமிடத்தில் நீங்கள் என்ன Correction பண்ண போகிறீர்களோ அதை Type பண்ணிட்டு அந்த Correction க்கான முழுத் தகவலையும் அதற்கு கீழே  Type பண்ணிட்டு நீங்கள் வேலை பார்க்கும் அல்லது வேலை பார்த்த Company HR or Manager யிடம் கையெழுத்து மற்றும் Company Seal பெற்றுக் கொண்டு அதை PF Office ல் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கொடுத்த தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து  30 நாட்களுக்குள் சரியான தகவலை Update செய்து கொடுப்பார்கள்.

Post a Comment

Previous Post Next Post
close