Head Ads

 AIR TRAFFIC CONTROLLER JOB (ATC)

(Airport Authority of India)

Air Traffic Controller


   ATC Tower :

                
ATC Tower

            ATC Tower இந்த Tower எல்லா Airport லயும் வைக்கப்பட்டிருக்கும். ATC என்பது Air Traffic Tower இந்த Tower ல் வேலை செய்பவர்களை தான் Air Traffic Controller என்று கூறுவோம். இவர்களுடைய வேலை என்னவென்றால் ஒரு Flight take off ஆவதிலிருந்து Land ஆகும் வரை அதனுடைய Speed, Altitudes, Runway, Navigation மற்றும் Direction போன்ற அனைத்து விவரங்களையும் Pilot உடன் Communicate செய்து Flight ஐ Safty ஆக Airport ல் Land ஆகும் வரை அதை கண்காணிப்பார்கள்.

            " OCT 20 ந் தேதியை Air Traffic Controller தினமாக கொண்டாடுகிறார்கள். எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது என்றால் International Federation of Air Traffic Controller Association அதாவது வான்போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கான சர்வதேச அமைப்பு 1961 ஆம் ஆண்டு OCT 20 ந் தேதி Switzerland ல் அமைக்கப்பட்டது. இதனுடைய அலுவலகம் Canada வில் உள்ளது. இவர்கள் ஒவ்வொரு வருடமும் OCT 20 ந் தேதியை Air Traffic Controller களின் சேவையை பாராட்டி இந்த நாளை சிறப்பிக்கிறார்கள்"

Airport Job


    
            ஒரு Flight எப்போது Take off ஆக வேண்டும் எப்போது Land ஆக வேண்டும் என்பதையும் இந்த Air Traffic Controller தான் முடிவு செய்வார்கள். மொத்தத்தில் ஒரு Flight take off ஆனதிலிருந்து Flight land ஆகும் வரை அந்த Flight ன் முழு Control ம் இந்த  Air Traffic Controller இடம் தான் இருக்கும். 

            ஒரு  Air Traffic Controller க்கு வானிலை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் மழை, புயல், போன்ற சமயங்களில் Flight களை Safe ஆக கொண்டு வந்து Land பண்ண முடியும். ஏனெனில் வானத்தில் உலகத்தில் உள்ள அனைத்து விமானங்களும் பறந்துக் கொண்டிருக்கும். இதில் ஒரு விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி விடக்கூடாது என்பதையும் Emergency என்றால் அந்த சூழ்நிலையில் எப்படி ஒரு Flight ஐ Handle செய்ய வேண்டும் என்பதையும் எங்கு ஒரு Flight ஐ நிறுத்த வேண்டும் என்பது முதற்கொண்டு இந்த Air Traffic Controller தான் முடிவு செய்ய வேண்டும். 

            "உலகில் முதன் முதலில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்பட்ட இடம் 1920 ஆம் ஆண்டு தெற்கு லண்டன் பகுதியில் உள்ள கிராய்டன் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டது.  15 அடி உயரமுள்ள இந்த கட்டுபாட்டு அறை முழுக்க முழுக்க மரத்தால் ஆனது"

             இவ்வளவு Highly risk ஆன வேலையில் Join பண்ண நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நன்கு English பேச தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கான கல்வித்தகுதி என்று பார்த்தால் B.Sc மற்றும் Engineering ல் Electronics, Telecommunication, Radio Engineering படித்தவர்கள் இதற்கு Eligible மேலும் இந்த பணியில் சேர்வதற்கு Physics & Mathematics ஒரு Subject ஆக படித்திருக்க வேண்டும் அதிலும் 60% Marks Score பண்ணியிருக்க வேண்டும்.

            இதற்கான வயது வரம்பு என்னவென்றால் 27 முதல் 32 வயதுவரை உள்ள SC / ST பிரிவினரும், 27 ,முதல் 30 வயதுவரை உள்ள மற்ற பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
    

மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.

👉👉👇👇👇



நன்றி !


Post a Comment

Previous Post Next Post
close