Doubts about caste certificate and its explanations l ஜாதி சான்றிதழ் குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்

Doubts about caste certificate and its explanations l ஜாதி Doubts about caste certificate and its explanations l ஜாதி சான்றிதழ் குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்

Doubts about caste certificate and its explanations l ஜாதி சான்றிதழ் குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்
Doubts about caste certificate and its explanations

1) நான் வேறு ஜாதி என் மனைவி வேறு ஜாதி இப்படி இருக்க நாங்கள் எந்த ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதல் பெற முடியும்?

    
            நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு அப்பாவினுடைய ஜாதியிலும் ஜாதி சான்றிதழ் பெற முடியும். அம்மாவினுடைய ஜாதியிலும் ஜாதி சான்றிதழ் பெற முடியும். ஆனால் நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு யாருடைய ஜாதியில் ஜாதி சான்றிதழ் பெற வேண்டும் என்பதை பெற்றோர் இருவரும் சேர்ந்து முடிவு செய்து அதன் பிறகு நீங்கள் உங்கள் குழந்தைக்கு அப்பா அல்லது அம்மா இருவரில் யாரவது ஒருவருடைய ஜாதியில் ஜாதி ஜாதி சான்றிதழ் பெற முடியும். நீங்கள் ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப படிவத்தில் பெற்றோர் இவருடைய ஜாதியையும் கொடுத்துவிட்டு அதில் குழந்தைக்கு எந்த ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற விரும்புகிறீர்கள் என்று கேட்பார்கள் அந்த இடத்தில் நீங்கள் குழந்தைக்கு எந்த ஜாதின் அடிப்படையில் பெற விரும்புகிறீர்களோ அதை தெரிவிக்கும் பட்சத்தில் அந்த ஜாதியின் அடிப்படையில் பெறலாம்.


2)Declaration Form இல் குழந்தைக்கு பதிலாக பெற்றோர்கள் கையொப்பம் இடலாமா?

             குழந்தையால் கையெழுத்து போட முடியாத சூழ்நிலையில் குழந்தைக்கு பதிலாக பெற்றோர்கள் கையொப்பம் இடலாம்.

3) பெற்றோரின் ஜாதி சான்றிதழ் இல்லாத சூழ்நிலையில் நான் எப்படி ஜாதி சான்றிதழை பெற முடியும்?

            பெற்றோரின் ஜாதி சான்றிதழ் இல்லாத சூழ்நிலையில் Sibling (உடன்பிறப்புகள்) அவர்களுடைய ஜாதி சான்றிதழை வைத்து பெற முடியும்.

4) உடன்பிறப்புகள் இல்லாத சூழ்நிலையில் நான் எவ்வாறு ஜாதி சான்றிதழ் பெற முடியும்?

            உடன்பிறப்புகள் இல்லாத சூழ்நிலையில் உங்களுடைய பள்ளி சான்றிதழை வைத்து ஜாதி சான்றிதழை பெற முடியும். அல்லது அம்மா மற்றும் அப்பாவுடன் பிறந்தவர்கள் யாரவது ஜாதி சான்றிதழ் வைத்து இருந்தால் அவர்களுடைய ஜாதி சான்றிதழை பயன்படுத்தி பெற முடியும்.


5)பெற்றோர்களுடன் பிறந்தவர்களிடமும் ஜாதி சான்றிதழ் இல்லையென்றால் நான் எவ்வாறு ஜாதி சான்றிதழ் பெற முடியும்?

         பெற்றோர்களுடன்  உடன் பிறந்தவர்களிடமும் ஜாதி சான்றிதழ் இல்லை என்றால் பெற்றோர்களுடன்  உடன் பிறந்த பிள்ளைகளிடம் உள்ள ஜாதி சான்றிதழை பயன்படுத்தி ஜாதி சான்றிதழை பெற முடியும். அல்லது இரத்த சமந்தப்பட்ட உறவுகளில் யார் ஜாதி சான்றிதழ் வைத்திருந்தாலும் அதை வைத்து ஜாதி சான்றிதழை பெற முடியும்.

6)நான் என் இரத்த சம்மந்தப்பட்ட உறவுகளில் ஒருவருடைய ஜாதி சான்றிதழை பெற்றுக்கொண்டேன் அதை வைத்து எப்படி ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது?

  1. போட்டோ 
  2. ஸ்மார்ட் கார்டு
  3. இரத்த சம்மந்தப்பட்ட உறவினரின் ஜாதி சான்றிதழ்        
        இந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள இ- சேவை மையங்களில் கொடுக்கும் போது அவர்கள் உங்களுடைய ஆவணங்களை ஏற்று உங்களுக்கான ஜாதி சான்றிதழை பெற்றுத் தருவார்கள்.

        இது போன்ற மேலும் பல தகவல்களை வீடியோவாக காண கீழே உள்ள எமது சேனல் லிங்கை கிளிக் செய்யுங்கள்....நன்றி
👇👇👇



No comments

Powered by Blogger.