தாய் (THAI) திட்டம் l தமிழக அரசு திட்டம் l Tamil Nadu Village Habitation Improvement Scheme

 தாய் (THAI) திட்டம் l தமிழக அரசு திட்டம்

THAI


தாய் திட்டம்:

    THAI - Tamil Nadu Village Habitation Improvement Scheme

    தாய் - தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்.

கிராமப்புறங்களில் பின் தங்கிய கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 2011-2012. தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்தங்கிய கிராமங்களில் உட்கட்டமைப்பு மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

திட்டத்தின் நோக்கம்:

  • வள பகிர்வு - குறை களைதல்

அதாவது ஒரு கிராமத்தில் ஒரு சமூகத்தினர் மட்டும் நிலம் வைத்து கொண்டு பெரிய அளவில் இருப்பர்கள். இந்த நிலவுடைமை சமூகத்தினரிடம் இருந்து நிலத்தை பகிர்ந்து சமநிலவுடைமை ஆக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

  • வாழ்விடங்கள் - அடிப்படை கட்டமைப்பு

குக்கிராமங்கள் எல்லா வீடுகளிலும் கழிப்பறை வசதி இருக்காது. இது போன்று அடிப்படை தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகளுக்கு அடிப்படை தேவைகளையும் மேலும் பள்ளி வசதி, மருத்துவ வசதி, பாலங்கள் அமைத்து தருதல் மற்றும் பல வசதிகளை பூர்த்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

  • உள்கட்டமைப்பு மேம்பாடு

அங்கன்வாடி மையங்கள், பொது விநியோக கடைகள் (ரேசன் கடை) போன்றவைகளை முறையாக கட்டமைத்து கொடுக்கப்படும். விளையாட்டு மைதானம் அமைத்து தருதல், அதாவது கட்டிடங்கள் இத்திட்டத்தின் மூலம் கட்டி தரப்படும்.

  • நிதி ஒதுக்கீடு

தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பணிகள்:

  • ஏரிகள், குளங்கள் போன்றவைகளை தூர்வாரி குழாய் மூலம் குடிநீர் விநியோகம் இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படுகிறது.
  • சாலைகளை அமைத்து தருதல்.
  • தெருவிளக்குகள் அமைத்து தருதல்.
  • இடுகாடு / சுடுகாடு அமைத்து தருதல்.
  • விளைச்சல் பொருட்களை விற்பதற்கான சந்தையை உருவாக்கி கொடுத்தல்
  • பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தல்.
போன்ற வசதிகளை இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.

தாய் திட்டம் - II (2016 - 2017):

இந்த திட்டத்தை பல்வேறு குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்ல தாய் திட்டம் II 2016 -2017 ல் உருவாக்கப்பட்டது.

Related Videos:


No comments

Powered by Blogger.