CM Cell Petition l Write Letter l Tamil l VR Knowledge AtoZ
CM CELL PETITION WRITE LETTER IN TAMIL
CM Cell Petition |
நாம இந்த Article களில் உங்களுடைய புகாரை ஒரு வெள்ளை தாளில் கைப்பட எழுதியோ (அ) Computer ல் Type செய்தோ அனுப்புவதற்கான Format ஐ தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
CM Cell Letter Format |
இதில் முதலில் அனுப்புதல் என்று Type பண்ணிட்டு அல்லது எழுதிட்டு உங்களுடைய பெயர், உங்களுடைய அப்பா பெயர், உங்களுடைய முகவரியில் கதவு எண், தெரு பெயர், ஊர் பெயர், மாவட்டத்தின் பெயர், அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் Mobile Number ஐ Type பண்ணிக்கங்க.
அடுத்து பெருநர் என்று Type பண்ணிட்டு உயர்திரு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், முதலமைச்சர் தனிப்பிரிவு தலைமைச் செயலகம், சென்னை 600009. என்னும் முகவரியை Type பண்ணிக்கங்க.
அடுத்து மதிப்பிற்குரிய ஐயா என்று Type பண்ணிட்டு அதற்கு கீழ பொருள் என்று Type பண்ணிட்டு உங்களுக்கு என்ன தேவையோ, எதை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில் Type பண்ணிக்கங்க. Example க்கு வேலை வேண்டி விண்ணப்பம் அல்லது நிலம் ஆக்கிரமிப்பு அதை மீட்டு தரக்கோரி என்பது போன்று உங்களுடைய புகாரை சுருக்கமாக பொருள் என்னும் இடத்தில் Type பண்ணிக்கங்க.
அடுத்து வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் என்று Type பண்ணிட்டு, உங்களுடைய கோரிக்கை அல்லது புகாரை முழுமையாக Type பண்ணிக்கங்க. டைப் பண்ணி முடிக்கும் பொழுது Example க்கு நீங்கள் வேலை வேண்டி விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் எனக்கு வேலை வழங்கிட பரிந்துரை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்பது போன்று Type பண்ணிட்டு நன்றி என்பதை Center ல் Type பண்ணிக்கங்க.
அடுத்து இப்படிக்கு என்று டைப் பண்ணிட்டு உங்களுடைய கையெழுத்தை போட்டுக்கங்க. அடுத்து உங்களிடம் புகார் சம்பந்தமான Document கள் இருந்தால் அதை இணைப்பு என்று Type செய்து அதற்கு கீழயே ஒவ்வொரு நகல்களின் பெயரையும் வரிசையாக Type பண்ணிக்கங்க.
இதில் என்னென்ன மாதிரியான குறைகளை பதிவு செய்யலாம் என்றால்
- அரசு நலத்திட்டங்கள் அல்லது அரசு வழங்கிடும் உதவிகளைப் பெற தகுதிகள் இருந்தும் அதை பெறுவதில் தடைகள் இருந்தால் என்ன தடை உள்ளது என்பதை புகார் எழுதி அனுப்பலாம்.
- அடுத்து குடிமக்கள் தொடர்பான பிரச்சனை அரசு மற்றும் பொதுமக்களுக்கு சேதம் இருந்தால், தெரு விளக்கு பிரச்சனை, கால்வாய் அடைப்பு பிரச்சனை, தண்ணீர் தேங்குதல் போன்று என்னென்ன பிரச்சனைகள் உள்ளதோ அதை நீங்கள் புகாராக தெரிவிக்கலாம்.
🎥 CM Cell Petition l Write Letter l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
No comments