TN HOUSE SCHEME l தமிழக அரசு வழங்கும் புதிய வீடுகள் பெறுவது எப்படி?
TN HOUSE SCHEME l தமிழக அரசு வழங்கும் புதிய வீடுகள் பெறுவது எப்படி?
tn house scheme |
TN HOUSE SCHEME தமிழக அரசு வழங்கும் புதிய வீடுகள் பெறுவது எப்படி?
Step 1
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamilnadu Urban Habitat Developement Board) மூலமாக தமிழக அரசானது வீடுகள் வழங்குகிறார்கள். யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும். இதற்கான தகுதிகள் என்ன என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamilnadu Urban Habitat Developement Board) ஆனது 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. இந்த திட்டதின் நோக்கம் என்னவென்றால் நகர்புறத்தில் வாழ்பவர்கள் யாரும் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது வாரியத்தின் சார்பில் குடிசைகளை அகற்றி அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன. மக்களுக்கு ஒதுக்கபட்ட வீடுகள் போக மீதமுள்ள வீடுகள் நேரடியாக விற்கப்படுகின்றன. இந்த வீடுகள் 4 லட்சம் முதல் 12 லட்சம் வரை விற்கப்படுகின்றன. இந்த வீடுகளை பெற கீழே கொடுக்கபட்டுள்ள Website மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பெற முடியும்.
Step 2
இந்த Website Home Page லுள்ள வீடு வேண்டி விண்ணப்பம் என்னும் Option ஐ Click செய்து உங்களுடைய Mobile Number மற்றும் Aadhaar Number கொடுத்து விண்ணப்பிக்க முடியும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவில் உள்ளவர்களுக்கு சுகாதார வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் நீங்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் என்பதை உறுதி செய்ய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- ற்கு குறைவாக இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
1) How to Apply Income Certificate வருமான சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் Link ஐ Click செய்து தெரிந்து கொள்ளுங்கள்
Step 3
2) விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் யார் பெயரிலும் குடியிருப்பு மற்றும் மனைகள் இருக்க கூடாது. இதற்கான உறுதிமொழி பத்திரம் சமர்பிக்க வேண்டும்
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறேன் என்னும் Option ஐ Click செய்து உங்களுடைய Application ஐ ஆரம்பிக்கும் போது நீங்கள் கொடுத்த Mobile எண்ணிற்கு OTP வரும். அந்த OTP ஐ கொடுத்து Submit பண்ணிட்ட பிறகு Aadhaar No கேட்கும் அதன் பிறகு உங்களுடைய Aadhaar ல் உள்ள தகவல்கள் தோன்றும். அதன் பிறகு அதில் நீங்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள்
- தந்தை பெயர்
- Email ID
- Date of Birth
- தற்போதைய முகவரி (Temporary Address)
- நிரந்தர முகவரி (Permanent Address)
Step 4
தற்போதைய குடியிருப்பு விவரங்கள் :
சொந்த வீடா, வாடகை வீடா என்றும் சொந்த வீடு அல்லது வாடகை என்றால்- நிரந்தர வீடு (கான்கிரீட் / கருங்கல் தளம்),
- ஓட்டு வீடு (கல்நார் / இரும்பு தகடு / ஓடு),
- ஓலை வீடு (ஓலை / தார் பாலின்/ மரப்பலகை)
- சமையலறை இல்லாத மொத்த அறைகள் எவ்வளவு என்பதை குறிப்பிட வேண்டும்.
Step 5
வங்கி விவரங்கள்:
Step 6
மற்ற தகவல்கள்:
- மதம்
- சமூகம் (ஜாதி)
- நீங்கள் வசிக்கும் இடத்தில் எத்தனை வருடங்கள் வசிக்கிறீர்கள் என்னும் தகவல்
Step 7
விண்ணப்பதாரரின் நிலை:
- திருமணமானவர்
- திருமணமாகதவர்
- தனிபெண்/விதவை
Step 8
வேலையின் தன்மை:
- சுயதொழில்
- அரசுப் பணி
- தனியார் பணி
- தினக் கூலி
- இல்லத்தரசி
- மற்றவை
- குடும்ப சராசரி மாத வருமானம் எவ்வளவு என்பதை குறிப்பிட வேண்டும்.
- குடும்பத்தில் யாராவது வருமான வரி செலுத்துகிறீர்களா என்பதை தெரிவிக்க ஆம் / இல்லை என்னும் Option ஐ Select பண்ண வேண்டும்.
- இந்தியாவில் சொந்த வீடு உள்ளதா ன்பதை தெரிவிக்க ஆம் / இல்லை என்னும் Option ஐ Select பண்ண வேண்டும். ஆம் என்றால் அந்த வீடு குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளி
- கணவனை இழந்தவர்
- கணவரால் கைவிடப்பட்டவர்
- ஆதரவற்றவர்
- முன்னாள் ராணுவத்தினர்
Step 8
குடும்ப உறுப்பினர் விவரங்கள்:
- பெயர்
- பாலினம்
- வயது
- உறவுமுறை
- ஆதார் எண்
Step 9
இணைப்பு : (Upload Documents)
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- குடும்பத்தலைவரின் புகைப்படம்
- குடும்பத்தலைவியின் புகைப்படம்
- குடும்பத்தலைவரின் ஆதார் அட்டை
- குடும்பத்தலைவியின் ஆதார் அட்டை
- ரேஷன் கார்டு
- வருமானச் சான்று
- வங்கி பாஸ்புக்
Official Website Link : CLICK HERE
No comments