Head Ads

முதியோர் பிரச்சனைக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண் 
National Helpline for Sr Citizen (Elder Line - 14567)




        முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், மத்திய சமூக நீதி அமைச்சகம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தமிழக அரசு இணைந்து  எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கியமான மாநிலங்களான தமிழ்நாடு, உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் Helpline Centers தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வசதி அனைத்து மாநிலங்களிலும் கூடிய விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

        முதியோர்கள் தங்கள் பிரச்சனைகளை தேர்விக்க இந்த கட்டணமில்லா எண் 14567 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனிப்பட்ட பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், மற்றவர்களால் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள்  போன்றவற்றை கூறி அதற்கான தீர்வை பெற முடியும். இந்த எல்டர் லைன் திட்டமானது TATA Trust மற்றும் NSE அறக்கட்டளையின் உதவியுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த வசதியானது April 28 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.

        மேலும் இந்த உதவி மையம் மூலமாக மன அழுத்த பிரச்சனைகள், கோபம் மற்றும் உறவு மேலாண்மை குறித்த விஷயங்களை கூறி மனநல ஆலோசனைகளை பெற முடியும்.

        ஓய்வூதியம் கிடைக்கவில்லை, வீடு இல்லை  என்றாலும் இந்த உதவி மையத்தை தொடர்பு கொள்ள முடியும் மேலும் சட்ட ரீதியான அனைத்து சந்தேகங்களையும் இந்த இலவச எண் 14567 மூலமாக இலவசாமாக கேட்டு தெரிந்துக்கொள்ள முடியும்.

        இந்த திட்டமானது TATA அறக்கட்டளை அமைப்பின் முயசியில், விஜயவாஹினி அறக்கட்டளையுடன் இணைந்து ஐதராபாத்தில் தெலுங்கானா அரசு ஒத்துழைப்புடன் 2017 ஆம் ஆண்டு இந்த உதவி மையம் துவங்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post
close