நீங்கள் ஒரு Job க்கு போக நினைக்கிறீர்கள் ஆனால் அந்த வேலை குறித்த திறமைகள் எதுவும் இல்லை ஆனால் நீங்கள் விருப்பப்படும் Job ல் Join பண்ணி வேலை செய்ய விருப்பாடுகிறீர்கள் என்றால் அதற்கான வழிகளை ஏற்படுத்தி தரும் திட்டம் தான் இந்த தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS). இந்த திட்டம் மூலம் நீங்கள் பயிற்சி பெற்று அரசு வேலைகளுக்கும் போக முடியும் அல்லது நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்கவும் முடியும்.
இந்த திட்டத்தில் நீங்கள் பயன்பெற விரும்பினால் NAPS Official Website ல் https://www.apprenticeshipindia.gov.in/ இந்த Website ல் உங்களுடைய தகவல்களை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள். Register செய்த பிறகு நீங்கள் தேடும் வேலைக்கான Apprenticeship Training எந்த நிறுவனத்தில் வழங்கப்படுகிறது என்னும் தகவல்களை இந்த Website மூலம் தெரிந்து கொள்ள முடியும். தெரிந்து கொண்டு அந்த நிறுவனத்தில் நீங்கள் உங்களுடைய Apprenticeship Training ஐ முடித்து அந்த நிறுவனத்திலேயே Join பண்ணிக்கவும் முடியும். அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட Apprenticeship Training முடித்ததற்கான Certificate ஐ பயன்படுத்தி மற்ற Company களிலும் Join பண்ணிக்க முடியும். அல்லது நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்கவும் முடியும்.
இந்த Apprenticeship Training இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுடைய மாவட்டத்திலும் இருக்கலாம். உங்களுடைய மாவட்டத்திற்குள் அல்லது தமிழ்நாட்டிற்குள் வேண்டும் என்றாலும் நீங்கள் Search Option ல் கொடுத்து எங்கு தற்போது நீங்கள் தேடும் வேலைக்கான Training நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் தேடும் போது நிறைய Company List Show ஆகும். ஒரு குறிப்பிட்ட Company ஐ தேர்வு செய்கிறீர்கள் என்றால் அந்த Company ல் Apprenticeship Training ல் Join பண்ண சில தகுதிகள் கேட்டிருப்பார்கள் அதாவது நீங்கள் தேர்வு செய்த வேலைக்கான தகுதிகள் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் Join பண்ணலாம்.
என்னென்ன மாதிரியான தகுதிகள் கேட்டிருப்பார்கள் என்றால் எத்தனை நபர்கள் தற்போது அந்த வேலைக்கு தேவைபடுகிறார்கள் என்பதும் அதில் ஆண்கள் மட்டும் வேண்டுமா? அல்லது பெண்கள் மட்டுமா? அல்லது இருபாலருமா? என்பதை குறிப்பிட்டிருப்பர்கள் . மேலும் உங்களுக்கு Training நேரத்தில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதையும் குறிப்பிட்டிருப்பர்கள் . அடுத்து அந்த குறிபட்ட வேலைக்கு என்ன கல்வி தகுதி வேண்டும் என்பதையும் அல்லது படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாமா என்பதையும் குறிப்பிட்டிருப்பர்கள். அடுத்து எவ்வளவு நாட்களுக்கு இந்த Training இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருப்பர்கள்.
இந்த Apprenticeship Training ல் Join பண்ண தேவையான ஆவணங்கள் என்னென்ன?
No comments