Yercaud History in Tamil

Yercaud History in Tamil ஏற்காடு வரலாறு ஏற்காடு தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு நகரம் ஆகும். ஏற்காடு என்ற பெயர் ஏரி + காடு = ஏரிக்காடு என்பதிலிருந்து மருவி ஏற்காடு என்ற பெயர் வந்தது. 19 ஆம் நூற்றாண்டு காலத்தின் துவக்கத்தில் ஏற்காடு கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் இங்கு காபி தோட்டங்கள் அமைக்கப்பட்டது. ஏற்காட்டில் முதல் வீடு 1840 ல் கட்டப்பட்டாலும். சாலைகளானது 20 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் தான் அமைக்கப்பட்டன. இங்கு உள்ள குளிர்ந்த காலநிலை கிறிஸ்துவ மிஷினரிகளுக்கு மிகவும் பிடித்து போகவே அவர்கள் Sacred Heart Convent, Montfort School, Don Bosco Institute, Holy Cross Novitiate House போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. ஏற்காடு 14.10.1997 வரை சூரிய தாலுகாவாக இருந்தது. இது 15.10.1997 முதல் முழு அளவிலான தாலுகாவாக மாறியது. 67 வருவாய் கிராமங்கள் உள்ளது. ஏற்காடானது கடல் மட்டத்திலிரு...