Head Ads

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Online Passport?

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பித்து தர தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9566501295

📜TABLE OF CONTENT

தேவையான ஆவணங்கள் : 

  • ஆதார் அட்டை

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Online Passport?

Online மூலம் Passport பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம். http://passportindia.gov.in எனும் Passport Seva இணையத்தளத்தின் மூலமாக Passport விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்களுடைய Passport ஐ நீங்கள்  ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறையையும், பதிவு முறை, Passport நியமனம் (Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (police Verification), Appointment வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன Status-ல் உள்ளது என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு மின்னஞ்சல் ஐடி (Email Id) கட்டாயமாக தேவைப்படும். மேலே கண்ட Passport Website Link ஐ கிளிக் செய்து Passport Seva வின் Home Page Open ஆனதும் ஒரு புதிய பயனர் New User Registration என்னும் Option ஐ Click செய்ததும்User Registration Page தோன்றும் இதில் Registrar to apply at என்னும் இடத்தில் Passport Office என்னும் Option ஐயும், Passport Office என்னும் இடத்தில் உங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள Passport Office ஐ Select செய்து கொள்ளவும். பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்கள் நிரப்ப வேண்டும்.

உங்களுடைய விவரங்களை கொடுத்து Register செய்த பிறகு, ஒரு Activation Link Passport Seva Portal மூலம் உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு (Email Id) அனுப்பப்படுகிறது. (உங்கள் கணக்கை Activate செய்வதற்கு)உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு  (Email Id) அனுப்பப்பட்ட Link ஐ கிளிக் செய்ததும் உங்கள் கணக்கு செயல்படுத்தபட்டது என்று உறுதி அளிக்கும். (இணைப்பு 7 நாட்களுக்கு பிறகு காலாவதியாகிவிடும்.)

Read Also : CROP INSURANCE SCHEME IN TAMIL l PMFBY l பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

Activate செய்த பிறகு உங்களுடைய USER ID and Password கொடுத்து Login பண்ண வேண்டும். Next Page Open ஆகும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலைமையைக் காண (Application status) ஒரு லிக்ங்கும், மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும். "Apply for Fresh passport / Reissue of passport" கிளிக் செய்யவும். Next Page Open ஆகும். அதில் "Click here to fill the Application Form Online" என்னும் Option ஐ Click பண்ணுங்க.  Next Page Open ஆகும். அதில் RPO Selection க்காக State ல Tamilnadu ஐயும் அடுத்து District ஐயும் Select பண்ணிகங்க. Next Page Open ஆகும். 

இந்த பக்கத்தில் நீங்கள் முதன்முறையாக Passport எடுக்க போகிறீர்கள் என்றால் Fresh Passport என்னும் Option ஐ Click பண்ணுங்க. அல்லது ஏற்கனவே Passport எடுத்திருந்து அதை புதுபிக்க போகிறீர்கள் என்றால் Re-issue Passport என்னும் Option ஐ Click பண்ணுங்க. அடுத்து சாதாரணமான முறையில் Passport பெற போகிறீர்களா? அல்லது தட்கல் முறையில் வேண்டுமா என்பதை Select பண்ணிகங்க.  சாதாரணமாக 36 பக்கங்கள் கொண்ட Passport வேண்டுமா? அல்லது கூடுதலாக 60 பக்கங்கள் கொண்ட Passport வேண்டுமா என்பதை Select பண்ணிகங்க. Next Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும். 

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Online Passport?

Read Also : Chief Minister Uzhavar Pathukappu Thittam (CMUPT CARD) l உழவர் பாதுகாப்பு அட்டை பெறுவது எப்படி? சமூக பாதுகாப்பு திட்டம்

அடுத்து Passport Apply பண்ணும் போது என்னென்ன மாதியான கேள்விகள் கேட்க்கப்படும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள உங்களது அனைத்து விவரங்களையும் நிதானமாகப் படித்து   எழுத்து பிழை இல்லாமல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒவ்வொரு பக்கம் முடித்த பின்னர் Next Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும். ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்த்துகொண்டிருக்கும் நாம் விண்ணப்பித்த பிறகு கடைசியில் ஒருமுறை நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீங்கள் எதையும் மாற்ற முடியாது.

  1. Given Name : உங்களது பெயர் 
  2.  Surname :உங்களது இன்சியல் ( பொதுவா அப்பவோட பேரு கல்யாணம் ஆன பெண் கணவரின் பெயர் )
  3. உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changad your name click the box and indicate Previous Name (S) in full "என்பதை கிளிக் செய்து 
  4. Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்.
  5. Sex : ஆனா,பெண்ணா என்று குறிப்பிடவும்.
  6. Date of Birth : பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
  7. Place of Birth : பிறந்த ஊர் 
  8. District or Country :நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டத்தையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்தநாட்டையும் குறிப்பிடவும்.
  9. Qualification : உங்களது படிப்பு (SSLC pass என்றால் NOC அப்ளை செய்யலாம்)
  10. Profession: தொழில் 
  11. Present Address : தற்போதைய முகவரி.
  12. Permanent Address : நிரந்தர முகவரி.
  13. Please give the Date since residing at the Present Address : எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள். 
  14. Phone No : தொலைபேசி எண்
  15. Email Address : இமெயில் முகவரி 
  16. Marital Status : திருமணமான தகவல்.
  17. Spouse 's Name : கணவர் /மனைவியின்  பெயர்.
  18. Father's Name : தந்தை பெயர்.
  19. Mother's Name : தயார் பெயர்.
  20. தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமாக வாசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year ,click on this box and furnish addresses of the other place (S) of residence in the last one year along with the duration (S) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From : To : Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்.
  21. Voter ID Athaar Card No, PAN Card Number இருந்தால் அத்தனையும் நிரப்பி விடவும். 
ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply Online Passport?

Is applicant eligible for Non-ECR category? SSLC Pass செய்திருந்தால், வெளிநாட்டில் 3 வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மட்டும் .... NOC கிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும்.

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save " என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Button ஐ கிளிக் செய்து செல்லவும், கடைசியாக முக்கியமான ஒன்று அதில் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள ஒருவரது முகவரியும், தொலைபேசி என்னும் கேட்கும். அதை தெளிவாக குறிப்பிடவும். ஏனென்றால் Police Verification ற்காக அதான் முக்கியம்.

Read Also : PM VIDYA LAKSHMI EDUCATION LOAN l வித்யாலக்ஷ்மி கல்வி கடன் திட்டம் 

பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport)

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்த்துகொண்டிருக்கும் நாம் பாஸ்போர்ட் ஆபீசுக்கு எந்த தேதியில் செல்ல வேண்டும் என்பது நீங்கள் Application Fill-up செய்து Pay and Appointment என்னும் Option மூலம் நீங்கள் எந்த தேதியில் Passport office போக போகிறீர்களே அதை Select பண்ண வேண்டும். எந்தெந்த தேதியில் Available உள்ளது என்பது Appointment Date Green color ல் தோன்றும். அதில் உங்களால் எந்த தேதியில் Passport Office போக முடியுமோ அந்த தேதியை Select செய்து கொள்ளவும். நியமனம் பக்கம் 5minutes தான் திருந்திருக்கும் அதற்குள் முடித்துவிட வேண்டும்.

அதே நாளில் இரண்டாவது முயற்சித்து  கொண்டிருக்க முடியாது. அந்த வழக்கில் நீங்கள் 24 மணி நேரம் காத்திருந்து, அடுத்த நாள் தான் முயற்சிக்க வேண்டும். அதேபோல் அந்த பக்கத்தில் இருக்கும் பொது Reload /Refresh பட்டனை அழுத்தாதிர்கள். 

உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்ட்டையும் + பணத்தையும் + சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும்.

அந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள்  (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நாள் சான்றிதழ் போன்றன) சரிகானப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். ( எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்கு Receipt தருவார்கள். அவ்வளவு தான் உங்களது வேலை.

(குறிப்பு நீங்கள் கொடுக்கும் எல்லா ஆவனங்களிலும் ஓரே முகவரியும், பிறந்த தேதியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்)

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி How to Apply Online Passport


Also Read : LAKHPATI DIDI YOJANA l மத்திய அரசு வழங்கும் மகளிருக்கான வட்டியில்லா கடன் 5,00,000/-

பாஸ்போர்ட் விண்ணப்ப தகுதி ஆன்லைனில் பார்க்க (View Passport Application  Status Online)

நீங்கள் PSK -ல் உள்ள நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஒரு File Number பெறுவீர்கள், பிறந்த தேதி இரண்டையும் கொடுத்து "Track" Option கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பாஸ்போர்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Also Read : Sukanya Samridhi Yojana SSY l செல்வமகள் சேமிப்பு திட்டம்

போலீஸ் சரிபார்ப்பு (Police Verification)

சில தினங்களில் Police Verification என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும், அப்போது நீங்கள் உங்கள் VAO Village Administrative Officer -ரிடம் நீங்கள் இந்த ஊரில் தான் வசித்து வருகிறீர்கள் என்று விண்ணப்பத்தில் எழுதி வாங்க வேண்டும் மற்றும் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரி கொடுத்தீர்கள் அல்லவா அவர்களையும் விசாரிப்பார்கள்.

Also Read : What is Mudra Loan? l முத்ரா கடன் பெறுவது எப்படி?

பாஸ்போர்ட் அனுப்புகை 

அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் தயாராக உள்ளது என, உங்கள் மொபைல் இல் அறிவிப்பு SMS பெறுவீர்கள். மேலும் அனுப்பப்பட்டதும் உங்கள் Passport Number தேதி குறிப்பிட்ட உங்கள் Email ID க்கு ஒரு மின்னஞ்சல் வரும். எனவே, ஒரு சரியான மின்னஞ்சல் ஐடி & தொலைபேசி எண் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சில நாட்கள் உங்கள் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கு வந்துவிடும்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு வழங்கவேண்டிய ஆவணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள்

CLICK HERE

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள்

CLICK HERE






Post a Comment

Previous Post Next Post
close