Head Ads

 மருத்துவ காப்பீட்டு திட்டம்

Chief Minister's Comprehensive Health Insurance  Scheme (CMCHIS)

CM Health Insurance

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான திட்டங்களில் ஒன்றான முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி இந்த Article களில் பார்ப்போம். ரூபாய் 5,00,000/- வரை இந்த காப்பீட்டு திட்டத்தில் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெற முடியும். 

CM Health Insurance


நீங்க ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த https://www.cmchistn.com/ Website Link ஐ Click செய்து Entrollment => Member Search/e Card என்னும் Option ஐ கிளிக் செய்தால் மேலே காணும் படத்தில் உள்ளது போன்று உங்களுக்கு நிறைய Option காட்டும் இதில் எதாவது ஒரு Details ஐ கொடுத்து உங்களுடைய மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும். ஒருவேளை இதில் தேடியும் உங்களுடைய தகவல்கள் கிடைக்கவில்லையென்றால் நீங்கள் புதியதாக தான்  காப்பீடு அட்டை வாங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதி


• இத்திட்டத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். (அரசாணை(நிலை) எண்.560 மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை (அஉதி1-1) நாள்:16.12.2021)

• கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்

குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்

2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்

3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

இந்த திட்டத்தில் நீங்கள் இணைய கீழே உள்ள https://www.cmchistn.com/ Website Link ஐ Click செய்து Entrollment => Option ஐ கிளிக் செய்து Entrollment Form என்று ஒரு Option இருக்கும் அத கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளுங்கள். 
    
மருத்துவ காப்பீடு திட்டம்

இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்களுடைய தாலுக்கா அலுவலகத்தில் உள்ள VAO விடம் உங்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் இவ்வளவு தான் என்பதை தெரிவித்து அவருடைய கையொப்பம் மற்றும் Seal பெற்றுக்கொண்டு இந்த விண்ணப்பப்படிவம், வருமானச் சான்றிதழ், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்து கொண்டு உங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான Department இருக்கும் அங்கு சென்று உங்களுடைய Document களை கொடுத்தால் அவர்கள் உங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைக்கு விண்ணப்பித்து உங்களுக்கு UAN Number தருவார்கள். அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தொடக்கத்தில் கூறியது போன்று இந்த
 https://www.cmchistn.com/ Website Link ஐ Click செய்து Entrollment => Member Search/e Card என்னும் Option ஐ கிளிக் செய்து UAN Number என்னுமிடத்தில் Number ஐ Type செய்தால் உங்களுடைய காப்பீட்டு அட்டை தோன்றும்  அதை பதிவிறக்கம் (Download) செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.


Post a Comment

Previous Post Next Post
close