01.01.2024 TNPSC ஜனவரி மாத நடப்பு நிகழ்வுகள் l TNPSC Current Affairs
_Mughal._1585-90._National_Museum,_New_Delhi..jpg)
01.01.2024 TNPSC Current Affairs வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா முதல்வர்கள் இணைந்து அதன் நினைவு சின்னத்தை சென்னையில் வெளியிட்டனர். வைக்கம் சத்தியாக்கிரகம் தீண்டாமைக்கு எதிராக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் நடைபெற்ற போராட்டம் தான் வைக்கம் சத்தியாக்கிரகம் அல்லது வைக்கம் போராட்டம். இந்த போராட்டம் நடைபெற்ற ஆண்டு 1924 -1932. வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்த கூடாது என்ற தடையை நீக்க இந்த போராட்டம் நடைபெற்றது. ********************************* மத்திய அரசானது நினா சிங்கை மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் ( CISF - Central Industrial Security Force) தலைமை இயக்குனராக நியமித்துள்ளது. இந்த உயர்நிலை படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவில் உள்ள தொழில் நிலையங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட படை தான் இந்த CISF. 1983 ஜூன் 15 ஆம் ஆண்டு இந்திய அரசின் காவல் ஆயுதபடைகளில் ஒன்றாக உருவாக்...