Head Ads

How to Apply Marriage Certificate Online in Tamilnadu 
திருமண பதிவை Online மூலமாக பதிவு செய்வது எப்படி?

apply marriage certificate online
apply marriage certificate online

  • Marriage Registration Online ல் பதிவு செய்வது எப்படி?
  • Marriage Registration Online மூலமாக பதிவு செய்ய என்ன மாதிரியான Documents தேவை?
  • Marriage Registration Online மூலமாக பதிவு செய்த பிறகு என்ன பண்ண வேண்டும்?
Apply marriage certificate online:

Google search ல் TNREGINET என்று Type செய்து முதலில் வரும் Link ஐ Click ஐ கிளிக் செய்யுங்கள். இந்த Website மூலமாக தான் Marriage Registration பண்ணுவது எப்படினு பார்க்க போகிறோம். இந்த Website லுள்ள பயனாளர் உள்நுளைவு என்னும் Option மூலமாக உங்களுடைய User ID மற்றும் Password கொடுத்து Login பண்ணிகங்க. இந்த Website ல் உங்களுக்கான Account ஐ Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here என்னும் Link ஐ Click செய்து உங்களுக்கான Account Creation பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

உங்களுடைய திருமண பதிவை Online மூலமாக பதிவு செய்யும் பொழுது தமிழில் பண்ண வேண்டாம் ஆங்கிலத்தில் பண்ணுங்க. நீங்கள் வெளிநாடு செல்லும் நபராக இருந்தால் உங்களுடைய திருமண சான்றிதழ் English
இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளுவார்கள். உங்களுக்கான Account Create செய்த பிறகு Login பன்னிங்கண்ணா பதிவு செய்தல் என்னும் Option ல் திருமண பதிவு என்றுள்ள Option ஐ தேர்ந்தெடுங்கள். இதில் நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பே நீங்கள் என்னென்ன மாதிரியான Documents சமர்பிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள்.

Apply marriage certificate online தேவையான ஆவணங்கள்:

திருமண ஆதாரத்திற்கு

  • திருமண அழைப்பிதழ் (அல்லது)
  • கோவில் / தேவாலய திருமண ரசீது (அல்லது)
  • திருமணம் நடைபெற்றதற்கான ஏதேனும் ஆதாரம்.

முகவரி சான்றிற்கு

  • குடும்ப அட்டை (Smart Ration Card) (அல்லது)
  • ஓட்டுநர் உரிமம் (Driving License) (அல்லது)
  • ஆதார் அட்டை (Aadhaar Card) (அல்லது)
  • கடவுச்சீட்டு (Passport)
  • வங்கி கணக்கு புத்தகம்

வயது சான்றுக்கு

  • பிறப்பு சான்று (Birth Certificate) (அல்லது)
  • ஆதார் அட்டை (Aadhaar Card) (அல்லது)
  • கடவுச்சீட்டு (Passport)
இந்த திருமண பதிவை திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் பதிவு செய்து கொள்ள முடியும். 90 முதல் 150 நாட்களுக்குள் என்றால் அபராதம் செலுத்தி பதிவு செய்து கொள்ள முடியும். 150 நாட்களுக்கு மேல் என்றால் திருமணம் பதிவு செய்ய இயலாது. பதிவு செய்தலுக்கு தொடர்க என்னும் Option Click செய்ததும் அடுத்த பக்கம் தோன்றும். இதில் முதலில் மணமகனின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

மணமகனின் விவரங்கள்:

  • திருமண நாள்
  • கணவரின் முழுப்பெயர், பிறந்த தேதி, திருமணத்தின்போது வயது, மதம், சாதி, திருமணத்தின் போது அவர் திருமானமானவராக இருந்தாரா (அ) மணமாகாதவரா (அ) மனைவியை இழந்தவரா (அ) விவாகரத்து ஆனவரா என்பதையும், என்ன தொழில் செய்கிறார் என்பதையும், வெளிநாடு வாழ் இந்தியரா? என்பதையும், வெளிநாடு வாழ் இந்தியர் என்றால் அவருடைய கடவுச்சீட்டு எண்ணையும் (Passport No), முழு முகவரியையும், குறிப்பிட வேண்டும்.
  • கணவரின் தந்தை மற்றும் தாயின் விவரங்கள்:
  1. பெயர்
  2. உயிருடன் உள்ளாரா இல்லையா?
  3. வயது, மதம், சாதி, தொழில், முகவரி

மனைவியின் விவரங்கள்:

  • மனைவியின் முழுப்பெயர், பிறந்த தேதி, திருமணத்தின்போது வயது, மதம், சாதி, திருமணத்தின் போது அவர் திருமானமானவராக இருந்தாரா (அ) மணமாகாதவரா (அ) கணவனை இழந்தவரா (அ) விவாகரத்து ஆனவரா என்பதையும், என்ன தொழில் செய்கிறார் என்பதையும், வெளிநாடு வாழ் இந்தியரா? என்பதையும், வெளிநாடு வாழ் இந்தியர் என்றால் அவருடைய கடவுச்சீட்டு எண்ணையும் (Passport No), முழு முகவரியையும், குறிப்பிட வேண்டும்.
  • மணிவியின் தந்தை மற்றும் தாயின் விவரங்கள்:
  1. பெயர்
  2. உயிருடன் உள்ளாரா இல்லையா?
  3. வயது, மதம், சாதி, தொழில், முகவரி

    சாட்சியின் விவரங்கள்:

    கண்டிப்பாக மூன்று சாட்சிகளின் விவரங்கள் கொடுக்க வேண்டும். யாரை சாட்சியாளராக நியமிக்கிறீர்களோ அவர்களை பதிவு அலுவலகத்துக்கு கண்டிப்பாக அழைத்து செல்ல வேண்டும். மேலும் அவர்களுடைய ஆதார் அட்டையும் கொண்டு போக வேண்டும். மேலும் உங்களுடைய முகவரி சான்று, வயது சான்று, திருமணச் சான்று, புகைப்படம்.

    மூன்று ஆவணங்கள் கணவருடையதும், மூன்று ஆவணங்கள் மனைவியினுடையதும் கண்டிப்பாக விண்ணபிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும். கடைசியாக நீங்கள் திருமண பதிவு செய்ய எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்னும் தகவல் தோன்றும். அதாவது பதிவு கட்டணம், நகல் கட்டணம், குறுந்தகடு பெறுவதற்கான கட்டணம், அதை நீங்கள் Online மூலமாக Payment பண்ணிக்க முடியும். 

    Payment பண்ணிட்ட பிறகு உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு வரும் அதை Print எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு விண்ணப்பங்களை தேடுக என்னும் Option மூலமாக உங்களுடைய விண்ணப்பத்தை தெரிவு செய்து அதற்கு Token Create பண்ண வேண்டும். அதற்கு அடையாள வில்லை செயல்பாட்டினை துவக்குக என்னும் Option ஐ Click செய்து உங்களுக்கு அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை தேர்வு செய்யுங்கள் அடுத்து எந்த தேதியில்  சார்பதிவாளர் அலுவலகம் போக போகிறீர்களோ அந்த தேதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த தேதியில் சென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் பார்த்து வந்த மூன்றாவது நாள் உங்களுக்கான திருமண சான்றிதழ் சம்மந்தபட்ட அலுவலகத்தின் மூலம் பெற முடியும்.

    Apply marriage certificate online Doubts திருமண பதிவு குறித்த சந்தேகங்கள்:

    • கோவிலில் திருமணம் ஆன சான்றிதழ் வைத்து கலப்பு திருமணத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.
    • சாட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் மணமகனின் தாய் தந்தை, மணமகளின் தாய் அல்லது தந்தை ஆக மொத்தம் மூன்று நபர்கள் சாட்சிகள் ஆவர். ரத்த சம்மந்தபட்ட உறவினர்கள் தான் சாட்சிகளாக முடியும்.
    • Final Application Green Sheet or A4 Sheet ல Print Out எடுக்கணுமா என்றால் Normal A4 Sheet லயே Printout எடுத்துக்கொள்ளலாம்.
    • Marriage Registration செய்வதற்கு கணவன் மனைவி மற்றும் சாட்சிகள் கண்டிப்பாக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு கணவன் மனைவி இருவரையும் புகைப்படம் எடுப்பார்கள்.
    • நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அங்கு உள்ள Net Centre ல் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அதே போன்று அங்கு உங்களுக்கு அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை தேர்வு செய்து Document Verification செய்து கொள்ள முடியும்.
    • Major differences between Hindu Marriage Act & TamilNadu Marriage Act. For Goverment scheme like inter caste and some other schemes or only applicable in Hindu marriage act. if you want both certificate's is there wat to apply
    • Form fill பண்ணிட்ட பிறகு தான் Token create பண்ண முடியும். அதற்கு முன்னாடி Token create பண்ண முடியாது.
    • மணமகன் தன்னுடைய ஆவண நகல்களில் அவருடைய Signature ஐயும், மணமகள் அவருடைய ஆவண நகல்களில் அவருடைய Signature ஐயும், போட வேண்டும். Gazette Officer கிட்ட Signature வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
    • கணவரோ அல்லது மனைவியோ வெளிநாட்டில் இருந்து இருவரில் ஒருவர் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டில் உள்ள நபர் இங்கு வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் சேர்ந்து விண்ணப்பித்தால் மட்டுமே Marriage Registration Certificate ஐ பெற முடியும்.
    • Marriage Registration Certificate ஐ பெற VAO விடம் கையெழுத்தை பெற வேண்டிய அவசியமில்லை.
    • Online Application போட ஆரம்பிக்கும் போதே Website top corner ல் உள்ள A+ Option ஐ கிளிக் செய்து மொழியை ஆங்கிலத்தில் மாற்றிகொண்டு விண்ணப்பியுங்கள்.
    • நீங்கள் விண்ணப்பிக்கும் போது தவறுதலான தகவல் கொடுத்திருந்தால் அதை நீங்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் போது அங்கு முன்கூட்டியே தேர்விக்க வேண்டும். அல்லது மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
    • முதல் திருமண சான்றிதழ் VAO விடம் வாங்கியிருந்தால் போதும். Marriage Hall receipt இல்லையென்றாலும் Problem இல்லை. ஒருவேளை Marriage Hall receipt இருந்தால் VAO Sign தேவையில்லை.
    • உங்களுடைய திருமண புகைபடத்தை வைத்து விண்ணப்பிக்க முடியுமா?  என்றால் கண்டிப்பாக விண்ணப்பிக்க முடியாது. அதற்கு மாற்று வழி யாராவது ஒரு Advocate மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • Inter Caste Marriage (கலப்பு திருமணம் ) செய்து கொண்டவர்கள் Hindu Act Apply பண்ணுங்க அப்போது தான் உங்களுக்கான அரசாங்க சலுகைகள் கிடைக்கும்.

    மேலும் பல தகவல்களை வீடியோவாக காண கீழே கொடுக்கபட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

    CLICK HERE

    Post a Comment

    Previous Post Next Post
    close