பாஸ்போர்ட் பெறுவதற்கு வழங்கவேண்டிய ஆவணங்கள் என்ன?

 பாஸ்போர்ட் பெறுவதற்கு வழங்கவேண்டிய ஆவணங்கள் என்ன?

பாஸ்போர்ட் பெறுவதற்கு வழங்கவேண்டிய ஆவணங்கள்

   

புதிதாக Passport Apply பண்ண போகிறீர்கள் என்றால் என்னென்ன Document கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம். Passport Apply பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.



பாஸ்போர்ட் பெறுவதற்கு வழங்கவேண்டிய ஆவணங்கள்: 
    Passport Apply பண்ணுகிறவர்கள் முக்கியமாக சமர்பிக்க வேண்டிய ஆவணங்களில் ஓன்று ஆதார் கார்டு. ஆதார் கார்டில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி அனைத்தும் சரியாக உள்ளது என்றால் நீங்கள் ஆதார் அட்டையை Address Proof & Identity Proof ஆக பயன்படுத்திக்கொள்ள முடியும். 

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  1. ஆதார் அட்டை (Aadhaar Card)
  2. பள்ளி அடையாள சான்று (School Certificate)
  3. பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
  4. ரேஷன் கார்டு (Smart Card)
இவற்றில் ஏதாவது ஒன்றை சமர்பிக்க வேண்டும்.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  1. ஆதார் அட்டை Aadhaar Card)
  2. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
  3. அரசு வேலைக்கான அடையாள அட்டை
  4. வங்கி கணக்கு புத்தகம்
  5. பான் கார்டு
  6. ஓட்டுனர் உரிமம்
போன்றவைகளில் ஏதாவது இரண்டு ஆவணங்கள்  சமர்பிக்க வேண்டும்.

        நீங்கள் சமர்பிக்கும் ஆவணங்கள் அனைத்திலும் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி அனைத்தும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். நீங்கள் படிக்கவில்லை உங்களிடம் TC இல்லையென்றாலும் உங்களுடைய ஆதார் அட்டையை பயன்படுத்தி PASSPORT க்கு விண்ணப்பித்து பெற முடியும்.

        முன்பெல்லாம் நீங்கள் படிக்கவில்லையென்றால் பிறப்பு சான்றிதழ் கொடுத்து PASSPORT பெறும் நிலை இருந்தது. தற்போது ஆதாரில் உங்களுடைய தகவல்கள் சரியாக இருந்தாலே போதும்  PASSPORT பெற முடியும்.

         ஒருவேளை நீங்கள் படித்திருந்தால் கண்டிப்பாக உங்களுடைய பள்ளி சான்றிதழை அதாவது TC (அ) Mark Sheet கொடுத்து PASSPORT பெற வேண்டும். அப்போது தான் PASSPORT ல் ECR (Emigration Check Required) Option இருக்காது.

             PASSPORT க்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணபிக்கும் போது எந்த தேதியில் நீங்கள் PASSPORT Office Visit பண்ணுவதற்கு Slot Book பண்ணியுள்ளீர்களோ அந்த தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே PASSPORT Office க்கு தேவையான ஆவணங்களை எடுத்து கொண்டு செல்லுங்கள்.

மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்

 

No comments

Powered by Blogger.