Head Ads

 THE CENTER OF THE EARTH


Center of the Earth
Center of the Earth
Table of Contents

     சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு Germany யை சேர்ந்த புகழ்பெற்ற புவியியல் பேராசிரியர்  பிளாக் என்பவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சாகச பயணியின் பூமியை குறித்து கற்பனையாக எழுதிய புத்தகத்தை கண்டுபிடித்தார். அதை அவரது மருமகன் Aakshal உடன் சேர்ந்து அந்த கற்பனையாக எழுதப்பட்ட அந்த புத்தகத்தை ஆராய தொடங்கினர். அதில் பூமியின் மையப்பகுதிக்கு இட்டுச் செல்லும் சில குகைகளுக்கான ரகசிய நுழைவாயில்களை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அறிவியல் ஆர்வம் அவர்களை தூண்ட பேராசிரியரும், அவரது மருமகனும் Island க்குச் சென்றனர்.

    அங்கு பூர்வகுடியைச் சேர்ந்த ஹான்ஸ் பியெல்கே என்பவரை வழிகாட்டியாக உடன் அழைத்துக் கொண்டு, பூமியின் ஆழத்திற்கு தங்கள் பயணத்தை தொடங்கினர்கள். மூவரும் அழிந்து போன ஒரு எரிமலையினுள் இறங்கி சூரிய வெளிச்சம் படாத ஒரு கடலுக்குள் சென்றார்கள். 

 உலகின் எட்டாவது கண்டம் எங்கு இருக்கிறது தெரியுமா? About Zealandia Continent

Center of the Earth

   பூமிக்கு அடியில் அவர்கள் கண்டது ஒளிரும் பாறைகள், ஆதி கால காடுகள் மற்றும் அற்புதமான கடல் வாழ் உயிரினங்கள். அறிவியல் புனை கதைகளை விரும்பி படிப்பவர்கள் இந்நேரம் இந்த கதை என்னவென்று கண்டுபிடித்து இருப்பார்கள். இது பிரெஞ்சு எழுத்தாளர் Jules Verne வின் கற்பனையில் உருவானது. அவரது பூமியின் மையத்துக்கு ஒரு பயணம் (Journey to the Center of the Earth) என்ற அவரது நாவலின் கதை தான் இது. 

    அதில் பூமிக்கடியில் என்ன இருக்கிறது என்பதை பற்றி அப்போது நிலவிய கோட்பாடுகளை ஆராய்ந்தார். ஆனால் உண்மையிலேயே அந்தக் கதையில் வருவது போல 6371 km பூமிக்குள் சென்றால் அங்கு என்ன இருக்கும்? அறிந்து கொள்ள நாமும் பூமியின் மையத்துக்கு செல்வோம். 

பூமியின் மேலடுக்கில் என்ன உள்ளது? 

  நம் உலகம் பல அடுக்குகளால் ஆனது. நமக்குத் தெரிந்தவரை உயிரினங்கள் மேற்பரப்பில் மட்டுமே உள்ளன. இதுதான் பூமியின் மேலோடு. இதில் சில விலங்குகளின் வாழ்விடங்களை காணலாம். எடுத்துகாட்டாக எலிகள் போன்ற உயிரினங்களின் வாழ்விடங்கள் பூமியை தோண்டி அதில் வாழும். இவற்றில் நைல் முதலைகளால் தோண்டப்பட்ட வாழ்விடங்கள் மிக ஆழமானவை. இவை 12 Meter ஆழம் வரை இருக்கும். 

   பூமியின் இந்த மேலோட்டில் தான் துருக்கியில் உள்ள எலெங்குபு என்ற புராதன நிலத்தடி நகரம் உள்ளது. இது கிமு 370 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இது இன்று டெரிங்குயு என்று அழைக்கப்படுகிறது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 85 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ளது. இது 12 நிலை சுரங்கப்பாதைகளுடன் கூடிய இந்த நிலத்தடி சுரங்கப்பாதை 20,000 நபர்கள் வசிக்கும் அளவு பெரியது. இந்த நகரம் மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலையான பயன்பாட்டில் இருந்து வந்தது. 

மழையே பெய்யாத கிராமம் எது தெரியுமா?அல் - ஹூதாகிப் Al Hutaib - Yeman

Kola Superdeep
Kola Superdeep

உலகின் மிக  ஆழமான சுரங்கங்கள் சுமார் 4km ஆழம் வரை செல்பவை. தென்னாப்பிரிக்காவின் தங்கச் சுரங்க தொழிலாளர்கள் பூமிக்கடியில் 2km ஆழத்தில் புழுக்களை கண்டுபிடித்தனர். ஆனால் 3km ஆழத்திற்கு மேல் உயிரினங்களை காணமுடியவில்லை.  இதுவரை தோண்டப்பட்டதில் ஆழமான தொலைவு உள்ளது எங்கென்றால் ரஷ்யாவில் உள்ள Kola Superdeep Well சிலர் அதை "நரகத்தின் நுழைவாயில்" என்று அழைக்கிறார்கள். உள்ளூர் வாசிகள் அதிலிருந்து சித்திரவதை செய்யப்பட்ட ஆத்மாக்களின் அலறல் கேட்பதாக சொல்கிறார்கள். 

பூமிக்குள் இருக்கும் பிரகாசமான கடல் 

    பூமிக்கு அடியில் 30km முதல் 50km ஆழத்தில் பூமியின் அடுத்த அடுக்கை அடைகிறோம். அதற்கு மேண்டில் Mantle என்று பெயர். இது நமது கிரகத்தின் அடுக்குகளிலயே மிகப் பெரியதாகும். இது பூமியின் அளவில் 82% மற்றும் அதன் கனத்தில் 65% ஆகும். இது சூடான பாறைகளால் ஆனது. இது நமக்கு திடமான கற்களைப் போல் தோன்றுகின்றன. ஆனால் உண்மையில் இவை மிக மெதுவாக நகர்கின்றன. இவை ஒரு வருடத்திற்கு சில Centimetres மட்டுமே நகர்கின்றன. கீழே உள்ள இந்த நுட்பமான மாற்றங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் போது தான் பூகம்பங்கள் உருவாகிறது. 

     பூமிக்கு அடியில் ஒரு பிரம்மாண்டமான பிரகாசிக்கும் கடல் உள்ளது. இருப்பினும் அதில் ஒரு துளி திரவம் கூட இல்லை. இது ஆலிவின் எனும் ஒருவகை கனிமத்திற்குள் சிக்கியுள்ள தண்ணீரால் ஆனது. மேன்டலின் Mantle ன் பகுதிக்கும் மேற்பட்ட பகுதி இதனால் ஆனது தான். ஆழமான மட்டங்களில் இது நீல வண்ண படிகங்களாக மாறுகிறது. நம் பூமிக்குள் இன்னும் ஆழமாக போகும்போது அதிகரிக்கும் அழுத்தத்தினால் அணுக்கள் சிதைந்து நமக்கு மிகவும் பழக்கமான பொருட்கள் கூட விசித்திரமாக நடந்து கொள்கின்றன. மேலும் இங்கிருக்கும் படிகங்கள் பச்சை நிறத்தில் இருந்து நீலம் மற்றும் பழுப்பு நிறமாக மாறி படிகங்களின் ஒரு Koleidoscope போன்று காட்சி அளிக்கும். 

Yercaud History in Tamil

Koleidoscope
Koleidoscope

     இது சுழன்று கொண்டே இருக்கும். இங்கிருக்கும் பாறைகள் பிளாஸ்டிக் போன்று இலகுவானவை. இங்கிருக்கும் தாதுக்கள் மிகவும் அரிதானது. அவை பூமியின் மேற்பரப்பில் கிடைக்காதவை. இப்பகுதியில் மிகுதியாக காண கிடைக்கும் Bridgemanite மற்றும் டேவ்மாவோயிட் ஆகிய தாதுக்கள் உருவாக பூமியின் உட்புறத்தில் இருக்கும் தனித்துவமான அதி உயர்அழுத்தம் தேவை. அவற்றை பூமியின் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தால் அவை சிதைந்து விடும். இன்னும் கீழே சென்று 2900km ஆழத்தை அடைந்தால் நாம் Mantle ன் அடிப்பகுதிக்கு சென்று விடுவோம். 

பூமிக்குள் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்திலும் உயரமான வடிவங்கள்

  
Large Low Shear Rate Provinces ( LLSVPS)
Large Low Shear Rate Provinces ( LLSVPS)

     மேலே படத்தில் காணும் இரண்டு இளஞ்சிவப்பு வடிவங்கள் மிகப்பெரும் கட்டமைப்புகள். அவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை பூமியின் முழு பரப்பில் 6% ஆக்கிரமித்து உள்ளன. இவை Large Low Shear Rate Provinces (LLSVPS) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு தனிப்பட்ட பெயர்களும் உள்ளன. 

  • Africa - வின் கீழ் அமைந்துள்ளது 'துசோ'. 
  • பசிபிக் பெருங்கடலின் கீழ் உள்ளது 'ஜோசன்'. 
        வற்றின் உயரங்களின் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. ஆனால் துசோவின் உயரம் 800km என்று நம்பப்படுகிறது. இது சுமார் 90 எவரெஸ்ட் சிகரங்களின் உயரத்துக்கு சமமானதாகும். ஜோசனின் உயரம் 1800km வரை இருப்பதாக நம்பப்படுகிறது. இது சுமார் 203 எவரெஸ்ட் சிகரங்களின் உயரத்துக்கு சமமானதாகும். 

    ஆனால் அவற்றின் வடிவங்கள் எவ்வளவு பெரியவை என்பதை தெரிந்து கொள்வதை தவிர அவை எவ்வாறு உருவாகின? அவை நமது கிரகத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? என்பது உட்பட அவற்றைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் நிச்சயமற்றதாகவே உள்ளன. ஆனால் இவற்றைப் பற்றி ஒன்று மட்டும் தெரியும். இவை அடுத்த அடுக்கான பூமியின் வெளிப்புற மையத்தோடு ஒட்டியிருக்கின்றன. 

பூமியின் 'இதயத்தில்' என்ன இருக்கிறது? 

Jules Verne


Jules Verne னின் பிரசித்தமான நாவலில், பேராசிரியர் லிடென்ப்ராக் பூமிக்கு அடியில் ஒரு முழு உலகத்தையே காண்கிறார். புராதான உயிரினங்கள் மற்றும் ஒரு நிலத்தடி கடல் ஆகியவற்றை பார்க்கிறார். அக்கதையில் வரும் Dinosaurs ஒரு மிகைப்படுத்தல் தான் என்றாலும், உண்மையில் அக்கதையில் வருவது போல பூமிக்கடியில் திரவ உலோகத்தால் ஆன ஒரு கடல் உள்ளது. அந்த இயக்கம் ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது. அது இல்லாமல் பூமியில் வாழ்க்கை சாத்தியம் இல்லை. இந்த காந்தப்புலம் சூரிய கதிர்வீச்சின் பெரும் பகுதியில் இருந்தும், வளிமண்டலத்தை அழிக்கவல்ல அணு துகள்களின் ஓட்டத்தில் இருந்தும் பூமியை பாதுகாக்கிறது. அங்கிருந்து இன்னும் உள்ளே போனால் பூமியின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான அதன் உள் மையத்திற்கு செல்வோம். 

    இது சூரியனின் மேற்பரப்பை போல சூடாகவும், சந்திரனை விட சற்று சிறியதான, திடமான இரும்பு மற்றும் நிக்கல் உலோகத்தாலான ஒரு அடர் கனமான பந்து. இதன் அழுத்தம் மிகவும் தீவிரமானது. இதனால் உலோகங்கள் படிகமாகி நமது கிரகத்தின் மையத்தில் ஒரு திடமான கோளத்தை உருவாக்குகிறது. நாம் செல்லவே முடியாத இடம் இது தான். இது ஒரு பயங்கரமான பகுதி. இதன் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். இதன் அழுத்தம் நமது வளிமண்டலத்தின் அழுத்தத்தை போன்று 3.5 மில்லியன் மடங்கு. இந்த படிகக் கோளம் நமக்கு ஒரு புதிராக இருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞானிகள் அதனை பூமியின் மேற்பரப்பில் இருந்து ஆய்வு செய்கிறார்கள். சில சமயங்களில் அதைப்பற்றி நாம் அறிந்து கொண்டு விட்டோம் என்று தோன்றினாலும், அது மிகவும் விசித்திரமானது, இன்னும் முழுதாக புரிந்து கொள்ளப்படாதது, அறிவியலுக்கும், கற்பனைக்கும் வரம்புகள் இல்லை என்பதே உண்மை.

மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்

Post a Comment

Previous Post Next Post
close