உலகின் எட்டாவது கண்டம் எங்கு இருக்கிறது தெரியுமா? About Zealandia Continent

உலகின் எட்டாவது கண்டம் எங்கு இருக்கிறது தெரியுமா? 
About Zealandia Continent

Zealandia Continent

    நீருக்குள் மூழ்கி இருக்கும் எட்டாவது கண்டத்தை கண்டுபிடிக்க 375 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அதற்குள் இருக்கும் மர்மம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. 1642 ஆம் ஆண்டு உலகத்தின் எட்டாவது கண்டத்தை தேடும் பணியில் டச்சு மாலுமி Abel Tasman (Dutch Pilot) ஈடுபட்டிருந்தார். பூமியின் தெற்கு அறைக்கோளத்தில் ஒரு பரந்த கண்டம் இருக்கிறது என்பதை அவர் நம்பினார். அந்தக் காலகட்டத்தில் தெற்கு அறைக்கோள பகுதி ஐரோப்பியர்களுக்கு  மர்மமாகவே இருந்தது. 

   

Terra Australis Incognita
Terra Australis Incognita

        வடக்கே உள்ள தங்களது கண்டத்தை சமநிலைப்படுத்தும் வகையில் தெற்கே ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்பதை அன்றே அவர்கள் கணித்திருந்தார்கள். அதற்கு Terra Australis என்று பெயரும் வைத்தார்கள். Indonesia - Jakarta வில் உள்ள தனது நிறுவனத்தின் தளத்திலிருந்து இரண்டு சிறிய கப்பல்கள் உடன் புறப்பட்டு மேற்கு பின்னர் தெற்கு பின்னர் கிழக்கு நோக்கி பயணித்து இறுதியில் New Zealand தெற்குத் தீவை சென்றடைந்தார் Tasman. 

        பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கு  குடியேறியதாக கருதப்படும் முல்லூர் மபூரி மக்களுடைய முதல் சந்திப்பிலேயே மோதல் ஏற்பட்டது. அடுத்த நாளில் டச்சு கப்பல்களுக்கிடையே செய்திகளை அனுப்பும் சிறிய கப்பல் மீது அவர்கள் படகை கொண்டு மோதினார்கள். அதில் நான்கு ஐரோப்பியர்கள் உயிரிழந்தனர். ஐரோப்பியர்கள் பதிலுக்கு தங்களுடைய எரிக்கனைகளை முல்லூர் மக்களின் துடுப்புகளை தாக்கினர். அதன் பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆனால் Tasman-னின் ஆய்வு பயணம் முடிவுக்கு வந்தது. மோதல் நடந்த இடத்திற்கு மூர்டனஸ் கொலைகாரர்கள் என்று பெயரிட்டார். புதிய நிலத்தில் கால் வைக்காமல் சொந்த நாட்டிற்கு திரும்பினார்.

 பிரம்மாண்டத்திற்கான தெற்கு கண்டதை கண்டுபிடித்ததாக நம்பினாலும் அவர் அந்த இடத்திற்கு மீண்டும் திரும்பி வரவே இல்லை. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா கண்டம் ஏற்கனவே அறியப்பட்டிருந்தது. ஆனால் அதுதான் தாங்கள் தேடிய தெற்கு கண்டம் என்று ஐரோப்பியர்கள் கருதவில்லை. பின்னர் மனம் மாறி அதற்கு ஆஸ்திரேலியா என்று பெயர் வைத்தனர். 

Yercaud History in Tamil

   

Madagascar
Madagascar

    2017 ஆம் ஆண்டு புவியியலாளர்கள் குழு புதிதாக சீலாண்டியா (Zealandia) என்னும் புதிய கண்டத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தது. அந்த அறிவிப்பு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. Madagascar போல ஆறு மடங்கு பெரிதாக 49 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருக்கும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் கலைக்களஞ்சியங்களும், வரைபடங்களும், தேடுபொறிகளும் இதை ஏற்கவில்லை. உலகில் ஏழு கண்டங்கள் தான் இருக்கின்றன என்பதில் அவை பிடிவாதமாக இருந்தனர். அது தவறு என புவியியலாளர் குழு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

   புதிய கண்டம் மற்றும் அனைத்து கண்டங்களையும் விட புதியது, சிறியது, இளையது என்று கவர்ச்சிகரமாக கூறப்பட்டது. இந்த கண்டத்தின் 94 சதவீத பரப்பு நீருக்குள் மூழ்கி இருக்கிறது. நியூசிலாந்து போன்ற சில தீவுகள் மட்டும் கடல் மட்டத்திற்கு மேலே இருக்கின்றன.  இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறிய தொடக்கம் தான் 4 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் இந்த கண்டத்தைப் பற்றிய விவரம் இன்னும் புதிராகவே உள்ளன. அதன் ரகசியங்கள் 6560 அடிக்கு கீழே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அது எப்படி உருவானது? அங்கு யார் வாழ்ந்தார்கள்? எவ்வளவு காலமாக அது நீருக்கடியில் இருக்கிறது? என்பதெல்லாம் இன்னும் மர்மம்தான். 

James Cook
James Cook

    உண்மையில் சீலாண்டியா (Zealandia) பற்றி ஆய்வு செய்வது எப்போதும் கடினமாகவே இருந்து வந்திருக்கிறது. 1642 ஆம் ஆண்டு Tasman Newzealand கண்டுபிடித்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பிரிட்டிஷ் வரைப்பட தயாரிப்பில் James Cook தெற்கு அரைக்குளம் நோக்கி அனுப்பப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வெள்ளி கடந்து செல்லும் போது அதை கண்காணிக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் சூரியன் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே திட்டம். ஆனால் அவருக்கு மற்றொரு ரகசிய பணியும் இடப்பட்டு இருந்தது. சீல் வைத்து மூடப்பட்டிருந்த ஒரு உரையில் அந்த பணி பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முதல் பணி முடிந்த பிறகு தான் இதை திறக்க வேண்டும் என்பது கட்டளை. அது புதிய கண்டத்தை நோக்கிய பயணத்திற்கான உத்தரவு. 

      

James Hector

            அதன்படியே James Cook தனது பயணத்தை தொடர்ந்தார். சீலாண்டியா (Zealandia) என்ற ஒரு கண்டம் இருக்கிறது என்பதற்கான உண்மையான தடையங்கள் சேகரிக்கப்பட்டது. Scotland நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் James Hactor என்பவரால் தான். அது தொடர்ச்சியான மலையை கொண்டிருக்கிறது என்றும், நீருக்குள் மூழ்கி இருக்கிறது என்றும் 1895 ஆம் ஆண்டில் அவர் அறிவித்தார். இத்தகைய முன்னேற்றங்கள் இருந்த போதும் சீலாண்டியா (Zealandia) பற்றிய அறிவு தெளிவற்றதாக இருந்தது. 1960 ஆம் ஆண்டு வரை பெரிய தரவுகள் கிடைக்கவில்லை. 

              அப்போதெல்லாம் ஒரு கண்டம் என்பதற்கான தெளிவான வரையறையே கிடையாது. 1960-களில் ஒரு கண்டம் என்றால் என்ன என்பதற்கான வரையறையை இறுதி செய்ய புவியியலாளர்கள் ஒப்புக்கொண்டனர். அதிக உயரம் கொண்ட புவியியல் பகுதி, பரந்துப்பட்ட பாறைகள்,  அடர்த்தியான புவி மேலடுக்கு ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். அதுவும் பெரியதாக இருக்க வேண்டும் என்று கண்டத்திற்கான வரையறை வகுக்கப்பட்டது. இது ஆய்வுக்கான புதிய வாய்ப்புகளை வழங்கியது. இருப்பினும் சீலாண்டியா (Zealandia) தேடும் பணி நிறுத்தப்பட்டது. காரணம் ஒரு கண்டத்தை தேடிக் கண்டுபிடிப்பது செலவு மிக்கது என்று கருதப்பட்டது. அதை தேடுவது ஒன்றும் அவசரமான வேலை இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. 

            1995 ஆம் ஆண்டு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை சீலாண்டியா (Zealandia) என்று வரையறுத்தார் அமெரிக்க புவியியலாளர் புரூஸ் லூயின் டிக் ஏறக்குறைய அதே நேரத்தில் கடல் சட்டத்தின் மீதான ஐக்கிய நாடுகள் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது. அதில் நாடுகள் தங்களது கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் தாண்டி தங்களது எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம். அங்கிருக்கும் கடல் செல்வங்களை உரிமை கோரலாம் என்று கூறியது. இது கடல் ஆய்வுகளுக்கு உத்வேகத்தை அளித்தது. ஒரு வேலை Newzealand தான் பறந்த கண்டத்தின் ஒரு பகுதி என்பதை நிரூபிக்க முடிந்தால் தனது நிலப்பரப்பை ஆறு மடங்கு விரிவுபடுத்திக் கொள்ளலாம். 

            அதனால் திடீரென கடல் ஆய்வுகளுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. ஆதாரங்கள் படிப்படியாக சேகரிக்கப்பட்டன. அதனால் சீலாண்டியா (Zealandia) பற்றிய ஆர்வம் அதிகரித்தது. கடைசியாக செயற்கைக்கோள் தரவுகளில் இருந்து நல்ல செய்தி வந்தது. அதன் மூலம் சீலாண்டியா (Zealandia) என்பது ஆஸ்திரேலியாவை விடவும் பெரியதான பரப்பு என்பது தெளிவாக தெரிந்தது. இந்த கண்டம் இறுதியாக உலகுக்கு அறிவிக்கப்பட்ட போது அது உலகின் மிகப்பெரிய கடல் பிரதேசமாக இருப்பதற்கான வாய்ப்பாக மாறியது. Newzealand-ஐ தவிர சீலாண்டியா (Zealandia)-வில் கேலிதோனிய தீவு, சிறிய ஆஸ்திரேலியா தீவுகள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. 

Gondwana
Gondwana

   சுமார் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான Gondwana  என்ற பண்டைய பெரும் கண்டத்தின் ஒரு பகுதியாக சீலாண்டியா (Zealandia) இருந்திருக்கிறது. கிழக்குப் பகுதியில் Australia, Antartica ஆகியவற்றை எல்லைகளாக கொண்டிருந்தது. சுமார் 10.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக Gondwana Continent கண்டம் தனித்தனியே பிரிந்த போது சீலாண்டியா (Zealandia)-வும் வெளிப்புறம் நோக்கி  இழுக்கப்பட்டிருக்கிறது என்பதை கூறுகிறார் ஆய்வாளர் துநூக். கண்டங்களின் மேலோடு பொதுவாக 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் ஆனால் சீலாண்டியா (Zealandia)-வின் இந்தியாவின் மேலோடு அதிகம் ஆக இழுக்கப்பட்டதால் வலுவிழந்து 20 கிலோமீட்டர் ஆழத்திற்கு வந்துவிட்டது. இறுதியில் கண்டத்தின் பெரும் பகுதி நீருக்குள் மூழ்கி விட்டது. மெல்லியதாகவும் நீருக்குள் மூழ்கி இருப்பதாலும் அங்குள்ள பாறைகள் காரணமாக அதை கண்டமாகவே கருத வேண்டும் என்று புவியியலாளர்கள் கூறுகிறார்கள் 

        ஆனால் இன்னும் அறியப்படாத புதிர்கள் சீலாண்டியா (Zealandia)-வில் உள்ளன. எட்டாவது கண்டத்தின் அசாதாரண தோற்றம் புவியலாளர்களை புதிராகவும் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. உதாரணமாக மெல்லியதாக இருந்தும் சிறிய கண்டங்கள் ஆக சிதறாமல் எப்படி ஒன்றாக இருக்க முடிந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. சீலாண்டியா (Zealandia) எப்போது நீருக்கடியில் மூழ்கியது என்பது அடுத்த மர்மம். அது எப்போதாவது பெரும் நிலப்பரப்பை கொண்டிருந்ததா என்பது கேள்வியாகவும் உள்ளது.

   ஏனென்றால் தற்போது கடல் மட்டத்திற்கு மேலே உள்ள பகுதியில் பசுபிக் மற்றும் ஆஸ்திரேலியா கண்ட தட்டுகள் மோதி நொறுங்கியதால் உருவான முகடுகள் மட்டுமே. சீலாண்டியா (Zealandia) கடலுக்கு மேலே இருந்திருந்தால் அங்கு என்ன வாழ்ந்தது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. Gondwana ஒரு பரந்த அளவிலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாக இருந்தது. 

     

Dinosaur
Dinosaur

முதல் நான்கு கால் விலங்குகள் நீண்டகாலம் பூமியில் வசித்த Dinosaur-கள் ஆகியவை அங்கு வசித்தன. அதனால் சீலாண்டியா (Zealandia)-வில் இவற்றிற்கான எச்சங்கள் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. தெற்கு அரைகோளத்தில் புதைப்படிவ நில விலங்குகள் அரிதானவை. ஆனால் 1990-களில் Newzealand ஒரு பெரிய நீண்ட வால் மற்றும் நீண்ட கழுத்து Dinosaur-ன் எலும்பு உட்பட பலவற்றின் எச்சங்கள் கிடைத்தன. இதை தொடர்ந்து அடுத்தடுத்த பலவகையான Dinosaur-கள் மற்றும் பிறவகை விலங்குகளின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் காலம் Gondwana விலிருந்து சீலாண்டியா (Zealandia)  பிறந்ததற்குப் பிந்தையது என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆயினும் சீலாண்டியா (Zealandia) வில் Dinosaur-கள் சுற்றித் திரிந்தன என்று இதற்கு அர்த்தம் இல்லை. 

 Dinosaur-கள் நீரில் மூழ்கிய போது தீவுகள் பிற Dinosaur-களின் புகலிடமாக இருந்திருக்கலாம். இது தொடர்பாக நீண்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான நிலம் இல்லாமல்  விலங்குகளால் நீண்ட காலம் வாழ்ந்திருக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி. Newzealand ல் வாழும் பறக்க இயலாத கிவி பறவைகள் குதிரை சிக்கலாக்குகின்றன. ஏனெனில் Madagascar ல் வாழ்ந்து அழிந்து போன பெரும் யானை பறவையுடன் அவற்றுக்கு மரபியல் ரீதியிலான தொடர்பு இருக்கிறது. 

  Gondwana வில் வாழ்ந்து ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து இரு பறவைகளும் உருவானதாக விஞ்ஞானிகள் நம்புவதற்கு இந்த கண்டுபிடிப்பு வழிவகுத்தது. Gondwana முழுமையாக பிரிவதற்கு 13 கோடி ஆண்டுகள் ஆனது. அது நடந்தபோது South America, Africa, Mudacascur, Antartica, Australia, அரேபியா தீபகற்பம், இந்திய துணை கண்டம், சீலாண்டியா (Zealandia) என அது உலகம் முழுவதும் சிதறிய துண்டுகளாக மாறியது. 

  அதனால் தற்போது நீருக்கடியில் இருக்கும் சீலாண்டியா (Zealandia) வின் ஒரு பகுதியாவது கடலுக்கு மேலே நீண்ட காலத்திற்கு இருந்திருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. சீலாண்டியா (Zealandia) இந்தியாவின் கடல் பரப்பிலிருந்து புகைப்படங்களை நேரடியாக சேகரிப்பது சாத்தியம் இல்லை என்றாலும், விஞ்ஞானிகள் துளை இடுவதன் மூலம்  ஆய்வு செய்து வருகிறார்கள். 

   2017 ஆம் ஆண்டு ஒரு குழு இதுவரை இப்பகுதியில் மிக விரிவான ஆய்வை மேற்கொண்டது. 6101 அடிக்கு மேல் 6 வெவ்வேறு இடங்களில் கடல் பரப்பில் துளையிட்டது. நில தாவரங்களில் இருந்து மகரந்தங்கள், சூடான ஆழமற்ற கடல்களில் வாழும் உயிரினங்களின் ஓடுகள் போன்றவை அவர்களுக்கு கிடைத்தன. 10, மீட்டர் அதேபோன்று ஆழத்தில் கடல் நீர் இருந்தால் அதைச் சுற்றி நிலம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சீலாண்டியா (Zealandia) வடிவமும் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய முடிச்சை போடுகிறது. மிகப் பரந்த கண்டமான சீலாண்டியா புதிய முடிச்சை போடுகிறது மிகப் பரந்த கண்டமான சீலாண்டியா (Zealandia) வினோதமாக வளைந்து இருக்கிறது. 

  Pacific மற்றும் Australia கண்ட தட்டுகள் சந்திக்கும் ஒரு கிடைமட்ட கோட்டால் இரண்டும் இரண்டாக பிரிக்கப்படுகிறது. இந்த துல்லியமான கட்டத்தில்  ஏதோ ஒன்று கீழ்பாதியை எடுத்த அதை உருக்கியது போன்று காட்சியளிக்கின்றது. கண்டதட்டுகள் நகர்ந்து எப்படியோ அவற்றை சிதைத்திருக்கலாம் என்று இதற்கு விளக்கம் அளிக்கலாம். ஆனால் இது எப்படி? எப்போது நடந்தது என்பது முழுமையாக இன்னும் தீர்க்கப்படவில்லை. இப்போதைக்கு நமக்கு உறுதியாக தெரிந்தது எட்டாவது கண்டம் ஒன்று இருக்கிறது என்பது மட்டும் தான். ஆனால் Tasman கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆன பிறகும் அதில் உள்ள மர்மங்கள் மட்டும் விலகவில்லை.

மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்

No comments

Powered by Blogger.