DD Returns Movie Review
DD Returns Movie |
புதுச்சேரியில் தாதாவாக இருக்கும் அன்பரசுக்கு (பெப்சி விஜயன்) ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டிய இக்கட்டில் இருக்கிறார. சதீஷின் (சந்தானம்) காதலி சோபியா (சுரபி) அந்த பணத்தை சதீஷ் திருடி கொடுக்கிறார்.
ஆனால் அது அன்பரசுவிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டப் பணத்தின் ஒரு பகுதி. என் பணத்தை திருடி எனக்கே கொடுக்கிறாயா? என்று சதிஷையும் அவர் கூட்டாளிகளையும் துரத்துகிறார் அன்பரசு. தப்பிக்க ஓடும் அவர்கள் பாழடைந்த நிலையில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரர் பங்களாவுக்குள் நுழைகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பேய்களும், அவற்றுடன் சதீஷ் கூட்டணியும், அவர்களை தேடி வந்து சிக்கும் ஆட்களும் ஆடும் ஆட்டம் தான் கதை.
இதய பலவீனம் கொண்டவர்கள், குழந்தைகள், பெண்கள் பார்க்க கூடாது என்றாலும் பயமுறுத்திய பேய் படங்கள் வந்தது ஒரு காலம். தற்போது பேய்களுடன் காமெடி செய்து அவற்றை கலாய்த்து கலகலப்புட்டுவது தற்போதைய Horror படங்களின் Trent. அச்சு அசலாக அப்படியொரு மரண கலாய் கதை களத்தை தேர்வு செய்து கொண்டு மனிதர்களும் பேய்களும் சந்திக்கும் தருணங்களை அங்கம் (Slapstick) மற்றும் அங்கத நகைச்சுவையின் வழியே கலகலப்பான கொண்டாட்டமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த்.
குறிப்பாக சதீஷ் ஆக வரும் சந்தானம் தனது ஒன்லைனர் பன்சு-களின் வழியாக சக கதாபாத்திரங்களை உள்ளீட்டு அர்த்தத்துடன் செய்யும் அங்கத கலாய்ப்புகள் திரையரங்குகளில் பெரும் சிரிப்பலைகளை உருவாக்குகின்றன. அதில் Tasmac Extra வசூல் பற்றி அடிக்கும் பன்ச் டாபிக்கல். எப்பேர்ப்பட்ட வில்லனையும் தனது கலாய் வழியாக காலி செய்துவிடும் சந்தானத்திடம் இந்த படத்தில் வசமாக சிக்கி நம்மை சிரிக்க வைக்கிறார் பெப்சி விஜயன். வில்லன் பேயையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாயகி சுரபி பார்க்க அழகாகவும் நடிப்பில் சுட்டியாகவும் இருந்தாலும் அவருக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும் துணை கதாபாத்திரங்களை திரைக்கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது நச்!
சந்தானத்தின் நண்பர்களாக வருபவர்களில் லொள்ளு சபா மாறன், மற்றொரு திருடர் குழுவின் தலைவராக வரும் மொட்டை ராஜேந்திரன் அவர் சீடர்களில் ஒருவரான பழைய ஜோக் தங்கதுரை, அன்பரசுவின் மகனாக வரும் கிங்ஸ்லி, அவர் அடியாளாக வரும் தீனா, முனீஸ் காந்த் ஆகியோர் நகைச்சுவையில் வெளுத்து வாங்குகிறார்கள். பேய்களாக வந்து அமளி செய்யும் பிரதீப் ராவத், மசூம் சர்க்கார், ரீட்டா ஆகியோரின் பங்களிப்பு அட்டகாசம். தொடக்கம் முதல் இறுதி வரை பரபரவென நகரும் திரைக்கதை பேய் பங்களா அறைகளையும் அந்த காற்று உறிஞ்சும் இயந்திரத்தையும் திகைப்பூட்டும் வகையில் வடிவமைத்த ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கம் ஹரிஹரசுதன் நம்பக தோற்றுத்துடன் உருவாக்கிய VFX காட்சிகள், எடிட்டர் என்.பி.காந்தின் விறுவிறுப்பான படத்தொகுப்பு ஆகிய அம்சங்கள் படத்தின் பொழுதுபோக்கு சுவையை மிகவும் முழுமையாக பரிமாற கை கொடுத்திருக்கின்றன. சில உருவ கேலி வசனங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் டிடி ரிட்டன்ஸ் DD Returns கலகலப்பை கேரண்டியாக அள்ளித் தருகிறது.
Post a Comment