முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

 முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

     

பாதுகாப்பு திட்டம்

  • முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 1992 ஆம் ஆண்டு அப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் பாதையை மாற்றி அமைக்கும் திட்டமாகும். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலின பாகுபாட்டை தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பொருள் வளம் போல் மனித வளத்தை மேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் முக்கியமானது என்பதால் குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பதை கருத்தில் கொண்டு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை குழந்தைகளின் பாதுகாப்பு நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு என முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தினை சென்னை மாவட்டத்தில் சமூக நல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இத்திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்க வைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல், பெண் குழந்தைகளை 18 வயதுக்கு பிறகு திருமணம் செய்ய ஊக்குவித்தல், இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு நெறிமுறையை பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல், பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல்.
  • திட்ட விபரம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான உரிமை அளிக்கப்பட்டு, ஏழை ஏழை குடும்பத்திற்கு சில சரிபார்க்கத்தக்க நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகையுடன் கூடிய வைப்புத் தொகை 18 வயது முடிவில் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கும் முறை: 

  • தற்போது பொது சேவை மையத்தில் விண்ணப்பதாரர்களால் விண்ணப்பிக்கப்படுகிறது. விண்ணப்பத்தின் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள் மாவட்ட சமூக நல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு சரியான விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 
  • 1992 முதல் 2001 வரை தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழகத்தின் மூலமும் 2002 முதல் இன்று வரை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலமும் கீழ்கண்டவாறு வைப்புத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் 1: 

  • குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூபாய் 25,000 மும் அதுவே ஒரு பெண் குழந்தை 01.08.2011 பின்பு பிறந்த குழந்தை எனில் ரூபாய் 50,000 மும் மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்ததும் அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடம் இருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

திட்டம் 2:

  • இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகு பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும், நிலையான வாய்ப்புத் தொகையாக தலா ரூபாய் 25,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் ரசீது நகல் பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும் மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்து ஆண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்ததும் அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும் கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வு தொகை குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடம் இருந்து காசோலையாக பெறப்பட்டு குழந்தைகளுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

திட்டம் 3:

  • இத்திட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும், பிறந்தால் தலா ஒன்று குழந்தைக்கு ரூபாய் 25,000 வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, நிறுவனத்தின் மூலம் ரசீது பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும். மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்து ஆண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்ததும் அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன் கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வு குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடம் இருந்து காசோலையாக பெறப்பட்டு குழந்தைகளுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

 தகுதிகள்:

  • பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
  • பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
  • வருமானச் சான்று ரூபாய்72,000/- திற்குள் இருக்க வேண்டும்.
  • இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
  • இந்தத் திட்டத்தில் தொடர ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 

        மேற்கூறிய வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்த உடன் வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும்.  இது சமூக நலன் துறை சார்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பலனை பெற பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு முதிர்வு தொகையானது பெண் குழந்தைகளின் உயர்கல்வியை தொடர உதவும். பெண் குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை ஈடுகட்ட 6 வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்க தொகையாக ரூபாய் 1800/- வழங்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.