SBI ATM Franchise Bussiness l White Lable ATM l Tamil
SBI ATM FRANCHISE BUSINESS WHITE LABLE ATM
ATM என்பது Automatic Teller Machine. ATM ஆனது வங்கி மூலமாக வைக்கப்படுவதில்லை. அதை Business நடத்த விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வைக்க முடியும். இந்த ATM Business தொடங்குவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்? இந்த Business Start பண்ண என்னென்ன நிபந்தனைகள் Bank ஆனது கூறுகிறது என்பதை பற்றியும், இந்த Business Start பண்ண Training யார் கொடுப்பார்கள் என்பதை பற்றியும் இப்போது பார்ப்போம்.
இதில் அப்படி எவ்வளவு தான் Income கிடைக்கும்னு பார்த்தீங்கன்னா மாதம் 80,000/- வரை சம்பாதிக்க முடியும். இது ஒரு பாதுகாப்பான தொழில் ATM பயன்படுத்தாத நபர்களே ரொம்ப ரொம்ப குறைவுதான். இது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ATM மையங்களை நிறுவி அதன் மூலம் வருமானத்தை பெற ஒரு சிறந்த வழியாகும். இந்த ATM மையத்தை தொடங்க தேவையான Documents என்னென்ன பார்த்தீங்கன்னா அடையாளச் சான்று (Identification Proof) இந்த அடையாளச் சான்றுக்காக ஆதார் அட்டை (Aadhaar Card or Pan Card) அல்லது பான் கார்டு பயன்படுத்தலாம். அடுத்து முகவரி சான்று (Address Proof) முகவரி சான்றுக்காக ரேஷன் கார்டு அல்லது கரண்ட் பில் (Ration Card or Current Bill) போன்றவற்றை பயன்படுத்தலாம் அடுத்து பேங்க் பாஸ்புக் (Bank Passbook) போட்டோ (Photo), இமெயில் ஐடி (Email ID), Mobile Number, ஜிஎஸ்டி GST மற்றும் சொத்து மதிப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான Investment ரூபாய் 5 லட்சம். இந்த ஐந்து லட்சத்தில் 2 லட்சம் Security Deposit ஆக எடுத்துக் கொள்வார்கள். இந்த Amount Return பண்ணிடுவார்கள். மீதமுள்ள 300000 ATM Machine ல போடுவார்கள். இது One Time Investment ஒரு முறை Investment செய்து தொழில் தொடங்கிய பிறகு Automatic க்காக வருமானம் வந்து கொண்டு இருக்கும். இந்த ATM மையம் நிறுவுவதால் நமக்கு எப்படி வருமானம் கிடைக்கும்னு பார்த்தீங்கன்னா நீங்கள் நிறுவும் ATM ல் எவ்வளவு Withdraw நடக்கிறதோ அதை பொறுத்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதாவது கமிஷன் கிடைக்கும்.
அதாவது ஒரு நாளில் 250 Withdraw நடக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதற்கான Commission பார்த்தீங்கன்னா 45,000 முதல் 50,000 வரை கிடைக்கும். இதுபோன்று எந்த அளவிற்கு பண பரிவர்த்தனை நடக்கிறதோ அந்த அளவிற்கு வருமானத்தை பெற முடியும். அதாவது பணம் எடுக்கிறார்கள் என்றால் எட்டு ரூபாயும், Balance Check பண்ணுகிறார்கள் என்றால் அல்லது Transaction செய்கிறார்கள் என்றால் இரண்டு ரூபாயும் கிடைக்கும்.
இந்த ATM மையத்தை நிறுவ உங்களிடம் இருக்க வேண்டிய அடிப்படை தேவைகள் என்னென்ன பாத்தீங்கன்னா 30 முதல் 80 சதுர அடி அளவுள்ள இடம் தேவை. அதுவும் நிறைய பேர் வந்து போகும் இடமாக இருக்க வேண்டும். அதாவது நிறைய கடைகள் உள்ள இடமாக இருக்க வேண்டும். அப்படி நிறைய நபர்கள் வந்து போகும் இடமாக இருந்தால் தான் வருமானம் கிடைக்கும். நீங்கள் வைக்கும் ATM க்கு அருகில் 100 மீட்டருக்குள் வேறு எந்த ஏடிஎம் இருக்கக் கூடாது. அதுவும் நீங்கள் நிறுவும் ATM தரைத்தளமாக இருக்க வேண்டும். மாடியில் உள்ள இடத்திற்கு ATM நிறுவ Approval கொடுக்க மாட்டார்கள்.
ஏடிஎம் மையத்திற்கு Camera மற்றும் Security Guard இருக்க வேண்டும். அடுத்து நீங்கள் ATM நிறுவும் Machine க்கு எந்த நேரத்திலும் மின்சாரம் தடைபடாமல் கிடைக்க வேண்டும். மின் இணைப்பின் அளவு குறைந்த பட்சம் 1 KW கிலோ வாட் அளவில் இருக்க வேண்டும். மேலும் NOC அதாவது No Objection Certificate வாங்க வேண்டும். இதை உங்களுக்கு அருகில் உள்ள SBI BANK மூலமாக பெற முடியும். ATM நிறுவ முடிவு பண்ணிட்டீங்க இதை எப்படி Maintenance பண்ண வேண்டும். பணம் ATM ல் முடிய முடிய எப்படி அதில் மீண்டும் Amount போட வேண்டும். ATM CARD மாட்டிக் கொண்டால் அதை எப்படி எடுக்க வேண்டும் என்பது போன்ற Training எல்லாம் உங்களுக்கு SBI Franchise குழுவானது உங்களுக்கு Training கொடுப்பார்கள்.
அடுத்து Banking ATM அல்லாத White Lable ATM உள்ளது. இந்த White Lable ATM களை Non-Financial Company கள் Run பண்றாங்க Example க்கு பாத்தீங்கன்னா TATA INDICASH, MUTHOOT ATM, INDIA ONE போன்ற ATM களை White Lable ATM என்று சொல்வார்கள். இந்த Non-Financial Company ளுக்கு Reserve Bank ஆனது ATM மையம் அமைத்துக்கொள்ள Permission கொடுத்திருக்காங்க. இதுபோன்ற Financial Company கள் என்ன பண்ணுவாங்கன்னு அவங்களுக்கான Agent களை கண்டறிந்து அவர்களுக்கு Business தொடங்க ATM அமைத்துக் கொடுப்பார்கள்.
இந்த White Lable ATM நீங்களும் ஸ்டார்ட் பண்ண Online மூலம் விண்ணப்பிக்க இந்த Link ஐ Clik பண்ணிட்டு Webiste க்குள் Enter ஆனதும் Enquiry Now என்னும் Option ஐ Clik பண்ணிங்கன்னா Application Form Show ஆகும். அதை Fill Up பண்ணுவதன் மூலம் உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான Business ஐ Start பண்ணி கொடுப்பார்கள். இதேபோன்று ஒவ்வொரு Company க்கும் அவர்களுடைய Official Website ல் ATM Start பண்ணுவதற்கான Form கொடுத்திருப்பார்கள் அத Fill Up செய்து உங்களுடைய Business ஐ தொடங்குங்கள்.
🎥 SBI ATM Franchise Bussiness l White Lable ATM l Tamil வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
No comments