How To Fill Pan Card Form 49A

நீங்களாகவே பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? 

How to Fill Pan Form 49A


PAN-CARD
How To Fill Pan Card Form 49A


FORM 49A

    Form 49 A விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
👇👇👇


1 Page
        
            
2 Page

            


         இந்த Form 49 A வில் மொத்தம் 16 கேள்விகள் கேட்டு இருப்பார்கள். இந்த Form ல் Black பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். முதலில் Assessing Officer (AO Code) என்று இருக்கக் கூடிய இடத்திற்கு இருபுறமும் உங்களுடைய புகைப்படம் ஓட்டுவதற்கான கட்டங்கள் கொடுத்திருப்பார்கள். அதில் 3.5 cm X 2.5 cm அளவுள்ள புகைப்படத்தை ஒட்டிக் கொள்ளுங்கள் அல்லது அந்த கட்டத்திற்குள் இருப்பது போன்று புகைப்படத்தை ஒட்டிக் கொள்ளுங்கள். அதில் இடதுப்புறம் அதாவது  போட்டோ ஓட்டும் இடத்திற்கு கீழயே Signature/Left Thumb impression across this photo ன்னு இருக்கிற இடத்தில் போட்டோவின் மீது அதாவது போட்டோவிற்கு வெளியிலிருந்து போட்டோவின் மீதும் சேர்த்து கையெழுத்தை போட வேண்டும். அதுவே வலது புறம் ஒட்டியுள்ள போடோவிற்கு கீழே உள்ள கட்டத்திற்குள் தான் கையெழுத்தை போட வேண்டும் அதுவும் கையெழுத்து கட்டத்தை விட்டு வெளி வராமல்.

        அடுத்து உங்களுடைய Area Code, AO Code, Range Code மற்றும் AO No. ஐ கண்டுபிடிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
Click Here 👇👇👇
              AO Code 

    இந்த பக்கத்திற்கு சென்று உங்களுடைய மாவட்டத்தின் முதல் எழுத்தை க்ளிக் செய்தால் உங்களுக்கு உங்களுடைய AO Code Show ஆகும்.

Pan Form 49A படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி என்பதை என்னும் வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

Question : 1

Full Name (Full expanded name to be mentioned as appearing in proof of identity/address documents: initials are not permitted)        

        Please Select Title என்னும் இடத்தில் நீங்கள் பெயருக்கு முன்னால் திரு, திருமதி, செல்வி இது போன்று உங்களுக்கு எது வருமோ அந்த கட்டத்தை கிளிக் செய்யுங்கள். Last Name/ Surname என்னும் இடத்தில் உங்களுடைய ஆதார் கார்டில் பெயர் எப்படி உள்ளதோ அதே போன்று அதில் உள்ள Last Name ஐ கொடுங்கள் ஒருவேளை  Last Name இல் உங்களுடைய Initial தான் உள்ளது என்றால் உங்களுடைய Surname அதாவது தந்தை பெயரை கொடுங்கள். திருமணமான பெண்களாக இருந்தாலும் தந்தை பெயரில் தான் பான் கார்டு விண்ணப்பித்து பெற முடியும். அடுத்து Fist Name என்னும்  இடத்தில் உங்களுடைய முதல் பெயரை கொடுங்கள். Middle Name  என்னும்  இடத்தில் உங்களுடைய  பெயரில் இடையில் உள்ள பெயரை கொடுங்கள். 

Question : 2

Abbreviations of the above name, as you would like it, to be printed on the PAN card

        PAN card இல் உங்களுடைய பெயர் எப்படி Print ஆகி வர வேண்டும் என்பதை நீங்களாகவே இந்த இடத்தில் கொடுத்துக் கொள்ள முடியும்.

Question : 3

 Have you ever been known by any other name?

    உங்களுக்கு வேறு ஏதேனும் பெயர் உள்ளதான்னு கேட்டு இருக்காங்க அவ்வாறு இருந்தால் Yes என்பதை கொடுத்து விட்டு உங்களுடைய மற்றொரு பெயரை முதல் Question இல் எப்படி உங்களுடைய பெயரை கொடுத்தீர்களோ அதே போன்று இங்கும் கொடுத்து கொள்ளுங்கள்.  

Question : 4

Gender (for individual applicants only) 

    நீங்கள் ஆணா/ பெண்ணா என்பதை Select பண்ணிக்கங்க.

Question : 5

Date of Birth/incorporationAgreement/Partnership or Trust Deed/Formation of Body of individuals  or association of persons

        உங்களுடைய பிறந்த தேதி இங்கு கொடுத்து கொள்ளுங்கள் அல்லது நீங்கள் ஒரு கம்பெனிக்கு அல்லது Trust என்று பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் கம்பெனி ஆரபித்த தேதியை கொடுத்துக் கொள்ளுங்கள்.

Question : 6

Details of parents (applicable only for individual applicants)

        இதில் உங்களுடைய பெற்றோர்களில் யாராவது ஒருவருடைய தகவல்களை கொடுக்க வேண்டும். ஒருவேளை தந்தை இறந்திருந்தால் தாயின் பெயரை கொடுக்க வேண்டும். நீங்கள் யாருடைய தகவலை கொடுத்தீர்கள் என்பதை கீழே உள்ள கட்டத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

Question : 7

Address 

        இதில் நீங்கள் உங்களுடைய Residence Address முகரியை கொடுத்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் உங்களுடைய கம்பெனி அல்லது டிரஸ்ட் க்கு விண்ணபித்தால் அதனுடைய முகவரியை Office Address இல் கொடுத்துக் கொள்ளுங்கள்.

Question : 8

Address for Communication 

        உங்களை தொடர்பு கொள்வது எப்படி என்று கேட்டுள்ளார்கள் நீங்கள் உங்களுடைய Residence Address கொடுத்திருந்தால் Resident box யும் அல்லது Office Address கொடுத்திருந்தால் Office box யும் கிளிக் பண்ணிக்கங்க.

Question : 9

Telephone Number & Email ID details

        Country Code இதில் நீங்கள் இந்தியாவில் இருந்தால் உங்களுடைய  Country Code +91 ஐ கொடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய Country Code எதுவோ அதை கொடுங்கள். Area/STD Code நீங்கள் Landline Number கொடுக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுடைய Area/STD Code ஐ கொடுத்துக் கொள்ளுங்கள். அல்லது Mobile Number கொடுக்க போகிறீர்கள் என்றால்  Area/STD Code என்று இருக்கும் இடத்தில் நீங்கள் ஏதும் கொடுக்க தேவையில்லை. Telephone/ Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய Landline Number அல்லது Mobile Number கொடுத்துக் கொள்ளுங்கள்.

Question : 10

Status of applicant 

        இதில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை கிளிக் செய்யுங்கள். அல்லது நீங்கள் கம்பெனி அல்லது டிரஸ்ட் வைத்துள்ளீர்கள் என்றால் அதற்கான Box ஐ கிளிக் செய்யுங்கள். அல்லது நீங்கள் எந்த ஒரு அரசாங்க வேளையிலும் இல்லை எந்த ஒரு கம்பெனியும் நடத்தவில்லை என்றால் Individual  Box ஐ கிளிக் செய்யுங்கள்.

Question : 11

Registration Number (for company, firms, LLPs etc.)

        நீங்கள் கம்பெனி அல்லது டிரஸ்ட் வைத்துள்ளீர்கள் என்றால் அதற்கான பதிவு எண்ணை கொடுக்க வேண்டும்.

Question : 12

In case of a person, who is required to quote  Aadhaar number/The Entrollment ID of Aadhaar application form as per section 139AA

        இதில் உங்களுடைய ஆதார் கார்டு நம்பரை கொடுக்க வேண்டும். ஒருவேளை இப்போது தான் ஆதார் கார்டுக்கு விண்ணபித்து உள்ளீர்கள் என்றால் விண்ணபித்தற்கான Entrolment ID number இரண்டாவதாக உள்ள கட்டத்தில் கொடுக்க வேண்டும். மூன்றவதாக உள்ள கட்டத்தில் உங்களுடைய பெயர் ஆதார் கார்டில் எப்படி உள்ளதோ அதே போன்று கொடுக்க வேண்டும்.
     

Question : 13

Source of Income 

        இதில் உங்களுக்கான வருமானம்  எப்படி பெறுகிறீர்கள் என்பதை க்ளிக் பண்ணிக்கங்க. உங்களுக்கு எந்த வருமானமும் இல்லை என்றால் No Income என்னும் box யும். கொடுக்கப்பட்ட Option களில் இல்லாமல் நீங்கள் வேறு வழியில் வருமானம் பெறுகிறீர்கள் என்றால் Income from other sources என்னும் Box அ கிளிக் பண்ணிக்கங்க.

Question : 14

Representative Assessee (RA)

        நீங்கள் Minor ஆக இருந்தால் இந்த விண்ணப்பத்தில் Minor ன் போட்டோ ஓட்ட வேண்டும். ஆனால் Minor க்கு பதில் கையெழுத்தை பெற்றோர்களில் யாரவது ஒருவர் கையொப்பம் போட வேண்டும்.  Minor க்கு பதில் யார் கையெழுத்தை போட்டார்களோ அவருடைய பெயர் மற்றும் முகவரியை கொடுக்க வேண்டும்.

Question : 15

Documents submitted as Proof of Identify (POI), Proof of Address (POA) and Proof of Date of Birth (DOB)

        இதில் நீங்கள் மூன்று Document களை சமர்பிக்க வேண்டும். 
1.உங்களுடைய பெயர் உள்ள சான்று
2. முகவரி சான்று
3. பிறப்பு சான்று
        இந்த மூன்று சான்றுகளும் உள்ள ஒரே சான்றான ஆதார் கார்டை நீங்கள் கொடுக்கலாம். ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் உள்ளது அதாவது பிறந்த தேதி சரியாக இல்லை அல்லது முகவரி சரியாக இல்லாத பட்சத்தில் நீங்கள் உங்களிடம் உள்ள வேறு சான்றுகளை சமர்பிக்கலாம். எந்தெந்த சான்றுகளை கொடுகிறீர்களோ அதை ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பிட வேண்டும்.

 

Question : 16

    I/We 

            என்னும் இடத்தில் உங்களுடைய முழுப்பெயரையும் கொடுங்கள். in the capacity of என்னும் இடத்தில் நீங்கள் ஆணாக இருந்தால் Him Self என்றும் பெண்ணாக இருந்தால் Her Self என்றும் கொடுங்கள். Place என்னும் இடத்தில் உங்களுடைய ஊர் பெயரை கொடுங்கள். Date என்னும் இடத்தில் நீங்கள் இந்த Form என்று சமர்பிக்க போகிறீர்களோ அந்த தேதியை குறிப்பிடுங்கள். தேதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்களுடைய கையெழுத்தை போட வேண்டும்.

            மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !  


No comments

Powered by Blogger.