TN Treasury E-Challan Pay Online
TN Treasury E-Challan Pay Online
TN Treasury |
Instruction For Pay The Treasury E-Challan Online:
கருவூலம் E-Challan ஆன்லைன் மூலமாக கட்டுவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். Land approval, Building approval போன்று அனைத்து அரசு சம்மந்தாமான கட்டணங்களை செலுத்த முன்பெல்லாம் கருவூலம் அலுவலகத்திற்கு (Treasury Office) சென்று அங்கு ரசீது வாங்கி அதை பூர்த்தி செய்து வங்கியில் பணம் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்துவதற்கான வழிமுறைகள் வந்து விட்டது. அந்த வழிமுறைகளை பயன்படுத்தி பணத்தை ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
tn treasury |
STEP : 1
முதல்ல கூகுள் சர்ச் பாக்ஸில் IFHRMS HOME என்று டைப் செய்து சர்ச் கொடுங்கள். முதலில் வரும் ஆப்ஷனை கிளிக் பண்ணி ஓபன் பண்ணிக்கங்க. அடுத்து பக்கம் தோன்றும்.
tn treasury |
STEP : 2
இந்த பக்கத்தில் கீழ ஸ்க்ரோல் பண்ணிங்கனா E-Challan Creation Payment என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கம் தோன்றும்.
tn pay slip |
STEP : 3
இந்த பக்கத்தில் செலுத்துபவர் வகை (Remitter Type) என்னுமிடத்தில் Pubic ஆப்ஷன் தேர்வு செய்யுங்கள். அடுத்து செலுத்துபவர் பெயர் (Remitter Name/DDO Name) என்னுமிடத்தில் யாருடைய பெயரில் கட்டணம் செலுத்த போகிறீர்களோ அவருடைய பெயரை டைப் பண்ணிக்கங்க. வருமான வரி கணக்கு எண் (PAN) என்னுமிடத்தில் உங்களுடைய பான் எண்ணை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம் அல்லது தேவையில்லை. Contact No(For receiving OTP & Challan Number ) என்னுமிடத்தில் உங்களுடைய மொபைல் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கொடுக்கும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
STEP : 4
வட்டாரம்/தெரு (Block/Street) என்னுமிடத்தில் உங்களுடைய தெரு பெயரையும், நகரம்/கிராமம் (City / Town / Village) என்னுமிடத்தில் உங்களுடைய ஊர் பெயர் அல்லது மாவட்டத்தின் பெயரையும், மாநிலம் (State) என்னுமிடத்தில் உங்களுடைய மாநிலத்தின் பெயரையும், அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) என்னுமிடத்தில் உங்களுடைய ஊரின் Pincode நம்பரையும் டைப் பண்ணிக்கங்க. ஆதார் அடையாள எண் (Aadhaar No) என்னுமிடத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் பணம் செலுத்த போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக ஆதார் எண் கொடுக்க வேண்டும். மற்றபடி என்றால் தேவையில்லை.
STEP : 5
மின்னஞ்சல் E-mail (For Receiving Challan PDF copy) என்னுமிடத்தில் உங்களுடைய இ-மெயில் ஐடி கொடுப்பதன் மூலம் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை இ-மெயில் மூலம் PDF ஆக பெற முடியும். கால கட்டம் (Period Details) இந்த கால கட்டம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
STEP : 6
துறை விவரங்கள் (Department Details) என்னுமிடத்தில் முதலில் உங்களுடைய மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள். துறையின் பெயர் (Department Receiving Receipts) என்னுமிடத்தில் எந்த துறைக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டுமோ அந்த துறையை தேர்வு செய்யுங்கள். DDO Name நீங்கள் தேர்வு செய்துள்ள துறையில் உள்ள எந்த அலுவலகத்திற்கு பணம் செலுத்த போகிறீர்களோ அந்த அலுவலகத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்து பணம் பெற்று வழங்கும் அலுவலரின் குறியீட்டு எண் (DDO Code) அடுத்த கட்டத்தில் தோன்றும்.
tn payslip |
STEP : 7
OTP என்னுமிடத்தில் உங்களுடைய மொபைல் எண்ணை டைப் செய்து Generate OTP என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி அடுத்த கட்டத்தில் டைப் செய்யுங்கள்.
STEP : 8
அடுத்து சேவை விவரம் (Service Details) என்பதில் முதலில் கீழே உள்ள கட்டத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்து வரவின் வகை (Receipt Type) என்னுமிடத்தில் நீங்கள் மேலே துறையின் பெயரில் எந்த துறையை தேர்வு செய்தீர்களோ அந்த துறை சமந்தமான வகைகள் தோன்றும். இதில் Receipt From Survey and Settlement Operation என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்து Sub Type என்னுமிடத்தில் வரவின் வகையில் என்ன தேர்வு செய்தீர்களோ அதையே துணை வகையிலும் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து கணக்குத் தலைப்பு (Acct Code) என்பது தோன்றும். அடுத்து Amount என்னுமிடத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை டைப் செய்யுங்கள்.
STEP : 9
அடுத்து துரையின் குறிப்பு எண் (Department Ref.No.) என்னுமிடத்தில் ஒருவேளை நீங்கள் நிலத்திற்கான கட்டணத்தை செலுத்த போகிறீர்கள் என்றால் அந்த நிலத்தின் சர்வே எண் மற்றும் அந்த கிராமத்தின் பெயரையும் டைப் செய்ய வேண்டும். அடுத்து சேர்க்க (Add Row) என்பதை தேர்வு செய்து உங்களுக்கு வேறு ஏதேனும் நிலத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால் அதை சேர்த்து கொள்ளலாம். நீக்குக (Delete Row) என்பதை தேர்வு செய்து தேவையில்லாத Row வை நீக்க முடியும்.
STEP : 10
Payment Details என்பதில் Select Bank for Payments என்பதை தேர்வு செய்தால் 4 வங்கிகளின் பெயர்கள் தோன்றும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இந்த 4 வங்கிகள் மூலம் நீங்கள் உங்கள் வங்கியை தேர்வு செய்து பணத்தை செலுத்த முடியும். செலுத்தும் முறை (Payment Method) நீங்கள் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்துவதால் Online என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்து Submit என்பதை தேர்வு செய்து பணத்தை செலுத்திய பிறகு பணம் கட்டியதற்கான ரசீது தோன்றும் அதை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
🎥 கருவூலம் E-Challan ஆன்லைன் மூலமாக கட்டுவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்
👉👉👇👇👇
நன்றி !
No comments