வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி? EC (Encumbrance Certificate)

 வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?

EC (Encumbrance Certificate)

வில்லங்க சான்றிதழ் 

வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என தெரிந்துகொள்ளவும் இந்த வில்லங்க சான்று பயனுள்ளதாக இருக்கும். 

இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க முடிகிறது. அந்த வரிசையில் EC (Encumbrance Certificate) எனப்படும் வில்லங்கச் சான்றிதழைக்கூட எளிதாக ஆன்லைனில் பெறலாம். முன்புபோல் வில்லங்க சான்றிதழ் கேட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாள்கணக்கில் நடையாய் நடக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் நம் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு குறைவு தான். அமர்ந்த இடதில் இருந்ததே ஆன்லைன் மூலமாக வில்லங்கச் சான்றிதழை பெற முடியும்.

இணையதளம் வழியாக வில்லங்க சான்றிதழ்  பெறும் முறை 

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வில்லங்கச் சான்று வழங்க ஆகும் காலதாமதம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தின் மூலம்  விண்ணபித்து, வில்லங்க சான்றிதழை விரைவாக பெறும் சேவையை பத்திர பதிவு துறை தொடங்கியது. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று பெற விரும்புபவர்கள் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலம் அல்லது  சார்பதிவாளர் அலுவலகதிலிருந்து இரண்டு நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தற்போது இணையம் வழியாக பத்திர பதிவு அலுவலகத்திற்கு போகமலே வீட்டிலிருந்தே வில்லங்க சான்றிதழ் EC (Encumbrance Certificate) பெற முடியும்.

  • இணையதளம் மூலம் வில்லங்க சான்றிதழை பெற தமிழக பதிவுத்துறையின் (Registration Department) https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

  • உங்களுக்கு விருப்பமான மொழியில் தேட முகப்பு பக்கத்தின் வலது புறம் உள்ள English என்ற Option ஐ கிளிக் செய்து தமிழ் மொழியை தெரிவு செய்து கொள்ளுங்கள்

  • இந்த இணையதளத்தில் வில்லங்க சான்றிதழை EC (Encumbrance Certificate) பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • இந்த இணையதளத்தில் வில்லங்க சான்றிதழை பார்ப்பதற்கு E-services என்ற Option ஐ கிளிக் செய்து அதில் உள்ள Encumbrance Certificate என்ற Option ஐ கிளிக் செய்து View EC என்ற Option ஐ கிளிக் செய்து வில்லங்க சான்றிதழை இலவசமாக பெற முடியும்.

  • View EC என்ற Option ஐ கிளிக் செய்ததும் உங்களுக்கு ஒரு படிவம் தோன்றும். அதில் பதிவு மண்டலம் (Zone), பதிவு மாவட்டம் (District), சார் பதிவாளர் அலுவலகம் (Sub Registrar Office) போன்ற தகவலையும் எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை வில்லங்க சான்றிதழ் EC (Encumbrance Certificate) தேவைப்படுகிறது என்னும் வருடத்தையும் குறிப்பிட வேண்டும். மேலும் Survey Details ல் எந்த கிராமம் என்பதையும் அந்த கிராமத்தில் உங்களுடைய நிலம் உள்ள இடத்திற்கான சர்வே எண் (Survey No) ஐயும் குறிப்பிட்டு சேர்க்க என்னும் Option ஐ கிளிக் செய்ய வேண்டும். மேலும் உங்களுக்கு அந்த கிராமத்தில் சொந்தமான அனைத்து சர்வே எண் (Survey No) ஐயும் சேர்த்து கொண்டே வர வேண்டும். அதன் பிறகு கீழே உள்ள கட்டத்தில் தெரியும் எழுத்துக்களை மேலே உள்ள கட்டத்தில் டைப் செய்து விட்டு Search Option ஐ கிளிக் செய்தால் திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்க என்னும் லிங்க் தோன்றும் அதை கிளிக் செய்தால் வில்லங்க சான்றிதழை EC (Encumbrance Certificate) ஆனது PDF ஆக Download ஆகும்.
வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள CLICK HERE லிங்கை கிளிக் செய்யுங்கள்


No comments

Powered by Blogger.