Head Ads

 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

Kalignar Mahalir Urimai Thittam 2023 

Kalignar Mahalir Urimai Thittam 2023
Kalignar Mahalir Urimai Thittam


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள

Click Here

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை குறித்து இப்போது பார்ப்போம்.

விண்ணப்பிக்கும் நடைமுறைகள்: 

  • 21 வயது நிரம்பிய பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதுவும் செப்டம்பர் 15 2002 முன்னர் பிறந்தவர்கள் மட்டும் தான் விண்ணபிக்க முடியும்.
  • உங்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டில் எந்த ரேஷன் கடை பெயர் உள்ளதோ அந்த ரேஷன் கடை முகாமில் மட்டுமே விண்ணபிக்க முடியும். வேறு எந்த ரேஷன் கடையிலும் விண்ணப்பிக்க முடியாது.
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

குடும்பத்தலைவி வரையறை:

  • குடும்ப அட்டையில் உள்ளவர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக கருதப்படுவார்கள்.
  • குடும்பத் தலைவியாக யார் குடும்பத்தில் உள்ளார்களோ அவர்கள் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முடியும்.
  • குடும்ப அட்டையில் குடும்பத் தலைவரின் புகைப்படம் (Photo) இருந்தாலும், அந்த குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார். எனவே ஸ்மார்ட் ரேஷன் கார்டில் யார் குடும்பத் தலைவாரக இருந்தாலும் அவர் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.
  • திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் இவர்கள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் இவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவார்கள்.
  • ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் அதில் யாராவது ஒருவரை தேர்வு செய்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க செய்யலாம்.

பொருளாதார தகுதிகள்:

        கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும்.

  1. ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு கீழ் வருமானம் பெறும் குடும்பமாக இருந்தால் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க முடியும்.
  2. ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க முடியும். ஐந்து ஏக்கருக்கு அதிகமாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு அதிகமாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க முடியாது.
  3. வருடத்திற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க முடியும். 3600 யூனிட்டிற்கும் அதிகாமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணபிக்க முடியும். 
        இந்த திட்டத்திற்கு நீங்கள் விண்ணபிக்க உங்களுடைய வருமானச் சான்றிதழ் அல்லது நில ஆவணங்கள் எதையும் விண்ணப்பத்துடன் இணைக்க தேவையில்லை.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்:

        கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் கீழ்காணும் எதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகிதி இல்லாதவர் ஆவர்.

  1. ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் குடும்பங்கள்.
  2.  ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெற்று வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள். 
  3. ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் பெற்று தொழில் வரி செலுத்துவோர்.
  4. மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியர்கள்.
  5. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர) அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
  6. சொந்தப் பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
  7. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
  8. ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
        மேற்கண்ட எதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.

விதிவிலக்குகள்:

          மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் தகுதியானவை. இவ்வகைபாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

   
Application Form

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப படிவம்
 Download

இந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்

   


மேலும் இந்த திட்டம் சம்பந்தாமான உங்கள் கருத்துகளை கீழே உள்ள Comment Box ல் தெரிவியுங்கள்.
மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்




Post a Comment

Previous Post Next Post
close