How To Pay For TNEB Name Change Online
How To Pay For TNEB Name Change Online
tneb name change online |
TNEB யில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி?
tneb online |
STEP : 1
நாம் தற்போது TNEB யில் பெயர் மாற்றத்திற்கு ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். முதல்ல கூகுள் சர்ச் பாக்ஸில் TANGEDCO என்று டைப் பண்ணிட்டு சர்ச் கொடுங்கள். முதலில் வரும் ஆப்ஷனை கிளிக் பண்ணி ஓபன் பண்ணுங்க அடுத்த பக்கம் தோன்றும்.
tangedco login |
STEP : 2
இந்த பக்கத்திலுள்ள Apply Now என்னும் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அடுத்து LT New Service Connection / Name Transfer என்று ஒரு ஆப்ஷன் தோன்றும் அதை கிளிக் பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
tneb name change online |
STEP : 3
இந்த பக்கத்திலுள்ள Status என்னும் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அடுத்து View Application Status என்னும் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
tneb name change online |
STEP : 4
இந்த பக்கத்தில் நீங்கள் TNEB பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த போது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு Application Ref Number வந்திருக்கும். அந்த நம்பரை Application Ref Number என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து அருகிலுள்ள கட்டத்தில் Ref Number டைப் செய்யுங்கள். அல்லது Mobile Number என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து அருகிலுள்ள கட்டத்தில் Mobile Number டைப் செய்யுங்கள். அடுத்து Submit என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் அடுத்த பக்கம் தோன்றும்.
tneb name change online |
STEP : 5
இந்த பக்கத்தில் உங்களுடைய தகவல்கள் தோன்றும். இதில் Latest Status என்னுமிடத்தில் உங்களுடைய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பது தெரியும். நீங்கள் TNEB பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்து இதுவரை கட்டணம் செலுத்தவில்லையென்றால் Acknowledgement issued And Registration Charges Demand Raised. Pending For Registration Fee Payment என்று தோன்றும். அடுத்து அதற்கு கீழயே நீங்கள் பணம் செலுத்துவதற்கான Web Site லிங்க் கொடுத்திருப்பார்கள். அந்த Web Site க்குள் Enter ஆவதற்கு முன் இந்த பக்கத்திலுள்ள User Name & Password ஐ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
tneb name change online |
STEP : 6
இந்த Web Site ல் நீங்கள் குறித்து வைத்த User Name & Password ஐ டைப் பண்ணிட்டு Login பண்ணிக்கங்க அடுத்த பக்கம் தோன்றும்.
tneb name change online |
STEP : 7
இந்த பக்கத்தில் நீங்கள் TNEB பெயர் மாற்றத்திற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது தோன்றும். அதற்கு பக்கத்திலுள்ள Pay Bill என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கம் தோன்றும்.
tneb name change online |
STEP : 8
இந்த பக்கத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தை கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக செலுத்துவதற்கான ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள். அதன் மூலம் நீங்கள் பணம் செலுத்திய பிறகு பணம் செலுத்தியதற்கான ரசிது தோன்றும் அதை நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.
tneb name change online |
STEP : 9
மீண்டும் TNEB பெயர் மாற்றத்திற்கான நிலையை தெரிந்துக்கொள்ள மேலே கூறியது போல் இந்த பக்கத்தில் சென்று பார்த்தால் Latest Status என்னுமிடத்தில் Application Registred Pending Verification என்று தோன்றும். அதாவது உங்களுடைய பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், உங்களுடைய ஆதாரங்களை சரிபார்த்து பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அடுத்து உங்களுடைய ஆதாரங்களை சரிபார்த்து ஏழு நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்படும்.
🎥 TNEB பெயர் மாற்றதிற்கு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்
👉👉👇👇👇
நன்றி !
No comments