Chief Minister Uzhavar Pathukappu Thittam
Chief Minister Uzhavar Pathukappu Thittam உழவர் பாதுகாப்பு அட்டை பெறுவது எப்படி?
Cheif Minister Uzhavar Pathukappu Thittam:
இந்த Cheif Minister Uzhavar Pathukappu Thittam உழவர் பாதுகாப்பு திட்டம் 2005 ல் கொண்டு வரப்பட்டது. விவசாய தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வாழ்வில் இன்னல் மற்றும் எதிர்பாரா இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் இந்த முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் என்ற சமூக பாதுகாப்பு திட்டம் இதில் இரண்டு விதமான அட்டை உங்களுக்கு வழங்குகிறார்கள். Meroon Colour Card & Green Colour Card. Meroon Colour Card ஆனது குடும்ப தலைவருக்கு வழங்கப்படுகிறது. குடும்ப தலைவரை சார்ந்து இருப்பவர்களுக்கு Green Colour Card வழங்கப்படுகிறது.
உழவர் பாதுகாப்பு அட்டை பெருவதற்கான விண்ணப்பப்படிவம்
இந்த விண்ணப்பப்படிவத்தை Download செய்து Fillup பண்ணிட்டு VAO Office ல் இந்த Application Form உடன் ஆதார் அட்டை (Aadhaar Card), புகைப்படம் (Photo), குடும்ப அட்டை (Ration Card), வங்கி கணக்கு புத்த்கம் (Bank Passbook) இந்த Documents கொடுப்பதன் மூலம் உங்களுக்கு அட்டை பதிவு செய்து வழங்கப்படும். இந்த அட்டை வைத்துள்ளவர்களுக்கு என்ன மாதிரியான உதவிதொகைகள் வழங்கப்படுகின்றன என்றால்
Cheif Minister Uzhavar Pathukappu Thittam குடும்ப தலைவருக்கான உதவிகள்
- திருமண உதவித்தொகை
- மகப்பேறு உதவித்தொகை
- முதியோர் ஓய்வூதியம்
- விபத்து மரணம் மற்றும் காயம்
- இயற்கை மரணம்
- ஈமச்சடங்கு செலவு
குடும்ப தலைவரை சார்ந்தவர்களுக்கான உதவிகள்
- கல்வி உதவித்தொகை
- திருமண உதவித்தொகை
Cheif Minister Uzhavar Pathukappu Thittam யாரெல்லாம் இந்த அட்டை பெற முடியும்
- 2.50 ஏக்கருக்குள் நஞ்சை நிலம் அல்லது 5.00 ஏக்கருக்குள் புஞ்சை நிலம் வைத்திருந்தால் இந்த உழவர் பாதுகாப்பு அட்டை பெற முடியும்.
- விவசாய நிலத்தில் நீங்கள் பணிபுரிவராக இருந்தால் சம்பளத்திற்கோ அல்லது குத்தகைக்கு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்பவராக இருந்தாலும் 18 வயது 65 வரை உள்ள குறு மற்றும் சிறு விவசாயிகள் அனைவரும் இந்த திட்டதின் கீழ் உறுப்பினர்களாக பதிவு பெற தகுதி உள்ளவர்கள் ஆவர்.
Cheif Minister Uzhavar Pathukappu Thittam விவசாயம் சார்ந்த தொழில்கள் என்று கருதப்படுபவை
- தோட்டக்கலை
- பட்டுப்புழு வளர்ப்பு
- பயிர் வளர்த்தல், புல் வளர்த்தல் அல்லது தோட்ட விளைபொருள்
- ஒரு குடியானவர் தமது நிலத்தில் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையையோ மேய்ச்சலுக்காக பயன்படுத்துதல்
- உர வகையிலான பயிர்களை வளர்க்கும் நோக்கத்திற்க்காக நிலத்தை பயன்படுத்துதல்
- பால் பண்ணைத் தொழில்
- கோழிபண்ணை
- கால்நடை வளர்ப்பு
- மரங்கள் வளர்த்தல்
- உள்ளூர் மீன்பிடிதொழில் ஈடுபடுதல்
இந்த திட்டத்தில் உறுப்பினர்களை பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் குடும்ப அட்டை (Ration Card) அடிப்படையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு யார் யாரெல்லாம் இந்த உழவர் பாதுகாப்பு அட்டை பெற தகுதியுடையவர்கள் என்னும் List வைத்திருப்பார்கள். உங்களிடம் இந்த உழவர் பாதுகாப்பு அட்டை இல்லையென்றால் உங்களுடைய கிராம நிர்வாக அலுவலரை அணுகி அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
கல்வி உதவித்தொகை
Cheif Minister Uzhavar Pathukappu Thittam திருமண உதவித்தொகை
இந்த திட்டத்தில் ஆணுக்கு - ரூ.8,000/- பெண்ணுக்கு - ரூ.10,000/- வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் திருமண உதவித்தொகை திட்டத்தில் எந்தவொரு திட்டதிலும் நீங்கள் உதவித்தொகை பெறவில்லையென்றால் இந்த திட்டதின் மூலம் நீங்கள் உதவித்தொகையை பெற முடியும். ஒரு குடும்பத்தில் யாருக்கெல்லாம் திருமணம் ஆகிறதோ அவர்கள் அனைவரும் இந்த உதவிதொகையை பெற முடியும்.
முதியோர் ஓய்வூதியம்
இந்த அட்டை வைத்திருப்பவராகளுக்கு மாதம் மாதம் ரூ.1.000/- பெருவதற்க்கு விண்ணப்பிக்கலாம். 60 வயதிற்கு பிறகு தான் நீங்கள் இந்த Pension Scheme க்கு விண்ணப்பிக்க முடியும்.
விபத்து மரணம் மற்றும் காயம்
இயற்கை மரணம் உதவித்தொகை
Meroon Colour Card வைத்துள்ள நபர் இயற்கையாக மரணமடைந்தால் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும்.
ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை
உழவர் பாதுகாப்பு அட்டையில் நீங்கள் எந்த அட்டை வைத்திருக்கும் உறுப்பினர் இறந்தாலும் ஈமசடங்குக்கான நிதி உதவி ரூ.2500/- வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெற இறப்புச்ச சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. அடையாள அட்டையில் விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொண்டு இந்த உதவிதொகை வழங்கப்படலாம்.
அரசாணை நகல்
No comments