Head Ads

How To Apply Unemployment

Scholarship

Unemployment Scholarship

வேலை இல்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் செய்வது குறித்த முழு விவரம் உள்ளே!!

இன்றைய காலத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக நிறைய இளைஞர்கள் படித்து முடித்த பிறகு வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக புதுப்பித்தவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேலான கல்வி படிப்பு முடித்தவர்கள் இத்திட்டதிற்கு தகுதியானவர்கள் ஆவர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவுற்று வேலைக்காக காத்திருக்கும் இளைளுர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கிவருகிறது.  


இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள் :

1) விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72.000க்கு கீழ் இருக்க வேண்டும்.  

2) பழங்குடியின விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 


உதவி தொகை விவரம்: 

* பத்தாம் வகுப்பில் தோல்வி - மாதம் ரூ. 200/-

* பத்தாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம்  ரூ.300/-

* பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி -மாதம் ரூ.400/-

* பட்டப்படிப்பு தேர்ச்சி - மாதம் ரூ.600/-


மாற்றுத் திறனானிகளுக்கான ஊக்கத் தொகை விவரம்:  

* பத்தாம் வகுப்பில் தேர்ச்சி-மாதம் ரூ.600/-  

* பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி -மாதம் ரூ.750/-

* பட்டப்படிப்பு தேர்ச்சி - மாதம் ரூ.1000/-


இந்த திட்டமானது மகளிர் உரிமை தொகை 1000 வாங்கினால் அவர்களுக்கு பொருந்தாது. குறிப்பாக ஒரு மகளிர் +2 படித்துள்ளார் அதேசமயம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தகுதி பெற்று இருந்தாலும் மகளிர் உரிமை தொகை பெற்றால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணம் பெற முடியாது.


மேலும் பல தகவல்களை வீடியோவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 

CLICK HERE 

Post a Comment

Previous Post Next Post
close