How To Open An Indian Bank Account Online
indian bank account online |
Introduction :
இந்தியன் வங்கி கணக்கை ஆன்லைன் மூலம் இலவசமாக ஓபன் செய்வது எப்படி என்பதை பற்றி இப்போது பாப்போம்.
indian bank |
STEP : 1
முதல்ல கூகுள் சர்ச் பாக்ஸில் Indian Bank online account opening என்று டைப் செய்து சர்ச் கொடுங்கள். முதலில் வரும் ஆப்ஷனை கிளிக் பண்ணி ஓபன் பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
online indian bank |
STEP : 2
இந்த பக்கத்தில் உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், இமெயில் போன்றவற்றை டைப் செய்யுங்கள். அடுத்து கீழே உள்ள படத்திலுள்ள எழுத்துக்களை மேலே உள்ள கட்டத்தில் டைப் செய்யுங்கள். அடுத்து I accept the Terms and Conditions என்னும் கட்டத்தை கிளிக் செய்தால் நீங்கள் கணக்கை துவங்க என்னென்ன விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளது என்பது தோன்றும் அதை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
STEP : 3
அடுத்து I accept the Terms and Conditions என்னும் கட்டத்தை கிளிக் செய்தது போலவே அதற்கு கீழே உள்ள எல்லா கட்டங்களையும் கிளிக் செய்யுங்கள். அடுத்து Submit கொடுப்பதற்கு முன் அதற்கு மேலே கொடுத்துள்ள தகவலை படித்து பாருங்கள். இதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் நீங்கள் இன்னும் ஆதார் கார்டு உடன் மொபைல் நம்பர் இணைக்கவில்லை என்றால் அதை முதலில் இணைத்து விட்டு அதன் பிறகு இந்த அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க என்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.
STEP : 4
ஏனெனில் அதாருடன் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வந்துதான் அடுத்த பக்கத்திற்கு செல்லும். எனவே இதுவரை நீங்கள் இன்னும் ஆதார் கார்டில் மொபைல் எண் இணைக்கவில்லை என்றால் அல்லது ஆதார் கார்டில் மொபைல் நம்பர் லிங்க் பண்ணியிருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது எப்படி என்பதை பற்றிய வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
👉👉👇👇👇👇
STEP : 5
அடுத்து Submit என்பதை கிளிக் செய்தால் ஒரு pop-up window தோன்றும்.
open indian bank account online |
STEP : 6
இதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் அந்த ஓடிபி டைப் செய்த பிறகே அடுத்த பக்கத்திற்கு செல்லும் என்பதை குறிப்பிட்டிருக்காங்க. அதை OK கொடுத்துகங்க.
indian bank account opening |
STEP : 7
இந்த பக்கத்தில் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வந்த ஓடிபி ஐ டைப் செய்து Verify OTP என்பதை கிளிக் செய்தால்
indian bank zero balance account |
STEP : 8
OTP has been verified Successfully! என்று இன்னொரு pop-up Window தோன்றும். அதை ஓகே கொடுத்துகங்க. அடுத்த பக்கம் தோன்றும்.
indian bank account opening form online |
STEP : 9
இந்த பக்கத்தில் உங்களுடைய ஆதார் எண் டைப் செய்து Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
indian bank account online |
STEP : 10
அடுத்து நீங்க ஆதார் கார்டுடன் லிங்க் செய்துள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்பட்டுள்ளது என்று ஒரு Pop up Window தோன்றும். அதை OK கொடுத்துகங்க.
indian bank account online |
STEP : 11
அடுத்து உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வந்த ஓடிபி ஐ இந்த பக்கத்தில் டைப் செய்து Verify Aadhaar OTP என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கம் தோன்றும்.
indian bank account online |
STEP : 12
இந்த பக்கத்தில் உங்களுடைய ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் தோன்றும். அடுத்து கீழே உள்ள Other Details என்னுமிடத்தில் உங்களுடைய மாநிலம், மாவட்டம், தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்களுடைய மாவட்டத்தில் உள்ள எந்த வங்கி கிளையில் கணக்கை தொடங்க போகிறீர்களோ அந்த கிளையை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்களுடைய திருமண நிலை அதாவது திருமணம் ஆகவில்லையா அல்லது திருமணம் ஆகி விட்டதா என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்களுடைய அப்பா பெயரை டைப் செய்யுங்கள். திருமணம் ஆன பெண்களாக இருந்தால் கணவருடைய பெயரை டைப் பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய அம்மா பெயரையும் டைப் பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய தொழில் எதுவோ அதை தேர்வு செய்யுங்கள். அதாவது நீங்கள் படித்துக்கொண்டிருந்தால் Student என்பதையும் ஓய்வூதிய நபராக இருந்தால் Retired Person என்பதையும் தேர்வு செய்யுங்கள். மற்றவர்கள் Others என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்களுடைய பான் கார்டு நம்பரை டைப் செய்து Verify என்பதை கிளிக் செய்தால்
ib-digi online sb accountopening |
STEP : 13
மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று Error தோன்றுகிறதா அதை OK கொடுத்துக்கங்க.
Indian Bank Account Online |
STEP : 14
அடுத்து பான் கார்டு கட்டத்திற்கு கீழே உள்ள பாக்ஸ் கிளிக் செய்யுங்கள். அந்த பாக்ஸ் கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய ஆதார் கார்டில் உள்ள முகவரி கீழே உள்ள பெரிய கட்டத்தில் தோன்றும். ஒருவேளை உங்களுடைய முகவரியானது ஆதார் கார்டில் தவறாக இருந்தால் நீங்களே உங்களுடைய முகவரியை பெரிய கட்டத்தில் டைப் பண்ணிக்கங்க. அடுத்து பான் கார்டு Verify என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால்
Indian Bank Account Online |
STEP : 15
Your PAN has been validates Successfully! என்று தோன்றும். அதை OK கொடுத்துகங்க.
Indian Bank Account Online |
STEP : 16
அடுத்து Create SB Account என்பதை கிளிக் செய்யுங்கள்.
Indian Bank Account Online |
STEP : 17
அடுத்து உங்களுக்கான வங்கி கணக்கு எண் தோன்றும். மேலும் அதில் உங்களுக்கான விண்ணப்ப படிவம் உங்களுடைய இமெயில் க்கு அனுப்பப் பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
Indian Bank Account Online |
STEP : 18
உங்களுடைய இமெயில் ஐடி யில் உள்ள விண்ணப்ப படிவத்தையும் அதனுடன் ஆதார் கார்டு பான் கார்டு ஜெராக்ஸ்யும் இணைத்து உங்களுடைய வங்கி கிளையில் சென்று கொடுத்தால் அவர்கள் உங்களுடைய தகவல்களை சரிபார்த்து வங்கி கணக்கு புத்தகத்தை வழங்குவார்கள்.
🎥 இந்தியன் வங்கி கணக்கை ஆன்லைன் மூலம் தொடங்குவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்
👉👉👇👇👇
நன்றி !
Post a Comment