VR KNOWLEDGE ATOZ is your go-to platform for the latest updates on Jobs, Internet Services, and Government Schemes. We aim to empower users with accurate and timely information, covering career opportunities, tech insights, and public welfare programs. Stay informed with expert-curated articles, trending topics, and in-depth guides to make the most of every opportunity. Explore a world of knowledge tailored to your needs at VR KNOWLEDGE ATOZ. Keywords: Jobs, Internet Services, Government Schemes
Home/Politics/What Are The Duties Of Panchayat Ward
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரின் கடமைகள் மற்றும் உரிமைகள் என்னென்ன?
கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 7 உறுப்பினர்களுக்கு குறையாமல் 15 உறுப்பினர்களுக்கு மிகாமலும் உள்ளனர். வார்டு உறுப்பினர்களுக்கான பதவி காலம் 5 ஆண்டுகள்.
பகுதி : 1
மூன்றடுக்கு உள்ளாட்சியில் கிராம ஊராட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வார்டு உறுப்பினர்கள் தான் ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒருவர் ஆவார். ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர் ஊராட்சி தலைவரால் பதவி பிரமாணம் செய்யப்பட்டு பதவியேற்கிறார். அது முதல் அவர் பணி தொடங்குகிறது.
பகுதி : 2
வார்டு உறுப்பினரால் மட்டுமே மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் மக்களின் குறைகளை கேட்டு அதை தீர்த்து வைக்கும் கடமை இவர்களுக்கு உண்டு. வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஊராட்சியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பணியாற்றலாம். தங்கள் மக்களின் கோரிக்கைகளை பொதுவான பிற தேவைகளை தலைவரிடம் எடுத்துச் சொல்லலாம். ஊராட்சி மன்றம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வருகிறது என்றால் அதற்கு வார்டு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.
பகுதி : 3
கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் வார்டு கோரிக்கைகளை இணைக்கலாம். மாதம் தோறும் நடக்கும் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு தனது வார்டு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த பணியாற்றலாம்.
பகுதி : 4
panchayat ward
மக்களுக்கான நலத்திட்டங்களை மாதாந்திர மற்றும் வருடாந்திர திட்டங்களை ஒரு அறிக்கையாக தயாரித்து அந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினால் அந்த திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். கிராமசபை அஜண்டாவில் தனது வார்டு மக்களின் கோரிக்கைகளையும் வார்டுக்கான பொதுப்பணித் தேவைகளையும் இணைக்கலாம்.
பகுதி : 5
panchayat ward
கிராமசபை கூட்டத்தில் வார்டில் உள்ள மக்களுக்கான தேவைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு தனது வார்டு மக்களுக்கு ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றியும் கிராமசபா நடக்க போகிறது என்றால் அதை ஒரு வாரத்திற்கு முன்பே மக்களிடம் கிராம சபை என்றால் என்ன? அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் தெரியப்படுத்தி மக்களை கிராம சபாவில் கலந்து கொள்ள வைப்பதும் ஒரு வார்டு உறுப்பினரின் கடமையாகும்.
பகுதி : 6
panchayat ward
கிராம சபையில் நீங்க ஒரு கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் எடுத்துகாட்டாக தண்ணீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, போன்ற உங்களுடைய பகுதிக்கு தேவையானவற்றை கிராம சபாவில் தெரிவிக்கும் பொழுது அதை ஒரு தீர்மானமாக ஏற்றுக்கொண்டு அதை கண்டிப்பாக நிறைவேற்றி கொடுப்பார்கள்.
பகுதி : 7
என்னென்றால் அடுத்த கூட்டம் நடைபெறும் போது ஏற்கனவே கொடுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப் படாமல் இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரியப்படுத்த வேண்டும். எனவே நீங்கள் கொடுத்த கோரிக்கையை தீர்மானமாக அவர்கள் எடுத்துக் கொண்டால் அதை கண்டிப்பாக நிறைவேற்றி கொடுப்பார்கள். கிராம சபாவில் வைக்கப்படும் கோரிக்கைகளை வார்டு உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு அதை நிறைவேற்றுவதும் அவருடைய கடமையாகும்.
பகுதி : 8
ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனை சுட்டிக்காட்டலாம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள், தனிநபர்கள், அமைப்புகள், மீது ஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்கவும் புதிய அச்சுறுத்தல் தரும் நிறுவனங்கள் வருவதாக இருந்தால் அதற்கு ஊராட்சி அனுமதி தர மறுக்க வேண்டும் என வார்டு உறுப்பினர் வலியுறுத்தலாம்.
பகுதி : 9
அவசர காலங்களிலும், நோய்த்தொற்று காலங்களிலும், மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை களைய மக்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தி மக்களை பயனடையச் செய்யலாம். மேலும் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகள் அதாவது ரேஷன் கார்டு திட்டங்கள், விதவை பணம், திருமண உதவித்தொகை போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி பயனடைய செய்வதும் வார்டு உறுப்பினரின் கடமையாகும்.
பகுதி : 10
வார்டு உறுப்பினர் ஊராட்சி கூட்ட அறிவிப்பை பெற்றுக்கொண்டு அஜண்டா குறித்து மக்களுடன் கலந்து ஆலோசித்து அதில் மக்களுக்கு தேவையான கருத்தை தெரிந்து கொண்டு அதை கூட்டத்தின் பேசலாம். உறுப்பினரின் உரிமைகளுக்கு ஏற்ப ஊராட்சிக்கு தேவையான ஒரு திட்டத்தையோ, வார்டுக்கு தேவையான ஒரு செயலையோ அதாவது குழந்தைகளுக்கான கல்வி, தண்ணீர், சாலை வசதி, மின்சாரம் போன்ற தேவைகளை நிறைவேற்றித் தருவதும் அதை ஒரு தீர்மானமாக கொண்டுவருவதும் வார்டு உறுப்பினரின் கடமையாகும்.
பகுதி : 11
மேலும் வார்டு உறுப்பினர் ஊராட்சி நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமையையும், எழுத்து மூலம் கேள்வி எழுப்பும் உரிமையும், ஊராட்சியின் எல்லா ஆவணங்களையும் பார்வையிடும் உரிமையும் உள்ளது. இவ்வாறு மக்களுக்கு பணி செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஊராட்சியின் நிர்வாகத்தோடு இணைந்து தனது சுய விருப்பு வெறுப்புகளை களைந்து கிராம வளர்ச்சிக்கும் வார்டு மக்களின் நலனுக்கும் துணை நின்று பணி செய்வதே கிராம வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று.
பகுதி : 12
MLA, MP Election எல்லாம் கட்சியை சார்ந்து தான் ஓட்டு போடுவார்கள். ஆனால், வார்டு கவுன்சிலரை மட்டும் தான் நல்லவரா, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பாரா என்பதை தெரிந்து கொண்டு வாக்களிப்பார்கள். அவ்வளவு உயர்ந்த பதவி இந்த வார்டு உறுப்பினர் பதவி.
பகுதி : 13
வார்டு உறுப்பினர் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் மக்களுடைய குறைகளை மேலிடத்தில் கூறி அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருபவர்.
வார்டு உறுப்பினர் பதவி உருவானது எப்படி?
இந்த வார்டு கவுன்சிலர் பதவி எப்படி வந்தது என்றால் 1936 ல் பிரிட்டிஷ் ஆட்சியில் வார்டு கவுன்சிலராக ஒருவரை நியமித்தார்கள்.
இவர் தான் மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள ஒரு பிரதிநிதி. மக்களின் குறைகளை கேட்டு மேலிடத்தில் தெரிவிப்பார். இவ்வாறு வந்ததே இந்த பதவி. மக்கள் நலனில் அக்கறை கொண்டவரே வார்டு கவுன்சிலராக தகுதியானவர்.
🎥 What Are The Duties Of Panchayat Wardஎன்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
No comments