Head Ads



How to detect and report mobile numbers used by others using your identity?

                                                                 

   
                                                                                            

             
        நம்முடைய ஆதாரை பயன்படுத்தி நிறைய நபர்கள் நம்முடைய பெயரில் மொபைல் எண்ணை பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். நம்முடைய பெயரில் எத்தனை எண்கள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள தொலைத்தொடர்பு துறை DoT தற்போது இந்த பயன்பாட்டினை அறிமுகப்படுத்தி உள்ளது.

உங்களுடைய பெயரில் மற்றவர்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களை கண்டறிந்து புகார் அளிப்பது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்




     அதை தெரிந்துக் கொள்ள  இந்த வெப்சைட் கிளிக் செய்யுங்கள் https://tafcop.dgtelecom.gov.in/

TAF-COP-PORTAL
How To Detect And Report Mobile Numbers Used By Others Using Your Identity

            இதுல Enter your Mobile Number னு இருக்கிற இடத்துல உங்களுடைய மொபைல் நம்பர் டைப் பண்ணிட்டு Request OTP Option அ கிளிக் பண்ணதும் நீங்க கொடுத்துள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரும்.


TAF-COP-OTP-PAGE
How To Detect And Report Mobile Numbers Used By Others Using Your Identity

            அந்த OTP டைப் பண்ணிட்டு Validate Option அ கிளிக் பண்ணதும் அடுத்த Page Open ஆகும்.




             இந்த Page இல் உங்களுடைய பெயரில் எத்தனை மொபைல் எண்கள் பயன்பாட்டில் உள்ளது என்பது தோன்றும். இதில் உங்களுக்கு சம்மந்தம் இல்லாத எண்கள் இருந்தால் அதன் அருகில் உள்ள BOX ஐ கிளிக் செய்து Report Option அ கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய புகார் ஆனது மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு போகும் அங்கு அவர்கள் உங்கள் பெயரில் மொபைல் எண்ணை பயன்படுத்துவரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். 

        அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளர்களா என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் புகார் அளித்த பிறகு உங்களுக்கு ஒரு Refrence ID Number கொடுப்பார்கள் அதை நீங்கள் Report Status க்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் Type செய்து Report status Option அ கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய புகாரானது என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

                இதன் மூலமாக நம் பெயரை பயன்படுத்தி நடக்கும் தவறுகளை தடுக்க முடியும்.

மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்    

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !





Post a Comment

Previous Post Next Post
close