EB Name Transfer l Q & A l Tamil l VR Knowledge AtoZ

 EB Name Transfer Questions And Answer

EB Name Transfer


TNEB Name Transfer குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களையும் இப்போது பாப்போம்.

1) EB Service தாத்தா பெயரிலிருந்து அவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் எப்படி பெயர் மாற்றம் செய்வது?

        இதற்கு முதலில் நீங்கள் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்து அந்த வாரிசு சான்றிதழை வைத்து பெயர் மாற்றம் செய்யலாம்.

2) பழுதடைந்த நிலையில் உள்ள Meter Box அல்லது EB Meter Box ஐ குறித்த அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது எப்படி?

        9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு Complaint கொடுங்கள் சரி செய்து கொடுப்பார்கள்.

3) நிலம் உங்கள் பெயரில் இருந்து பட்டாவும் உங்கள் பெயரில் உள்ளது என்றால் Online ல் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

     தற்போது உள்ள மின் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய ஆன்லைனில் Without Consent Letter ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.


4) ஒரு குடும்பத்தில் மகன்கள் இரண்டு அல்லது மூன்று நபர்கள் இருக்கும்போது யாருடைய பெயரில் EB Name மாற்றம் செய்வது?

இதற்கு நீங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் கலந்து ஆலோசித்து யாராவது ஒருவர் பெயரில் மாற்றிக் கொள்ள வேண்டும்.


5) Online ல் விண்ணப்பித்த பிறகு EB Office ல் Proof ஏதாவது கொடுக்க வேண்டுமா?

நீங்கள் Online ல் விண்ணப்பித்த பிறகு வேறு எந்த Proof-ம் யாரிடமும் கொடுக்க தேவையில்லை. நீங்கள் Online ல் சரியான Proof Upload பண்ணாத பட்சத்தில் நீங்கள் EB அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருக்கும்.


6)EB Connection Disconnect பண்ண என்ன பண்ண வேண்டும்?

நீங்கள் என்ன காரணத்திற்காக EB Connection Disconnect பண்ண போகிறீர்கள் என்பதை ஒரு Letter ஆக எழுதி EB Office ல் கொடுத்தால் அவர்கள் வந்து Disconnect பண்ணி தருவார்கள்.


7) Online Payment Reject ஆனால் என்ன செய்வது?

நீங்க Online ல் செலுத்திய Amount Reject ஆனாலோ அல்லது Online Application Reject ஆனாலோ அதற்கான Amount ஐ திரும்ப பெற உங்களுடைய Area Assistant Engineer இடம் மனு எழுதி கொடுப்பதன் மூலம் Amount ஐ திரும்ப பெற முடியும்.


8) EB Connection உங்கள் பெயரில் வாங்க என்ன பண்ண வேண்டும்?

வீடானது உங்களுடைய தாத்தா பெயரிலோ அல்லது அப்பா பெயரில் இருந்து உங்கள் பெயருக்கு மாற்றம் செய்திருக்க வேண்டும். அடுத்து உங்கள் பெயரில் Property Tax (வீட்டு வரி ரசீது) வீட்டு வரி ரசீது தற்போது உள்ள வருடம் வரை செலுத்தி விட்டு நீங்கள் EB Name Transfer க்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் வாங்கும் நிலத்தின் வீட்டு வரி ரசீது நிலம் கொடுப்பவரின் பெயரில் இருந்தால் வீட்டு வரி ரசீது உங்கள் பெயரில் மாற்றிக்கொண்டு EB Connection க்கு விண்ணப்பியுங்கள். Agri பெயர் மாற்றம் செய்ய உரியவர் உயிருடன் உள்ள பொழுது உயில் கண்டிப்பாக தேவை.


9) EB இரண்டு Connection இருந்தால் ஒரே ஒரு விண்ணப்பம் கொடுத்து பெற முடியுமா?

EB Service Connection இரண்டு உள்ளது என்றால் நீங்கள் Name Transfer பண்ண ஒவ்வொரு Connection க்கும் தனித்தனியாக தான் விண்ணப்பிக்க முடியும்.


10) Online ல் விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

Online ல் விண்ணப்பிக்கும் போது கிரைய பத்திரமும் பட்டாவும் வைத்து விண்ணப்பிக்கலாம் அல்லது வீட்டு வரி ரசீதும் கிரைய பத்திரமும் வைத்து விண்ணப்பிக்கலாம். Do Death Category க்கு Property Tax உடன் Death Certificate ம் வைக்க வேண்டும். உங்களுக்கு Online ல் விண்ணப்பிக்கும் போது சரியான ஆவணங்கள் அல்லது உங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றால் EB Office க்கு நேரில் சென்று விண்ணப்பியுங்கள்.


11) வீட்டு பத்திரம் மட்டும் தான் உள்ளது பட்டா இல்லை என்றால் EB Name Change பண்ண முடியுமா?

கண்டிப்பாக மாற்ற முடியும். Form 5 என்பது உரிமையாளர் அனுமதி சான்று. தந்தை இறந்ததிலிருந்து EB பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தால் Form 3 and Form 4 உடன் வீட்டு வரி ரசீதும் இணைக்க வேண்டும். Form 3 என்பது இறந்தவர்களுக்காக Fill up பண்ணுவது. Form 4 ல் உங்களுடைய பெயர் தந்தை பெயர் சாட்சிகள் மற்றும் விண்ணப்பதாரர் கையொப்பம் போன்ற Details மட்டும் கொடுத்தால் போதும். Form 4 ஐ நீங்கள் Bond Papper ல் Print பண்ண தேவையில்லை. A4 Paper ல் எடுத்தாலே போதுமானது.


* முன்பெல்லாம் கூரை வீட்டிற்கு அட்டு Service என்று light Service Connection மட்டும் கொடுத்திருப்பார்கள் அவர்கள் EB Connection பெற உங்கள் Area Assistant Engineer ஐ சந்தித்து அவரிடம் கூறினால் உங்களுக்கு Meter Box வைத்து தருவார்கள்.


* EB ல் பெயர் மாற்றம் மற்றும் முகவரி மாற்றத்திற்கு நீங்கள் எந்த ஒரு Amount ம் செலுத்த தேவையில்லை. உங்களுடைய Area Assistant Engineer ஐ சந்தித்து மனு கொடுத்தால் போதும் அவர் உங்களுக்கு மாற்றிக் கொடுப்பார்.


* விவசாய Service Connection தந்தை பெயரில் இருந்து அவர் இறந்திருந்தால் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வைத்து பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

* நீங்கள் அரசாங்க நிலத்தில் குடியிருந்து சொத்து வரி கட்டுகிறீர்கள் என்றால் அந்த சொத்து வரி ரசீதை வைத்து பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

* With Concent Letter என்பது பழைய Owner பெயரில் உள்ள EB Connection ஐ தன்னுடைய பெயரில் மாற்றுவதற்காக பயன்படுத்துவது.

*Without Concent Letter என்பது யாரிடமும் Signature வாங்காமல் விண்ணப்பிக்கும் முறை. இந்த Without Concent Letter ஐ பயன்படுத்த போகிறீர்கள் என்றால் கிரைய பத்திரம் இருக்க வேண்டும்.

* EB ல் பெயர் மாற்றம் ஆவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்றால் 7 முதல் 14 நாட்கள் ஆகும்.



🎥EB Name Transfer l Q & A l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇




மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.

👉👉👇👇👇

VR Knowledge AtoZ


நன்றி !




No comments

Powered by Blogger.