Head Ads

 Yercaud History in Tamil

ஏற்காடு வரலாறு

Yercaud Lake

        ஏற்காடு தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு நகரம் ஆகும். ஏற்காடு என்ற பெயர் ஏரி + காடு = ஏரிக்காடு என்பதிலிருந்து மருவி ஏற்காடு என்ற பெயர் வந்தது. 19 ஆம் நூற்றாண்டு காலத்தின் துவக்கத்தில் ஏற்காடு கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் இங்கு காபி தோட்டங்கள் அமைக்கப்பட்டது. 

Yercaud Road


                  ஏற்காட்டில் முதல் வீடு 1840 ல் கட்டப்பட்டாலும். சாலைகளானது 20 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் தான் அமைக்கப்பட்டன. இங்கு உள்ள குளிர்ந்த காலநிலை கிறிஸ்துவ மிஷினரிகளுக்கு மிகவும் பிடித்து போகவே அவர்கள் Sacred Heart Convent, Montfort School, Don Bosco Institute, Holy Cross Novitiate House போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது.

      ஏற்காடு 14.10.1997 வரை சூரிய தாலுகாவாக இருந்தது. இது 15.10.1997 முதல் முழு அளவிலான தாலுகாவாக மாறியது. 67 வருவாய் கிராமங்கள் உள்ளது. ஏற்காடானது கடல் மட்டத்திலிருந்து 4800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஏற்காட்டின் உயரமான பகுதி என்றால் அது சேர்வராயன் மலை கோவில் தான். இது 5326 அடி உயரத்தில் அமைந்த்துள்ளது. சேர்வராயன் கோவிலை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.



           ஏற்காடு மலைப்பகுதி முழுவதையும் "சேர்வராயன் மலைகள்" என்றே அழைக்கப்படுகிறது. மேலும் இது "ஏழைகளின் ஊட்டி" என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் இங்கு கோடை விழா கொண்டாடப்படுகிறது.

Yercaud Climate

   ஏற்காட்டின் தட்பவெப்ப நிலை மிதாமனது. குளிர்காலம் என்று எடுத்துக்கொண்டால் செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பரில் முடிகிறது. குளிர்காலத்தில் மலைகள் மூடுபனியால் மூடப்பட்டு மிகவும் அழகாக தெரியும். சேலத்திலிருந்து அயோத்தியாப்பட்டிணம் - குப்பனூர் - கொட்டச்சேடு வழியாக ஏற்காட்டிற்கு பேருந்து வசதியும் உள்ளது.

               ஏற்காட்டின் முக்கிய பயிராக காபி உள்ளது. முதன் முதலில் 1820 ஆம் ஆண்டு "கிரேஞ் எஸ்டேட்டில்" காபி பயிரிடப்பட்டது.  மேலும் இங்கு ஆரஞ்சு பழம், பலாபழம், பேரிக்காய், கொய்யா, மிளகு மற்றும் ஏலக்காய் போன்றவைகளும் சந்தன மரம், தேக்கு மரம், சில்வர் ஓக் மரங்களும் அதிகளவில் உள்ளன.

Yercaud Ghot Road

                 ஏற்காட்டிலிருந்து சேலத்தின் அழகை மலைகளின் அழகுடன் சேர்த்து ரசிக்க முடியும். Lady's Seat என்னுமிடத்தில் சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு வரும் வழித் தடத்தை அதாவது கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய வழித் தடத்தை கண்டு ரசிக்க முடியும். லேடி சீட் ஏற்காடு மலையின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இங்கு இரவு நேரங்களில் ஏற்காட்டில் இருந்து சேலத்தை பார்க்கும் போது மின் விளக்குகளின் அழகு வானத்து நட்சத்திரங்கள் பூமியில் தெரிவது போன்று அவ்வளவு அழகாக இருக்கும். 

Yercaud Boat House


               ஏற்காட்டில் உள்ள இரண்டு ஏரிகள் உள்ளது. ஓன்று பெரிய ஏரி மற்றொன்று எமரால்டு ஏரி (Emerald Lake). இதில் பெரிய ஏரியில் தான் படகு இல்லம்  (Boat House) அமைந்துள்ளது. ஏற்காடு பெரிய ஏரிக்கு நடுவில் மான் பூங்கா அமைந்துள்ளது. ஏரிக்கு அருகில் அண்ணா பூங்கா மற்றும் ஏரி பூங்காக்கள் அமைந்த்துள்ளது. ஏற்காட்டின் அண்ணா பூங்காவின் அழகை கண்டு ரசிக்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.



      ஏற்காடு அண்ணா பூங்காவிற்குள் ஜப்பான் தோட்டம் அமைந்துள்ளது. ஏற்காடு பெரிய ஏரியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் ரோஜா தோட்டம் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் வண்ண மயமான ரோஜாக்களை கண்டு ரசிக்க முடியும். ரோஜா தோட்டத்திற்கு அருகிலேயே அரசு பட்டுப்பண்ணை அமைந்துள்ளது. பட்டுப் புழுக்கள் வளர்க்கப்படுகிறது. 

           ஏற்காடு பகோடா பாயிண்ட் என்னுமிடத்தில் பிரமிட் போன்ற அமைப்பில் கற்கள் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்த இடம் ஏற்காடு பெரிய ஏரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலா தளமாகும்.பகோடா பாயிண்ட் அழகை வீடியோவாக கண்டு ரசிக்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.




Related Article :
  
மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்

Post a Comment

Previous Post Next Post
close