மழையே பெய்யாத கிராமம் எது தெரியுமா?அல் - ஹூதாகிப் Al Hutaib - Yeman

 உலகத்திலேயே மழையே பெய்யாத ஒரே கிராமம் எது தெரியுமா?

Al Hutaib - Yeman
Al Hutaib - Yeman

உலகத்திலேயே மழையே பெய்யாத ஒரே கிராமம் எது தெரியுமா? ஏன் அங்கு மழை பெய்வதில்லை? இந்த கிராமம் பற்றிய முழு தகவலை தான் இப்போது பார்க்க இருக்கிறோம். இந்த இடம் ஏமன் நாட்டின் தலைநகரான சானா பகுதியில் உள்ள மகாகா என்ற பகுதிக்குட்பட்ட ஹராஜ் என்ற பகுதியில் இருக்கும் அல் - ஹூதாகிப் ( Al Hutaib ) என்ற மலை கிராமத்தில் தான் இதுவரை ஒரு சொட்டு மழை கூட பெய்தது கிடையாதாம். உலகம் முழுவதும் வருடத்தின் வெவ்வேறு நேரங்களில் மழை பெய்கிறது. ஆனால் அல் - ஹூதாகிப் ( Al Hutaib )  கிராமம் எப்போதும் வானிலை எப்போதும் வறண்டு காணப்படுகிறது.

இந்த கிராமம் ஒரு மலைப்பகுதியில் இருக்கிறது. மேலே படத்தில் காண்பது போன்று மலை மீது தான் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கும். மிக அழகாக தோற்றமளிக்கும் இந்த கிராமத்தை காண ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த பகுதியில் மிகவும் பழங்கால கட்டிடங்களும் அதே நேரத்தில் Morden கட்டிடங்களும் கொண்ட பகுதியாக இருக்கிறது. இங்கு அல்போரா என்ற இன மக்கள் வசித்து வருகின்றனர். ஏமன் இனக்குழுக்களில் இவர்களும் ஒரு குழுவாக இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியத்தை தழு இருக்கிறார்கள்.

   YERCAUD History in Tamil

Al Hutaib - Yeman
Al Hutaib - Yeman

இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. அவ்வளவு உயரமாக இருந்தாலும் இந்த இடம் பெரும்பாலும் சூடான பகுதியாகவே இருக்கிறது. பகலில் அதிகப்படியான வெப்பமும், இரவில் உறைபனி குளிரும் இறங்குகிறது. குளிர் காலத்தில் அதிகாலையில் பயங்கர குளிர் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு பின்னர் இங்கு கோடை காலம் தான். அந்த அளவிற்கு இந்த பகுதி வெப்பமான பகுதியாக காணப்படுகிறது.

  மழை எப்படி உருவாகிறது என்றால் நிலத்தில் இருந்து நீர் ஆவியாகி பூமியின் வளிமண்டலத்தில் குளிர்ந்த மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள் போதுமான அளவு கனமாக இருக்கும் போது குளிர் காற்று படும்போது அவை மழை வடிவத்தில் பூமியில் விழுகின்றன. உலகின் அனைத்து பகுதிகளும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழையை பெறுகின்றன. 

உலகின் எட்டாவது கண்டம் எங்கு இருக்கிறது தெரியுமா? About Zealandia Continent

 

Al Hutaib - Yeman
Al Hutaib - Yeman

ஆனால் அல் - ஹூதாகிப் ( Al Hutaib ) என்ற கிராமத்தில் மழையே பெய்யாததற்கான காரணம் இந்த கிராமம் மிக உயரமான இடத்தில் இருப்பதாலேயே இந்த கிராமத்தில் மழையே பொழிவதில்லை. இந்த கிராமத்திற்கு கீழே தான் மேகங்கள் சூழ்ந்து நிற்கிறது. அதற்கு கீழே தான் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் இந்த கிராமத்திற்கு மழை பொழிவு இருந்ததே கிடையாது. அதாவது சமவெளியில் இருந்து சுமார் 3,200 மீட்டர் உயரத்தில் இந்த கிராமம் உள்ளது. சாதாரண மலை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீட்டருக்குள் குவியும். எனவே  அல் - ஹூதாகிப் ( Al Hutaib ) மீது மேகங்கள் குவிவதில்லை. மேகங்கள் குவியாததால் மழை பெய்ய வாய்ப்பில்லை. மேகத்தை காட்டிலும் மிக உயரமான இடத்தில் இருப்பதால் இந்த இடம் வெப்பம் மிகுந்த இடமாகவும் காணப்படுகிறது. 

மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்

No comments

Powered by Blogger.