Head Ads

 ஊராட்சி தலைவரின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் 

Panchayat Raj


                  1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டன. ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகின்றன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும் 12,524 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்தபட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும் விழுப்புரம் மாவட்டம் அதிகபட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது. 

                          1959 இல் பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் ஒரு ஊராட்சியில் யார் பஞ்சாயத்து தலைவராக இருக்க வேண்டும் என்பதை கூறவில்லை. அதனால் பண பலம் மற்றும் ஆள் பலம் உள்ள நபர்கள் தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளனர். மேலும் பெண்கள் பெரும்பாலும் அரசியலில் இல்லை. இதனால் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதம் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் கிராமம் தன்னிறைவு அடைந்தால் தான் நாடு வல்லரசாக முடியும் என்று காந்தி கூறினார். இதுவே காந்தியின் கனவாகும். காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றால் பஞ்சாயத்து அளவில் நிறைய திட்டங்களை கொண்டு வர வேண்டும். 

        பஞ்சாயத்து சட்டம் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 1950ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படியே தற்போது இந்தியாவில் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் 1996 வரை மத்திய, மாநில ஆகிய இரு அரசுகள் மட்டுமே இருந்து வந்தன. அதன் பிறகு மூன்றாவதாக ஒரு அரசு உள்ளது. அதுதான் உள்ளாட்சி அரசு. ஊராட்சி ஒன்றியங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதலின்படி இயங்குகிறது.

                ஊராட்சி ஒன்றிய குழுவின் அமைப்பு கிராம ஊராட்சிகள் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியத்திற்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றிய குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அந்த பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

        ஒரு மாநிலத்தின் நிர்வாகம் முதலமைச்சர் தலைமையில் நடைபெறுவதைப் போல ஒரு ஊராட்சிக்குட்பட்ட சிற்றூர்களின் நிர்வாகம் ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் நடைபெறும். ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை எந்தெந்த திட்டங்களுக்காக செலவிட வேண்டும் என்ற முடிவு செய்பவர் ஊராட்சி தலைவரே ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களை மேலாண்மை செய்கிறார் ஊராட்சி மக்களின் சார்பாக என்ற முறையில் ஊராட்சி மன்ற தலைவரின் இசைவின்றி வெளியாட்கள் யாரும் அரசாங்கமோ தனியார் ஓர் ஆட்சிக்கு உட்பட்ட எந்த இயற்கை வளத்தையும் பயன்படுத்த முடியாது இத்தகைய அதிகாரங்களை காட்டிலும் இவருக்கு பல முக்கிய கடமைகள் உள்ளன. கிராம சபையை கூட்டவும் அதில் தேவையானவற்றை விவாதித்து முக்கிய தீர்மானங்களை இயற்றவும் அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தும் பொறுப்பையும் பெற்றவர் ஊராட்சி மன்ற தலைவராவார்.

                 ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றிய குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவர்.

               ஊராட்சி மன்ற அதிகாரங்கள் கிராமசபை கூட்டம் (Power of Panchayth raj gram sabha meeting) 

ஊராட்சி மன்றத்தின் பணி : 

NREGA


                நூலகங்கள் ஏற்படுத்துதல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துதலும் இதன் கடமைகள், தெருவிளக்குகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், ஊர் சாலைகள் அமைத்தல், சாலை பராமரிப்பு, குடிநீர் கிணறு தோண்டுதல், கழிவு நீர்வாய் கால்வாய் அமைத்தல், வீட்டுமனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூலகங்களை பராமரித்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகியன ஆகும். வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன. வேளாண்மை, நீர் பாசன வசதி செய்து தருதல், குடிநீர் விநியோகித்தல், துப்புரவு மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்தல், ஊர் சாலைகள், சந்தை, பேருந்து நிறுத்தம், மைதானங்கள் போன்றவைகள் மற்றும் பொது இடங்கள், தெருக்கள், விளக்குகளை பராமரித்தல், இடுகாடு சுடுகாடு வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதார மையங்களை பராமரித்தல், காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் காலங்களில் தடுப்பூசி போடுதல் போன்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல். ஊராட்சியின் சொத்துக்களை பாதுகாத்தல், கழிவுகளை முறையாக அகற்றுதல், சுய உதவி குழுக்கள் மற்றும் இதர சிறு தொழில் மேம்பாட்டு திட்டங்களுக்கு வழி செய்தல். ஊரின் புள்ளி விவரங்களை சேகரித்து பராமரித்தல் இவை தவிர ஊராட்சி மன்ற தலைவருக்கு விருப்பமும் திறமையும் இருக்கும் பட்சத்தில் நூலகங்கள். விளையாட்டு மைதானங்கள். பூங்காக்கள் ஏற்படுத்துதல் போன்ற ஊராட்சியின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டுக்கும் தேவையான எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

கிராம சபை கூட்டம் :

Grama Sabha


    ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் ஊர்மன்ற கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை நடைபெறுகின்றன. அதாவது 
ஜனவரி 26  - குடியரசு நாள் 
மே1  - தொழிலாளர் நாள் 
ஆகஸ்ட் 15  - இந்திய விடுதலை நாள் 
அக்டோபர் 2  - மகாத்மா காந்தி பிறந்த நாள் 
என நான்கு முறை கிராம சபை கூட்டம் கூட்டப்படும். அக்கூட்டத்தில் கிராமங்களின் கல்வி, சமூக வளர்ச்சி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகள் குறித்த அறிக்கையையும், ஊராட்சி மன்ற தலைவர் அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிராம சபை கூட்டமானது கிராம மக்களின் கையில் இருக்கும் அதிகாரம் ஆகும். 

         இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும். இந்த மாதிரியான சிறப்பு திட்டங்களை ஆண்டிற்கு நான்கு முறை கட்டாயம் நடக்க கிராம சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் மேலும் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம். கிராம சபை கூட்டத்திற்கு மக்களை வரவைக்க நோட்டீஸ் அடித்து பொது இடத்தில் ஒட்டலாம். பெரிய அதிகாரிகளை வர வைக்கலாம். கிராம சபை கூட்டம் திருவிழா மாதிரி நடத்த வேண்டும். தலைவராக இருப்பவர் கடைசியில் தீர்மானத்தை கூட்டத்தில் படித்துக் காட்ட வேண்டும்.

              கிராம சபை கூட்டம் நடத்தவில்லை என்றால் கலெக்டரிடம் உரிய காரணங்களை கூற வேண்டும். மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊராட்சி முறை உள்ளது. 5000 மக்களை உள்ளடக்கியது மாவட்ட ஊராட்சியாகும். 5000 மக்கள் தொகை உள்ளடக்கியது ஊராட்சி ஒன்றியமாகும். அடுத்ததாக கிராம ஊராட்சி உள்ளது. இதில் ஏதாவது இடைத்தேர்தல் வந்தால் மாநில தேர்தல் ஆணையம் தலையிட்டு தேர்தலை நடத்தும் பொறுப்பு உள்ளது. பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் பெருக்குவதற்கு வழிவகை உண்டு. மக்களால் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்யப்பட்டவராவார். அவருடைய பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். 

         தலைவர் என்பவர் வார்டு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து மாதம்தோறும் கூட்டம் போட வேண்டியது அவருடைய கடமையாகும். அந்தக் கூட்டங்களில் என்ன பேச வேண்டும் என தீர்மானம் போட வேண்டும் என்பதை தலைவர் அவர்கள் வார்டு உறுப்பினர்களிடம் ஏழு நாட்களுக்கு முன்னரே நோட்டீஸ் கொடுத்து தெரிவிக்க வேண்டும். மேலும் தீர்மானங்களை தலைவரே எழுத வேண்டும். அதை இறுதியில் வார்டு உறுப்பினர்களின் முன்னிலையில் படித்துக் காட்ட வேண்டும். பஞ்சாயத்தில் நடக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் தலைவரே தலைமை தாங்குவார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இவரிடம் உள்ளது. மேலும் அவசர காலங்களில் நிதியை செலவு செய்யும் அதிகாரம் இவரிடம் உள்ளது. அதை சரியாக கணக்கு காட்ட வேண்டியது அவருடைய கடமையாகும். கட்டாய கடமையை தவிர தன் விருப்பக் கடமையும் செய்யக் கூடியவர். அரசு துறைகளுடனும், வங்கிகளுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் பஞ்சாயத்து அளவில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை அடிக்கடி ஆய்வு செய்து மேம்படுத்தலாம். மேலும் கிராமங்களை பசுமையாக்க மரங்களை நடலாம். ஊராட்சியின் நிதி பலத்தை பெருக்க முயற்சி எடுக்க வேண்டும். இவர் நிர்வாக குளறுபடி செய்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். 




        பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர் துணைத் தலைவராவார். இவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். அவருடைய பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். இவருக்கு சரியான அதிகாரம் சட்டத்தில் கொடுக்கப்படவில்லை என்றாலும் தலைவருக்கு நிகராக செக்கில் கையெழுத்து போடும் அதிகாரம் பெற்றவர். இவர் கையெழுத்து போடவில்லை என்றால் அந்த ஊராட்சியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறாது. இவர் தலைவர் இல்லாத நேரங்களில் ஊராட்சியில் நடக்கும் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார். இவர் தலைவருக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றால் இவர் மீது கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி அதை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்புதல் பெற்று அவரை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கலாம். 

        கவுன்சிலர் என்பவர் மக்களால் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். அவருடைய பதவி காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை குறித்து நேரடியாக இவரை மட்டுமே அணுகுவார்கள். அதனால் இவர் தங்கள் பகுதியில் உள்ள தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து தலைவரிடம் கூற வேண்டும். அதை வாய் மூலம் தெரிவிக்கக் கூடாது எழுத்து மூலம் தான் தெரிவிக்க வேண்டும். தலைவர் அழைப்பு விடுக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவருக்கு அதிகாரங்கள் சட்டத்தில் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் முக்கியமாக பஞ்சாயத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து இருக்க வேண்டும். தலைவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை கூறியும் கேட்காமல் இருந்தால் அது பற்றி வீடியோ மற்றும் ஆடியோ அவர்களிடம் கூறாமல் நேரடியாக மாவட்ட ஆட்சியாளருக்கு இவர்களுடைய முகவரியில் மனு எழுத வேண்டும். அதை நிர்வாக குளறுபடிகள் இருந்தால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

                தங்கள் பகுதியில் என்ன தொழில் வளம் உள்ளது என கண்டறிந்து அதை பெருக்க வழி வகுக்கலாம். கூட்டத்திற்கு தலைவரோ அல்லது துணைத் தலைவரோ வரவில்லை என்றால் அந்த கூட்டத்தை வார்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவருடைய தலைமையின் கீழ் கூட்டம் நடத்தலாம். தலைவர் அவர்கள் ஊராட்சி அளவில் செய்யும் அனைத்து பணிகளுக்கும் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் தான் செய்ய முடியும். ஒரு ஊராட்சியில் கிராம சபை கூட்டங்களை தவிர சிறப்பு கூட்டம் அவசரக் கூட்டம் கோரிக்கை கூட்டம் என நடத்தலாம். சிறப்பு கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பான திட்டம் என்ன வந்திருக்கிறது அதை மட்டுமே விவாதித்து பயனாளிகள் தேர்வு செய்து தீர்மானம் போட வேண்டும். அந்த கூட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே உறுப்பினர்களுக்கு தலைவர் தெரிவிக்க வேண்டும். அவசர கூட்டத்தில் அவசர காலங்களில் பேரிடர்களான புயல், சுனாமி மற்றும் தீ விபத்து பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க கூட்டம் போடலாம். இதை 24 மணி நேரத்திற்குள் போட வேண்டும். அடுத்ததாக கோரிக்கை கூட்டம் இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை தலைவரிடம் தெரிவிக்க கூட்டம் போடலாம் இக்கூட்டம் போடும் போது இது பற்றி ஏழு நாட்களுக்கு முன் தலைவருக்கு தகவல் கொடுக்க வேண்டும். 

ஒவ்வொரு ஊராட்சியிலும் ஐந்து பணி குழுக்கள் : 

IAY


       நியமன குழு, வளர்ச்சி திட்ட குழு, வேளாண்மை குழு, கண்காணிப்பு குழு, சுகாதாரக் குழு, கல்வி குழு. இந்த ஏழு குழுக்கள் கண்டிப்பாக ஊராட்சியில் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். இந்த ஏழு குழுக்களிலும் குறைந்தது இரண்டு முதல் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த ஏழு குழுக்களின் உறுப்பினர்களை தலைவர் அவர்கள் நியமிப்பார். ஊராட்சி அளவில் நடைபெறும் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வது இதன் வேலையாகும். 

வளர்ச்சி திட்ட குழு : என்பது ஊராட்சி அளவில் நடைபெறும் கட்டுமான பணி அனைத்துக்கும் திட்டமிடுவது இதன் வேலையாகும். 
வேளாண்மை குழு : என்பது கிராம அளவில் விவசாயம் சார்ந்த பணிகளை கொண்டு வர வேண்டியது இதன் வேலையாகும். 
நீர் மேலாண்மை குழு : என்பது ஊராட்சி அளவில் நீர் மேலாண்மையை கையாளுவது இதன் பணிகளாகும். 
கண்காணிப்பு குழு : என்பது ஊராட்சி அளவில் நடைபெறும் ரோடு மற்றும் கட்டுமான பணி அனைத்தையும் கண்காணிப்பது இதன் வேலையாகும். சுகாதாரக் குழு : என்பதை கிராமத்தை சுத்தம் செய்வது இதன் வேலையாகும். கல்விக் குழு : என்பது ஊராட்சியில் உள்ள பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை உயர்த்துவதும் இதன் வேலையாகும். 

நிர்வாகம் : 

          ஊராட்சி ஒன்றியத்தின் அன்றாட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (இயக்குதல்) துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணக்குகள் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர், சமூக கல்வி மற்றும் மக்கள் தொடர்பு விரிவாக்க அலுவலர், மேலாளர், அலுவலக கண்காணிப்பாளர், கணக்காளர் மற்றும் கிராம நல அலுவலர்களால் இயங்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் நிர்வாகிக்கப்படுகிறது.

பணிகள் :

  1. தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் ஆண்டு 1994 பிரிவு 112 பஞ்சாயத்து  ஒன்றியத்தின் கடமைகளும் பணிகளும் வரையறுத்துள்ளது அவைகளில் சில ஒன்று பஞ்சாயத்து ஒன்றியத்தின் சாலைகள் கட்டுமானம் பராமரிப்பு மற்றும் மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல்.
  2. குடிக்க தேவையான நீர் விநியோகம், கட்டுமான பணிகள் மேற்கொள்ளுதல். 
  3. ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிக்கூடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
  4.  பொது சந்தைகள் கட்டுதல் மற்றும் அதை பராமரித்தல். 
  5. இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கிராமப்புற திட்டங்களை நிறைவேற்றுதல்.
  6. மலேரியா மற்றும் காலரா போன்ற தொற்று நோய்களை பரவாமல் தடுத்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல்.
  7. ஊராட்சி மன்றங்களின் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளுதல்.

நிதி ஆதாரங்கள் : 

          வணிக நிறுவனங்களுக்கான உரிம கட்டணம், சந்தை கட்டணம், அபராத கட்டணம் மற்றும் வாடகை வருவாய், தமிழ்நாடு அரசிடம் இருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் பகிர்வு வருவாய், தமிழ்நாடு அரசு வசூலிக்கும் முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கைவரி மீதான கூடுதல் வரிகள் ஒரு பங்கு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு மாநிலங்கள் வழங்கும் விதிகளின்படி மாநில அரசு நிதி வழங்குகிறது சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் வளங்களில் இருந்து தமிழ்நாடு அரசிற்கு வரும் வருவாயில் 50% தொகையை பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது மானியங்கள் பஞ்சாயத்து ஒன்றிய பகுதிகளில் மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க தேவையான நிதிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு வழங்கும் மானிய தொகைகளை தமிழ்நாடு அரசின் மாநில நிதி குழு ஸ்டேட் ஃபைனான்ஸ் கமிஷன் பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு வழங்குகிறது.

        செலவிடும் அதிகாரம் பஞ்சாயத்து ஒன்றிய குழுவிற்கு ஒரு பணியை நிறைவேற்ற அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் வரை ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து செலவு செய்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதற்கு மேலிட அனுமதி தேவையில்லை. ரூபாய் 10 லட்சம் முதல் 50 லட்சம் முடிய செலவினங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட செலவினங்களுக்கு ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை Rural Development and Panchayat Raj Development இயக்குனரின் அனுமதி தேவை. இருப்பினும் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்ட ஒதுக்கீடு செலவிட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும்.


ஊராட்சி அமைப்பின் உறுப்பினர் அல்லது தலைவராவதற்கான தகுதி : 

       நீங்கள் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினர் அல்லது தலைவராக  விரும்புகின்றீர்களோ அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். உதாரணமாக கிராம ஊராட்சி வார்ட் உறுப்பினர் பதவி இடத்திற்கு நீங்கள் போட்டியிட்டால் அந்த கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் எந்த ஒரு வார்டிலாவது இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடத்திற்கு போட்டியிட்டால் உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடத்திற்கு போட்டியிட்டால் உங்கள் பெயர் அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று நீங்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
            ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவி இடத்திற்கு அல்லது உறுப்பினர் பதவி இடத்திற்கு நீங்கள் போட்டியிட்டால் அந்தப் பதவியிடம் எந்த பிரிவினருக்கு வகுப்பினர் அல்லது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினை சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும். 
         உதாரணமாக ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதிதிராவிடர் வகுப்பினரை சேர்ந்தவராகவும் பெண்ணாகவும் இருக்க வேண்டும். அதேபோன்று பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் தான் போட்டியிட இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொது பெண்கள் என ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்கள் அனைத்து வகுப்பைச் சார்ந்த பெண்களும் போட்டியிடலாம். 

தகுதியின்மை : கிராம நிர்வாக அலுவலராகவோ அல்லது கிராம பணியாளராகவோ மற்றும் எந்த ஒரு ஊரக அல்லது நகர்புற அல்லது தொழில் நகரங்கள் அல்லது பாளையம் கான்டோன்மென்ட் ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது அரசு சார்புடைய நிறுவனப் பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக் கூடாது. இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசின் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்தவராகவும் பணி நீக்கம்  செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர். 1955 ஆம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது. மேலும் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் என்று 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 (1) ல் குறிப்பிட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ் ஒருவர் நான்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 2016 நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பின் அத்தகைய தண்டனை தீர்ப்பானது அபராதம் மட்டும் இருப்பின் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராவார்.

        அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின் தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து மற்றும் சிறை தண்டனை முடிந்து விடுக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார். மேற்படி சட்ட பிரிவு 37 (1) ன் படி தெரிவிக்கப்பட்ட குற்ற செயல்களைத் தவிர வேறு ஏதேனும் குற்றச்செயலுக்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை அடைந்தவர் அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்தும் மேலும் 6 ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார். மேலும் பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பதவி இடங்களில் வேறு வகுப்பைச் சார்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்படி சட்ட பிரிவு 38 (3) கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர். அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார். மேலும் மனநலம் குன்றியவராக இருக்கக் கூடாது. பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பவராகவோ இருக்க கூடாது. 

    ஊராட்சி என்பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி இணைக்கும் வேட்பாளர் கையேடு ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்டத் தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுணராகவோ பணியமற்றிருக்கக் கூடாது, முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும் வைத்திருக்கக் கூடாது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இன் படி எந்த ஒரு பிரிவின் கீழும் மற்றும் விதிகளின் படியும் தகுதியற்றவராக நீங்கள் இருக்கக் கூடாது. தேர்தல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு இருக்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவின கணக்குகளை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாததால் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் தேர்தல் போட்டியிட மூன்றாண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின் அத்தகைய தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவராவார். தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி வகிப்பது பின்னர் அறியவரின் அவர் மீது 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 41 இன் கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post
close