How To Transfer Join Patta To Individual Patta


How To Transfer Join Patta To Individual Patta

 

kootu patta to individual patta in tamil
patta to individual patta

Introduction :   

        பட்டாவை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று கூட்டுபட்டா மற்றொன்று தனிபட்டா இதில் கூட்டுபட்டா என்பது ஒரு இடத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரே சர்வே எண் மற்றும்  ஒரே பட்டா எண் இருப்பது தான் கூட்டுபட்டா. அதுவே தனிப்பட்டா என்பது ஒரு இடத்திற்கு ஒரே ஒரு நபர் மட்டும் இருப்பார். அவருக்கென்று ஒரு பட்டா நம்பரும் சர்வே நம்பரும் வழங்கப்பட்டிருக்கும். 

 

 பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன?

PART : 1

   இந்த கூட்டு பட்டாவில் உள்ள அனைவரும் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் ஆவர். இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் இந்த கூட்டு பட்டாவில் உள்ள ஒருவர் மட்டும் தனிபட்டா பெற முடியுமா என்றால் பெற முடியும். அப்படியென்றால் தனிபட்டா வேண்டும் என்று கேட்பவருக்கே அந்த மொத்த சொத்தின் மீதும் உரிமை வந்துவிடுமா என்றால் அப்படி கிடையாது. பரம்பரை சொத்தை வாரிசுகள் பெயரில் கூட்டுபட்டாவாக மாற்றியிருப்பார்கள். பத்திரத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிலம் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். 

PART : 2

      இது போன்று கூட்டுபட்டாவிலிருந்து ஒரு தனிநபர் தன்னுடைய நிலத்திற்கு தனிபட்டா கோருகிறார் என்றால் அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை அதாவது கிரையம் அல்லது தான செட்டில்மென்ட் பத்திரம், வில்லங்கச் சான்று, பாகப்பிரிவினை பத்திரம், நில வரைபடம் (FMB), அடுத்து உங்களுடைய ஆதார்அட்டை, போட்டோ இந்த ஆவணங்களை எல்லாம் கொடுத்த பிறகு சர்வேயர் உங்களுடைய நிலத்தை அளப்பார். அதன்பிறகு உங்களுடைய நிலத்திற்கு மட்டும் ஒரு நில வரைபடம் வரையப்பட்டு உங்களுக்கு தனிபட்டா வழங்கப்படும். 


நில வரைபடம் ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?


PART : 3

ஒருவேளை கூட்டுபட்டாவில் உள்ள ஒரு நபர் இறந்துவிட்டால் அந்த நிலத்தை இறந்தவருடைய மகன் அல்லது மகள் பெற இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்றிதழ் கட்டாயம் தேவை. 

 

வாரிசு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பெறுவது எப்படி?

PART : 4

        நீங்கள் கூட்டுபட்டாவை தனிபட்டாவாக மாற்ற ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதற்கு உங்களுக்கு அருகிலுள்ள CSC Center-ல் உங்களுடைய ஆவணங்களை கொடுத்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு வழங்குவார்கள். அந்த ஒப்புகைச் சீட்டுடன் இறப்புச் சான்று, வாரிசு சான்று, பட்டா, வில்லங்கச் சான்றும், அதனுடன் மனு ஒன்றும் எழுதி அதை நீங்கள் ஒரு நகல் வைத்துக்கொண்டு மற்றொரு நகலை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்க வேண்டும். மனுவில் அரசாணை (நிலை) எண் : 73 நாள்: 11.06.2018 என்பதை எழுத வேண்டும். 


PART : 5

        மனு கொடுத்த பிறகு அதற்கான ரசீதை கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் நேரில் சென்று கொடுக்க முடியவில்லையென்றால் Register Post உடன் Acknowledgement Card இணைத்து அனுப்புவது நேரில் சென்று கொடுப்பதை விட சிறந்தது. அதன் பிறகு உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்து தனிபட்டா வழங்கப்படும்.


PART : 6

    இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது ஏனென்றால் நிலத்தை பொறுத்தும் சர்வேயருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். தனிபட்டாவிற்கு பாகப்பிரிவினை பத்திரம் இல்லாமல் தனிப்பட்டாவாக மாற்ற முடியாது.


      🎥கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது ( patta to individual patta) எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்

                            👉👉👇👇👇    


மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !

No comments

Powered by Blogger.