அண்ணல் அம்பேத்கர் திட்டம் l Annal Ambedkar Business Champions Scheme (AABCS)
அண்ணல் அம்பேத்கர் திட்டம்
- SC/ST க்காக உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்றால் SC/ST மக்களுக்கு BANK களில் LOAN வழங்கப்படுவது கொஞ்சம் குறைவு தான் எனவே SC/ST மக்கள் பயனடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் தொழில் கடன் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்னும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்த அண்ணல் அம்பேத்கர் திட்டம்.
- இந்த திட்டத்தின் மூலம் 1.50 கோடி ரூபாய
வரை தொழிற் கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பெறும் கடனுக்கு 35% மானியம் வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு நீங்கள் 1 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறீர்கள் என்றால் 35,000 ரூபாய் (Subsidy) அரசாங்கம் கொடுக்கும்.
- இதில் உற்பத்தி சமந்தமாகவும் கடன் பெறலாம், சேவை சமந்தமாகவும் கடன் பெறலாம், தொழிற் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கும் கடன் பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கான
வயது வரம்பு:
- 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
கல்வித் தகுதி :
- கல்வித் தகுதி தேவையில்லை. எழுத படிக்க தெரியாதவர்கள் உற்பத்தி சம்மந்தமாக ரூபாய் 10,00,000/- லட்சம் வரை கடன் பெற முடியும். சேவை சம்மந்தாமாக கடன் பெற நினைபவர்கள் 5,00,000/- லட்சம் வரை கடன் பெற முடியும். அதுவே நீங்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக 1.5 கோடி வரை கடன் பெற முடியும்.
- இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் தொழில் செய்வதற்காக வாங்கும் Machine க்கான Amount ல் 6% அரசாங்கமே நீங்கள் செலுத்தும் வட்டியில் தள்ளுபடி செய்கிறார்கள். 2 வருடத்திற்கான Working Capital ஐயும் கொடுக்கிறார்கள். உங்களுக்கு Loan Approval ஆன உடனே உங்களுக்கான Amount உங்களுக்கு கிடைத்துவிடும். இந்த Amount ஐ யாரும் Hold பண்ணி வைக்க முடியாது.
தேவையான ஆவணங்கள்:
- Quotation
- Project Report
- Passport size photo and Sign
- Aadhaar Card
- Transfer Certificate
- Community Certificate
Project Report Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்யுங்கள்
- Transfer Certificate அதாவது TC ஐ நீங்கள் படித்திருந்தால் மட்டும் Upload செய்யுங்கள் இல்லையென்றால் தேவையில்லை.
- நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பம் TIIC க்கு போகும். TIIC ல் இருந்து Bank க்கு Bank verify பண்ணிட்ட பிறகு உங்களுக்கு Amount கிடைக்கும்.
No comments